T20 WC IND vs PAK : பேட்டிங்கில் தடுமாற்றம்... பந்துவீச்சில் அசத்தல்; இந்திய அணி த்ரில் வெற்றி!

ஆடவர் டி20 உலகக்கோப்பையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் குரூப் Aவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நியூயார்க்கில் உள்ள Nassau County கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
விராட் அவுட்
விராட் அவுட்pt web

தடுமாறும் இந்தியா

துபே, ரிஷப் பந்த், ஜடேஜா, பாண்டியா, பும்ரா என வரிசையாக வெளியேறிய இந்திய பேட்ஸ்மேன்கள்.

ரிஷப் பந்த் 42 (31),

சூர்யகுமார் யாதவ் 7 (8),

துபே 3(9),

ஜடேஜா 0 (1),

பாண்டியா 7 (12),

பும்ரா 0(1)

சூர்யகுமார் யாதவ் அவுட்

ஹாரிஸ் ராஃப் வீசிய 12 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் சூர்யகுமார் யாதவ் அவுட்..

சூர்யகுமார் யாதவ் 7(8) [4s-1]

துபே களத்திற்கு வந்தனர்.

அக்சர் அவுட்

நிலையாக ஆடிய அக்சர் படேல் நசீம் ஷா வீசிய 8 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் போல்ட் ஆனார்.

18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் அக்சர்..

சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்தார்.

இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆட்டத்தை தொடர்ந்து வந்தது.

விராட் அவுட்
கொனிஃபா கால்பந்து உலகக் கோப்பை | தமிழீழ மகளிர் அணி இறுதிப் போட்டியில் போராடி தோல்வி!

ரோகித் அவுட்

விராட் கோலி வெளியேறிய சில நொடிகளில் ரோகித் சர்மாவும் வெளியேறினார். ஷாகீன் அப்ரிடி வீசிய மூன்றாவது ஓவரின் 4 ஆவது பந்தில் ஹாரிஸ் ராஃபிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரோகித் சர்மா 13(12) [4s-1 6s-1]

ஆட்டமிழந்து வெளியேறும் விராட்
ஆட்டமிழந்து வெளியேறும் விராட்

இதனையடுத்து அக்சர் படேல் களத்திற்கு வந்தார். இந்திய அணி மூன்று ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 20 எடுத்து ஆடி வந்தது.

விராட் கோலி அவுட்

நசீம் ஷா வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் விராட் உஷ்மான் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி  4(3) [4s-1]

இந்திய அணி 12 ரன்களில் ஆடிவந்தது. இதனையடுத்து ரிஷப் களத்திற்கு வந்தார்.

விராட் அவுட்
39 ரன்னில் ஆல் அவுட் - டி20 உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த உகாண்டா அணி; வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!

ஆடும் 11ல் யார்? யார்?

India (Playing XI) : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

Pakistan (Playing XI) : முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), உஸ்மான் கான், ஃபகார் ஜமான், ஷதாப் கான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது அமீர்

மாஸ்டர் பிளாஸ்டர்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பையை காண சச்சின் டெண்டுல்கர் வருகை!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பையை காண சச்சின் டெண்டுல்கர் வருகை!

இந்தியா பேட்டிங்

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா பேட்டிங்!

டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இந்தியா பேட்டிங்! டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ரிஷப்புக்குப் பின், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், அமிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி நிதனமாக ஆட்டத்தை தொடங்கியது.

விராட் அவுட்
T20 WC IND vs PAK : தடுமாறும் இந்தியா.. விராட், ரோகித், அக்சர் அவுட்..

ஆனாலும் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதி கட்டத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com