tunisia player ons jabeur announces break from tennis
ஓன்ஸ் ஜபியர்எக்ஸ் தளம்

டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்ற ’மகிழ்ச்சியின் அமைச்சர்’.. யார் இந்த ஓன்ஸ் ஜபியர்?

3 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாளரான துனீசிய வீராங்கனை ஓன்ஸ் ஜபியர், டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Published on

பிரபல துனீசிய நாட்டு டென்னிஸ் வீராங்கனையாக வலம் வருபவர் ஓன்ஸ் ஜபேர். இவர், சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில், 3 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாளரான ஓன்ஸ் ஜபேர், மனநலனில் கவனம் செலுத்துவதற்காக டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓன்ஸ் ஜபேர், “கடந்த 2 ஆண்டுகளாக நான் என்னை மிகவும் கடினமாக உந்தித் தள்ளி வருகிறேன். காயங்களை எதிர்த்துப் போராடுகிறேன். பல சவால்களை எதிர்கொள்கிறேன். சிறிது காலமாக மைதானத்தில் நான் மகிழ்ச்சியாக உணரவில்லை. டென்னிஸ் மிகவும் அழகான விளையாட்டு. என்னைப் புரிந்துகொண்டதற்கு என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவையும் அன்பையும் என்னுடன் சுமந்து செல்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

tunisia player ons jabeur announces break from tennis
Headlines: திருப்பரங்குன்றம் குடமுழுக்கு டு விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை வென்ற சின்னர்!

யார் இந்த ஓன்ஸ் ஜபியர்?

டென்னிஸ் வீராங்கனையான ஓன்ஸ் ஜபியர், ஆகஸ்ட் 28, 1994 அன்று துனிசியாவின் மொனாஸ்டிருக்கு அருகில் உள்ள க்சார் ஹெல்லாலில் பிறந்தார். துனிசியரான இவருக்கு ஹாடெம் மற்றும் மார்வென் என்ற இரண்டு மூத்த சகோதரர்களும், யாஸ்மின் என்ற ஒரு சகோதரியும் உள்ளனர். ஜபீரின் தாயார் சமிரா தான், மூன்று வயதில் அவருடைய டென்னிஸைக் கனவை உலகுக்குக் கொண்டுவந்தார். பிப்ரவரி 2020 முதல், முன்னாள் துனிசிய வீராங்கனையான இசாம் ஜெல்லாலி, ஒன்ஸ் ஜபியருக்கு பயிற்சி அளித்து வருகிறார். முன்னதாக, அவர் பிரெஞ்சுக்காரர் பெர்ட்ராண்ட் பெரெட்டிடம் பயிற்சி பெற்றார். அவருடன் அவர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். உலகின் சிறந்த பெண் வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்படும் அவர், 2021இல் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறினார்.

tunisia player ons jabeur announces break from tennis
tunisia player ons jabeur x page

2022இல் தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்து அசத்தினார். வலது கைப் பழக்கம் கொண்டஜபீர், தனது மாறுபட்ட டிராப் ஷாட்கள் மூலம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் நேசிக்கப்படுகிறார். மேலும் வரலாற்றில் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள அரபு வீராங்கனை ஆவார். தனது அன்பான மனநிலையாலும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுடன் இணையும் திறனாலும் அறியப்பட்ட ஓன்ஸ் ஜபியர், ’மகிழ்ச்சியின் அமைச்சர்’ என்று அழைக்கப்படுகிறார். துனிசியாவில் உள்ள ரசிகர்களால் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.

tunisia player ons jabeur announces break from tennis
ஹரியானா | டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை! இதுக்கெல்லாமா உயிரை எடுப்பது?

இரண்டு முறை விம்பிள்டனிலும் ஒருமுறை அமெரிக்க ஓபனிலும் என அவர் மூன்று கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளை எட்டியவர் ஆவார். தோள்பட்டை காயம் காரணமாக, கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க ஓபனைத் தவறவிட்டார். எனினும், நடப்பாண்டில் அவர் தொடக்கத்தில் களமிறங்கினார். ஓன்ஸ் ஜபியர் தனது வாழ்க்கையில் இதுவரை ஐந்து WTA ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு, 'திஸ் இஸ் மீ' என்கிற பெயரில் அவருடைய ஆவணப் படம் ஒன்று வெளியானது. ஓன்ஸ் ஜபியர் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக உள்ளார். ஓன்ஸ் ஜபியர், இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக உள்ளார். ஆகஸ்ட் 23, 2024 நிலவரப்படி, அவரை 1.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ட்விட்டரில், அவரை 404,500 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். முன்னாள் ரஷ்ய-துனிசிய வாள்வீச்சு வீரரான கரீம் கமௌனை, ஓன்ஸ் ஜபியர் அக்டோபர் 2015இல் திருமணம் செய்துகொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com