விராட் கோலி
விராட் கோலிpt web

விராட் கோலி: The Updated Version

குறிப்பாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விராட்டின் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்துள்ளது. அதோடு, இடது கை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை 79% அட்டாக் செய்ய முயற்சித்துள்ளார்.
Published on

18 வருட காத்திருப்பு கோப்பையாக அறுவடை

18 வருட காத்திருப்பை கோப்பையாக அறுவடை செய்துள்ளது ஆர்சிபி அணி.. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு சமமான அதேசமயத்தில் பலமான அணியாக ஐபிஎல் 2025க்குள் நுழைந்தது. ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியிலும் ஆர்சிபி அணியினர் மிகச்சிறப்பாக ஆடி வந்தனர். விளையாடியுள்ள 17 போட்டிகளில் 9 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதினை வாங்கியுள்ளது மேலும் சிறப்பு. விளைவு 18 வருடங்களில் முதன்முறையாக கோப்பையை கைகளில் ஏந்தியுள்ளனர்.

கோப்பை வென்ற ஆர்சிபி
கோப்பை வென்ற ஆர்சிபி

கோப்பை வெல்ல அனைத்து வீரர்களின் செயல்பாடுகளும் மிக முக்கியமானதுதான் என்பதைத் தாண்டி, விராட் கோலியின் செயல்பாடு மிக முக்கியமானது. இந்த வருடம் ஆர்சிபியின் திட்டம் தெளிவாக இருந்தது. 20 ஓவர்களும் விராட்கோலி களத்தில் நிற்பார். அவருடன் ஆடும் பேட்ஸ்மேன் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்க்க வேண்டும். ஒருவர் சென்றால் மற்றொருவர்.. இந்த டெக்னிக் ஆர்சிபிக்கு பெருமளவில் கைகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகவே விராட் மற்றும் பில் சால்ட் என இருவரும் அதிரடியாக ஆடி கிட்டத்தட்ட 664 ரன்களைக் குவித்துள்ளனர். அவர்களது பார்ட்னர்ஷிப் சராசரி 47.42 ஆக இருந்துள்ளது.

விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர் 2.0 : மூர்க்கம், யுக்தி, அனுபவம், தன்னம்பிக்கை..

The Updated Version

விராட் கோலியை மட்டும் எடுத்துக்கொண்டால், 15 போட்டிகளில் 657 ரன்களைக் குவித்துள்ளார். அதில், 8 அரைசதங்களும் அடக்கம். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் விராட் கோலி அதிகமாக ரன்களைக் குவித்துவிடுவார் என்றாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கும். 18 வருட ஐபிஎல் தொடர்களில் அவர் 140+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியது 4 சீசன்களில் மட்டும்தான். 2010, 2016, 2024, 2025.

இதற்கு மிக முக்கிய காரணம், அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் வெளியேறிவிட்டால், இன்னிங்ஸ் முழுவதும் ஆடும் அழுத்தம் விராட் கோலியின் மேல் விழும்.. எனவே.. குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார் என்ற விமர்சனம் முற்றிலும் நியாயமற்றது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், கடந்த இரு சீசன்களில் விராட் கோலியின் அணுகுமுறையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

விராட் கோலி
விராட் கோலி

கடந்த இரு சீசன்களாக பவர்ப்ளேவில் அதிவேகமாக ரன்களை அடிக்க முயன்றுள்ளார் விராட் கோலி. கடந்த ஆண்டு பவர்ப்ளேவில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 161.47 என்றால், இந்த ஆண்டு 153.52. 2016 ஆம் ஆண்டு முதல் கடந்த இரு சீசன்களாக மட்டுமே 150க்கு மேல் இருக்கிறது அவரது ஸ்ட்ரைக் ரேட். இதுதொடர்பாக பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, “இரு சீசன்களில் விராட் கோலியின் பேட்டிங்கில் நீங்கள் வித்தியாசங்களைக் காணலாம். குறிப்பாக 150SR மற்றும் 146SR. வெளிப்படையாக, அவர் பேட்டிங் செய்யும் விதத்தில் ஒரு தீவிர மாற்றம் உள்ளது. அவரால் தற்போது ஸ்லாக் ஸ்வீப்களை விளையாட முடியும். ஸ்ட்ம்புகளுக்கு வரும் லெக் ஸ்பின்னர்களின் பந்துகளைக் கூட கால்களை நகத்தி ஆடுகிறார். எனவே அவர் பேட்டிங்கில் மேம்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி
The most Underrated... க்ருணால் எனும் சம்பவக்காரன்.. சொல்லிவைத்து சாதித்தது எப்படி?

எண்கள் சொல்லும் கதை

சுழற்பந்து வீச்சினைக் கொண்டுவந்து விராட்டின் வேகத்தினைக் கட்டுப்படுத்தியக் காலம் இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சுழலுக்கு எதிராக விராட் கோலியின் எண்கள் அத்தனை சிறப்பானதாக இல்லை. லெக் ஸ்பின்னுக்கு எதிராக அவரது சராசரி 45 ஆக இருக்கும் நிலையில் ஸ்ட்ரைக் ரேட் 119.89 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி 15 முறை ஆட்டமிழந்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவரது சராசரி 67.60 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 116.35 ஆகவும் இருக்கிறது. இதில், 10 முறை ஆட்டமிழந்துள்ளார்.

இதன் காரணமாக மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப தானும் மாறிக்கொள்ள வேண்டிய கட்டாயம் விராட்டுக்கு எழுந்தது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விராட்டின் செயல்பாடு குறித்து தொடரின் ஆரம்பத்தில் பேசிய ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் மெண்டாருமான தினேஷ் கார்த்திக், “சமீப காலங்களில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

குறிப்பாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விராட்டின் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்துள்ளது. அதோடு, இடது கை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை 79% அட்டாக் செய்ய முயற்சித்துள்ளார். முன்னதாக, விராட்டின் டி20 கெரியரில் இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட்டின் சராசரி 64.78.. 64 எனும்போது பெரிய எண்ணாகத்தான் தெரியும். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 72.34. அத்துனை சீக்கிரமாக இடது கை சுழற்பந்துக்கு அவுட் ஆவதில்லை என்றாலும், ஸ்ட்ரைக் ரேட் மிக முக்கியமானதுதானே? அதை இந்த சீசனில் அதிகரித்துள்ளார். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இடதுகை சுழலுக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு விராட்டின் சராசரி 119.79, 2024ல் 131.19. தற்போதோ 146.15..

விராட் கோலி
இது பழைய ஆர்சிபி இல்லை! செயலுக்கேற்ற எதிர்வினை உண்டென்றால் நிச்சயம் ’ஈ சாலா கப் நம்தே’!

இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம் ஷாட் செலக்ஸனில் விராட் பல்வேறு மாறுபாடுகளை செய்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.. மிகவும் முக்கியமாக அதிகமான ஷாட்கள் ஆடுவதை விராட் குறைத்துள்ளதாக ஒரு பார்வையும் இருக்கிறது. எது எப்படியோ கிங் புதுப்புது சாதனைகளைப் படைத்தால் ஐபிஎல்லில் கொண்டாட்டங்களுக்கா பஞ்சமிருக்கப்போகிறது.

விராட் கோலி
போர்க்கதை ஆயிரம்.. இவன் பேரின்றி முடியாதே! ஸ்ரேயாஷ் தலைமையும்.. பஞ்சாப் எழுச்சியும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com