Headlines: திருப்பரங்குன்றம் குடமுழுக்கு டு விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை வென்ற சின்னர்!
* முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், இரண்டாம்கட்ட சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஜம்மு காஷ்மீரில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களின் கல்லறைக்கு செல்லவிடாமல் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய படையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
* அசாம் மாநிலம் கோவல்பாரா மாவட்டத்தில் உள்ள பைக்கான் வனப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளை இடித்து அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை பாஜக தலைமையிலான மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
* ஒடிசா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு ஆசிரியர் பாலியல் வன்கொடுமை அளித்ததாக புகார் அளித்திருந்த நிலையில் தீக்குளித்துள்ளார்.
* ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு 11 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
* இந்தியாவில் முதன்முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் 3ஆம் கட்ட சோதனை தொடங்கப்பட உள்ளது.
* ஹிமாச்சல் பிரதேச கனமழை பாதிப்பு தொடர்பாக, எம்.பி கங்கனா ரணாவத்தின் பதிலும், அதனை அவர் கூறிய விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் ஸ்பெயினின் அல்காரசை வீழ்த்திய, இத்தாலியின் 'நம்பர் 1' வீரர் சின்னர், சாம்பியன் பட்டம் வென்றார்.