MI விட்டு வெளியேறும் எண்ணத்தில் ரோகித்; Hardik-க்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை! தொடரும் பிரச்னை

கேப்டன்சி மாற்றத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவரும் நிலையில், மீண்டும் ரோகித் சர்மாவிடமே கேப்டன்சி செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rohit - Hardik
Rohit - HardikPT

2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே ‘ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்டியா’ என்ற மூன்று பெயர்கள்தான் பெருமளவில் தலைப்புச் செய்திகளில் இருந்துவருகின்றன. 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு, 2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அதிலிருந்துதான் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா பெயர்களுக்கு இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மாX

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியது, ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணம் மற்றும் 5 கோப்பை வென்ற ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அலைக்கழித்தது என பல விஷயங்களால் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து சத்தமிட்டு வரும் ரசிகர்கள், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நாய் ஒன்று மைதானத்திற்குள் வர அதையும் “ஹர்திக் ஹர்திக்” என சத்தமிட்டு வெறுப்பின் உச்சிக்கே சென்றனர்.

அதுமட்டுமல்லாமல் மும்பை வான்கடே மைதானத்திலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது, “ரோஹித் ரோஹித்” என கத்தி ஆரவாரம் செய்த ரசிகர்கள் டாஸ் போடும் போது பாண்டியாவை பேசவிடாமல் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது களத்தில் இருந்த முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்” என ரசிகர்களை எச்சரிக்கை செய்தார். இருப்பினும் மும்பை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் ரசிகர்கள் அதிருப்தியுடன் தான் இருந்துவருகின்றனர்.

Rohit - Hardik
ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்.. 12 முறை எழுந்த எதிர்ப்பு குரல்! MI-ஐ வீழ்த்தி GT அசத்தல் வெற்றி!

டிரேடிங் வரை சென்று திரும்பிவந்த ரோகித் சர்மா!

ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான யூ-டியூப் உரையாடலில் பேசியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பகுப்பாய்வாளரான பிரசன்னா அகோரம், “ப்ளூ சட்டை பேட்ஸ்மேன் மற்றும் ப்ளூ சட்டை பவுலர் இருவரும் அடுத்த ஐபிஎல் தொடரில் மஞ்சள் சட்டை அல்லது சிகப்பு சட்டை அணிக்கு வருவார்கள். இந்த தொடரிலேயே அதற்கான வர்த்தகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, ஆனால் அது கடைசி நேரத்தில் வீரர்கள் விலகியதால் கைவிடப்பட்டது. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் ப்ளூ சட்டை பேட்ஸ்மேன் அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் அந்த அணியிலிருந்து வெளியேறிவிடுவார். நான் எந்த வீரரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை” என்று கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நடவடிக்கையில் திருப்தியடையாத ரோகித் சர்மா, MI அணியிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்து பின்னர் இவ்வளவு ஆண்டுகள் ஆதரவளித்த அணிக்காக ஒரு சீசன் இருக்கலாம் என்ற முடிவுக்கு சென்று வர்த்தகத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் அவர் 2025 மெகா ஐபிஎல் ஏலத்தின் போது மும்பை அணியிலிருந்து வெளியேறிவிடுவார் என்று உறுதியான கருத்துக்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

Rohit - Hardik
“இதனால்தான் ரோகித்துக்கு இவ்ளோ Fans..” - ஹர்திக்கிற்கு ஆதரவாக Heart Touching செயல்! வைரல் வீடியோ!

முக்கியமான முடிவுகளில் ஹர்திக்-ரோகித் இடையே முட்டும் வாக்குவாதம்!

புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா, கேப்டன்சியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றிபெறவேண்டிய இடத்திலிருந்த போது, ரசீத்கானை எதிர்கொள்ள வேண்டாம் என்பதற்காக ஹர்திக் பாண்டியா தாமதமாக களமிறங்கியது போட்டியை தோல்விக்கு அழைத்துச்சென்றது. அதற்கு பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் பும்ராவிற்கு தொடக்க ஓவர்கள் கொடுக்காதது, இளம் வீரர் மாபாகா மற்றும் ஹர்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்கள் வீசியது என பல தவறான முடிவுகள் அணிக்கு பாதகமாக அமைந்தன.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

இந்நிலையில் டிரெஸ்ஸிங் அறையில் போட்டியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளால் ரோகித் சர்மாவிற்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசிப்பயனில்லாமல் சோர்வடைந்ததாகவும், ஹர்திக்கின் செயல்பாடுகளில் அதிருப்தியுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூஸ்24 உடன் பேசியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவர், ரோகித் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு இடையேயான பிரச்னை குறித்து உறுதிசெய்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Rohit - Hardik
“மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்..”! ஹர்திக் பாண்டியாவை Booed செய்த ரசிகர்களை எச்சரித்த மஞ்ச்ரேக்கர்!

ஹர்திக் பாண்டியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மும்பை அணி நிர்வாகம் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறையால் அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா, அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தில் நிச்சயம் வேறு அணிக்கு செல்லும் முடிவில் இருக்கிறார். இந்தியாவின் வெற்றிக்கேப்டனாகவும், பேட்டிங்கில் ஃபார்மில் இருந்துவரும் ரோகித் சர்மாவை அனைத்து அணிகளும் தக்கவைத்துக்கொள்ள ஆரவமாக இருந்துவருகின்றன.

Rohit Sharma
Rohit Sharma

இந்நிலையில் முக்கியமான முடிவை எடுத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்னும் இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டனாக வாய்ப்பை வழங்கவும், அதிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படாத நிலையில் அவரிடமிருந்து கேப்டன்சியை பறித்து மீண்டும் ரோகித் சர்மாவிடமே வழங்கவும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன்சி பொறுப்பை ஏற்கும்படி மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோகித் சர்மாவிடம் கேட்டதாகவும் ஆனால் அதனை வர் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohit - Hardik
”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com