சூர்யகுமார் - திலக் வர்மா - சஞ்சு சாம்சன்
சூர்யகுமார் - திலக் வர்மா - சஞ்சு சாம்சன்x

4வது டி20 | ”வந்தார்கள் சென்றார்கள்” 'W.W.0.0.0.W..' ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தா மற்றும் சென்னை ஆடுகளங்களில் நடைபெற்றன. இரண்டு போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்துweb

அதனைத்தொடர்ந்து ராஜ்கோட்டியில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரை 2-1 என மாற்றி கம்பேக் கொடுத்தது.

இந்நிலையில் 4வது டி20 போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், தொடரை சமன்செய்யும் முயற்சியில் இங்கிலாந்தும் களமிறங்குகின்றன.

சூர்யகுமார் - திலக் வர்மா - சஞ்சு சாம்சன்
பும்ரா விளையாட மாட்டார்.. இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி கனவு அவ்ளோ தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!

அணிக்கு திரும்பிய ரிங்கு சிங்,ஷிவம் துபே..

3வது டி20 போட்டியில் இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக இந்திய மிடில் ஆர்டர் வீரர்களால் ரன்களை அடிக்க முடியாமல் போனது. குறிப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர் அடில் ரசீத் 4 ஓவரில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இன்னிங்ஸை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

இந்நிலையில் மிடில் ஆர்டரில் அடில் ரசீத்தை கவுண்டர் அட்டாக் செய்யும் வகையில், சிக்சர்களை விளாசும் அதிரடி வீரரான ஷிவம் துபேவும், சிறந்த ஃபினிசராக பார்க்கப்படும் ரிங்கு சிங் இருவரும் அணிக்குள் எடுத்துவரப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் காயத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய முகமது ஷமி, மீண்டும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மீண்டும் அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வந்துள்ளார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ள நிலையில், இந்தியா பேட்டிங் செய்யவுள்ளது.

4வது டி20 இந்திய லெவன்: சஞ்சு சாம்சன்(w), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(c), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி

சூர்யகுமார் - திலக் வர்மா - சஞ்சு சாம்சன்
’மீண்டும் பைனலில் இந்தியா vs தென்னாப்ரிக்கா..’ யு19 டி20 உலகக்கோப்பையில் IND மகளிர் அணி அசத்தல்!

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ஆர்ச்சருக்கு எதிராக சிக்சர் பவுண்டரி என விளாசிய அபிஷேக் சர்மா மிரட்டினார்.

ஆனால் இரண்டாவது ஓவரை வீசவந்த சாகிப் மஹ்மூத், ஒரே ஓவரில் சஞ்சு சாம்சன் 1, திலக் வர்மா 0, சூர்யகுமார் 0 என மூன்றுவீரர்களையும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார். சஞ்சு சாம்சன் கடந்த 3 போட்டிகளிலும் புல் ஷாட் அடிக்க சென்று அவுட்டானது போலவே, 4வது டி20 போட்டியிலும் வெளியேறினார்.

இந்தியா 5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்களுடன் விளையாடிவருகிறது. அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் விளையாடிவருகின்றனர்.

சூர்யகுமார் - திலக் வர்மா - சஞ்சு சாம்சன்
‘புத்திசாலி கேப்டன்’ என தோனிக்கு இணையாக மற்றொரு வீரரை பெயரிட்ட அஸ்வின்; கடினமான பேட்ஸ்மேன் இவர்தான்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com