டி20 உலகக்கோப்பை - தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி? ரோகித் சர்மா சொல்வதென்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா உடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
virat - rohit
virat - rohitpt web

2024 ஐபிஎல் தொடரானது மே 26ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையானது ஜூன் 2ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான இந்திய அணி வரும் ஏப்ரல் இறுதிவாரம் அல்லது மே முதல்வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை பிசிசிஐ மும்முரமாக செய்து வருகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை அணியில் சேர்க்க அணி தேர்வாளர்கள் கணக்கிட்டு வருகின்றனர்.

தொடக்க ஆட்டக்காரராக விராட்

virat kohli
virat kohli

அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியை, ரோகித் ஷர்மாவுடன் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி உலகக்கோப்பைக்கான டி20 அணியின் இடம்பிடிப்பதே சந்தேகம் என கூறப்பட்டு வந்த சூழலில், இத்தகைய தகவல் வெளியாகியுள்ளதால் விராட்டின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

virat - rohit
IMPACT PLAYER விதிமுறை | “என்ன இருந்தாலும் இது சரி கிடையாது” - ரோகித் சர்மா சொன்னதென்ன?

ரோகித் சர்மா உடன் யஷஸ்வி அல்லது கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் ஓப்பனிங் இறங்குவார் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

ஓப்பனிங்கில் அசத்தியுள்ள விராட்

Virat - rohit
Virat - rohit

தற்போதைய ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் விராட் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுகிறார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 361 ரன்களை எடுத்து, அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார். இதில் ஒரு சதமும் இரண்டு அரை சதங்களும் அடக்கம். அவரது ஸ்ட்ரைக் ரேட் 147 ஆக உள்ளது.

இதுவரை இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ள விராட் கோலி, மொத்தமாக 400 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 57.14 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 161.29. இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், மிடில் ஆர்டரில் விராட் களமிறங்கும்போது அவரது சராசரி 51.76 ஆகவும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 138.16 ஆகவும் உள்ளது.

virat - rohit
"அவர்கள் பேசுவதுகூட நம் வீரர்களுக்கு புரியாது" RCB-ன் பெரிய குறையை விமர்சித்த முன்னாள் அதிரடி வீரர்!

விராட் கோலியின் முதல் டி20 சதமும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அடிக்கப்பட்டதே. 2022 ஆம் ஆண்டில் நடந்த டி20 ஆசியக் கோப்பையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கே.எல். ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 122 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரோகித் சொல்வதென்ன?

Rohit Sharma - Virat Kohli
Rohit Sharma - Virat KohliTwitter

இந்நிலையில், Club Prairie Fire podcastல் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, “விராட் உடன் ஓப்பனிங் செய்வது குறித்தோ அல்லது டாப் ஆர்டர் எப்படி இருக்கும் என்பது குறித்தோ இதுவரை எங்கள் யாரிடமும் விவாதிக்கப்படவில்லை. என்னிடமோ, ராகுல் அல்லது அஜித் அகார்கரிடம் இருந்துமோ தகவல்கள் வராதவரை மற்ற அனைத்தும் போலியானவையே..” என தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, உலகக்கோப்பைக்கான இந்திய டி20 அணி குறித்து பல்வேறு ஊகங்களும், தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகக்கோப்பைக்கான 10 பேர் கொண்ட தற்காலிக பட்டியல் வெளியாகியுள்ளது என்றும் அதில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரோகித் சர்மா போன்றோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும்வரை யூகங்களுக்கு பஞ்சமிருக்காது.

virat - rohit
'இது லிஸ்ட்லயே இல்லையே..' கேப்டன்சிக்காக ஆட்டநாயகன் விருது! 89 ரன்களில் சுருண்ட GT! DC அபார வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com