”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!

ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை விட்டு வெளியேறுவார்கள் என்று அஸ்வின் உ டனான யூ-டியூப் சேனலில் பிரசன்னா அகோரம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
rohit sharma - bumrah
rohit sharma - bumrahweb

மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டதிலிருந்தே, மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் இருந்துவருகிறது. முதலில் ரோகித் சர்மாவிடம் சொல்லிவிட்டு தான் கேப்டன்சி மாற்றப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், ரோகித்தின் மனைவி ரித்திகா அதனை மறுத்த நிலையில், ரோகித் ரசிகர்களுக்கும் மும்பை அணி நிர்வாகத்திற்கும் இடையே யுத்தமே நடந்துவருகிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

உடன் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மாற்றத்திற்கு பிறகு ஜஸ்பிரித் பும்ராவும் “சைலன்ஸ்” என்று பதிவிட்டதும், மும்பை அணியின் முக்கிய வீரர்களுக்கு கேப்டன்சி மாற்றம் பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

ரோகித் சர்மா - பும்ரா
ரோகித் சர்மா - பும்ரா

இந்நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், ஒவ்வொரு மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக முழக்கமிட்டு ட்ரோல் செய்துவருகின்றனர். அத்துடன் மைதானத்தில் ரோகித் சர்மாவை பவுண்டரி லைனில் நிற்கவைத்து ஹர்திக் பாண்டியா அலைக்கழித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி, மேலும் ஹர்திக் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா

இதற்கிடையில் தான் அஸ்வின் உடனான யூ-டியூப் சேனலில் பேசியிருக்கும் Pdogg எனக்கூறப்படும் பிரசன்னா அகோரம், ப்ளூ சட்டை வீரர் அடுத்த ஐபிஎல் தொடரில் மஞ்சள் சட்டை அல்லது சிகப்பு சட்டை அணிக்கு வந்துவிடுவார் என்று மறைமுகமாக ரோகித் சர்மா குறித்து பேசியுள்ளார்.

rohit sharma - bumrah
"பும்ராவை ஏன் பந்துவீச வைக்கவில்லை? நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு!" - ஹர்திக்கை விளாசும் வீரர்கள்!

”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்!

Pdogg உடனான யூ-டியூப் வீடியோ உரையாடலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், நீல சட்டை வீரரின் டிரேடிங் குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதலளித்த பிரசன்னா, “ப்ளூ சட்டை பேட்ஸ்மேன் மற்றும் ப்ளூ சட்டை பவுலர் இருவரும் அடுத்த ஐபிஎல் தொடரில் மஞ்சள் சட்டை அல்லது சிகப்பு சட்டை அணிக்கு வருவார்கள். இந்த தொடரிலேயே அதற்கான வர்த்தகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, ஆனால் அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் ப்ளூ சட்டை பேட்ஸ்மேன் அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் அந்த அணியிலிருந்து வெளியேறிவிடுவார். நான் எந்த வீரரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை” என்று கூறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பகுப்பாய்வாளராகவும், தென்னாப்பிரிக்கா அணியின் ஆலோசகராகவும் 11 வருடங்களாக இருந்துவருபவர் பிரசன்னா அகோரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2025 ஐபிஎல் தொடரில் மெகா ஐபிஎல் ஏலம் நடக்கும் என பிசிசிஐ தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் ஆர்சிபி அணிக்கு கிடைத்தால், அந்த அணியின் கோப்பை கனவு நினைவாகும். ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு கிடைத்தால் தோனிக்கு பிறகு ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்துவார்.

rohit sharma - bumrah
குஜராத்தில் நடந்தது கம்மி; மும்பையில் இன்னும் சத்தமாக ஹர்திக் “Booed" செய்யப்படுவார்- முன்னாள் வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com