“சென்னை அணிக்கு எதிராக விளையாடுவதுதான்...” - விராட் கோலி சொன்ன சுவாரஸ்யம்!

“ஐபிஎல்லில் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவதே எனக்கு பிடிக்கும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரருமான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தோனி - விராட் கோலி
தோனி - விராட் கோலிfile image

ஆண்டுகள் பல ஓடியும், ஐபிஎல்லில் இன்னும் கோப்பையை உச்சி முகராத ஓர் அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. திறமையான வீரர்களை அவ்வணி கொண்டிருந்தாலும் அதிர்ஷ்டம் இன்னும் அவர்களுக்கு கைகூடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேநேரத்தில், ஐபிஎல்லில் இதுவரை முறியடிக்கப்படாத அளவுக்கு சில சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது அவ்வணி.

தோனி - விராட் கோலி
ஒருமுறைகூட IPL கோப்பையை உச்சிமுகராத சோகம்.. ஆனாலும், RCB வசம் அசைக்க முடியாத 8 சாதனைகள்!

அவ்வணி வீரரும் ’ரன் மெஷின்’ என அழைக்கப்படுபவருமான விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன்ஷிப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பெங்களூரு அணியின் கேப்டன்ஷிப்பிலிருந்தும் விலகினார். எதிர்பாரா சூழல்களின்போது மட்டுமே, பெங்களூரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்கிறார் (பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம்போல). மற்றபடி பெங்களூரு அணியின் சாதாரண வீரராக விளையாடி வருகிறார் கோலி.

இந்த நிலையில் விராட் கோலி, ஐபிஎல் குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களை சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் ஐபிஎல்லின் சிறந்த வீரர்களாக தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி. டி.வில்லியர்ஸையும், இலங்கை வீரர் மலிங்கா பெயரையும் தெரிவித்துள்ளார் கோலி. டி.வில்லியர்ஸ் சிறந்த ஃபினிஷராகவும், மலிங்கா சிறந்த டெத் பவுலராகவும் விளங்கி பல போட்டிகளை வெற்றிபெற வைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இதில் டி.வில்லியர்ஸ் பெங்களூரு அணியிலும், மலிங்கா மும்பை அணியிலும் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.வில்லியர்ஸ், கோலி
டி.வில்லியர்ஸ், கோலிfile image

அதுபோல் சிறந்த ஆல்ரவுண்டராக ஷேன் வாட்சனையும், சிறந்த சுழற்பந்துவீச்சாளராக ரஷித்கானையும் தேர்வு செய்துள்ளார் கோலி. ஐபிஎல்லில், அதிகம் பாராட்டப்படாத வீரராக அம்பத்தி ராயுடுவை குறிப்பிட்டுள்ளார். டி20யில் ’புல் ஷாட்’ அடிப்பதே தனக்குப் பிடிக்கும் எனத் தெரிவித்திருக்கும் விராட் கோலி, ஐபிஎல்லில் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவதே அதிகம் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், சென்னை அணியில்தான் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என அதற்குக் காரணமும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ’சென்னை அணி கேப்டன் தோனியிடமிருந்து நீங்கள் பெறுவதாக இருந்தால் எதைப் பெறுவீர்கள்’ என்ற கேள்விக்கு, ’அவரிடமிருந்து தொடை, கால் சதைகள் மற்றும் அவரின் அமைதி ஆகியவற்றை கேட்பேன்’ எனத் தெரிவித்துள்ளார். தோனி, விரைவாக ஓடக்கூடியவர் என்பதால்தான் இந்தப் பதிலை கோலி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தோனி - கோலி
தோனி - கோலிfile image

கோலியின் இந்தக் கருத்துகளை தொடர்ந்து, தோனி அமைதியாக இருக்கக்கூடியவர் என்பதால்தான் விராட் கோலி அவரிடமிருந்து பலவற்றை ‘கேட்ச்’ செய்துள்ளார் என தோனி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், ’உங்களுடைய வாழ்க்கையை படமாக எடுக்கும்பட்சத்தில், அதில் உங்களுக்கான கதாபாத்திரமாக யாரைத் தேர்வு செய்வீர்கள்’ என்ற கேள்விக்குப் பதிலளித்த கோலி, ’அதற்கு என்னையே தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

கோலி தனது இந்த சுவாரஸ்ய பேட்டியில், சென்னை அணி குறித்தே பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, தோனி மீது விராட் கோலி நல்ல மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பவர் என்பது, கடந்த போட்டியில் வெட்டவெளிச்சமாகவே தெரிந்தது. அந்தப் போட்டியின் முடிவில் வழக்கம்போல இரு அணி வீரர்களும் கைகொடுத்துக் கொண்டபோது தோனியை நேரடியாக சந்தித்த விராட் கோலி, கைகொடுத்து கட்டிப்பிடித்து சிரித்த முகத்துடன் மனம்விட்டுப் பேசினார்.

கோலி, தோனி
கோலி, தோனிfile image

இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு நட்சத்திரங்களும், மிகுந்த மகிழ்ச்சியுடன் மனம் விட்டுப் பேசியது இரு அணிகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது எனலாம். டெல்லி போட்டியின்போது முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோர் சந்தித்துக் கொள்ளாதது பேசுபொருளான நிலையில், கோலி - தோனி இடையேயான இந்த மரியாதையும் அன்பும் இரு அணி ரசிகர்களையும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com