'இது லிஸ்ட்லயே இல்லையே..' கேப்டன்சிக்காக ஆட்டநாயகன் விருது! 89 ரன்களில் சுருண்ட GT! DC அபார வெற்றி!

67 பந்துகளை வெளியில் வைத்து குஜராத்தை டைட்டன்ஸ் அணியை வென்றது டெல்லி அணி.
DC vs GT
DC vs GTcricinfo

2024 ஐபிஎல் தொடரானது 7 போட்டிகளை கடந்து பரபரப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முதல் 4 இடத்தை பிடித்திருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்கான பாதையில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள், தங்களுடைய தகுதிச்சுற்று வாய்ப்பை தக்கவைக்கும் முயற்சியில் பலப்பரீட்சை நடத்தின.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் எப்படியும் நல்ல டோட்டலை குவித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பேட்டிங் செய்தது குஜராத் அணி.

DC vs GT
கேப்டன் முதல் கோச் வரை.. அனைவரையும் வெளியேற்றுங்கள்! RCB வெற்றிபெற அதுதான் ஒரே வழி! - முன்னாள் வீரர்

GT-ஐ சிதறடித்த டெல்லி அணி..

யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, குஜராத் அணியை நிலைகுலைய வைத்தது. ஆடுகளத்தில் பந்து நின்றுவந்தது 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்வியை நினைவுபடுத்தியது. பிட்ச்சில் நன்றாக பந்து நின்று வந்ததால், சரியாக டைம் செய்யமுடியாத சுப்மன் கில், இஷாந்த் சர்மா வீசிய ஓவரில் இறங்கிவந்து விளையாடி, ஒரு தவறான திசையில் பந்தை தூக்கியடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பந்துவீச வந்த முகேஷ் குமார் ரிதிமான் சாஹாவின் ஸ்டம்புகளை தகர்த்து வெளியேற்றினார்.

சாஹா
சாஹா

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும், மெதுவான ஆடுகளத்தில் நிலைத்து ஆடக்கூடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 2 பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தார். கடைசிவரை நிலைத்துநின்று விளையாடுவார் என நினைத்தபோது, ஒரு தேவையற்ற ரன்னுக்கு சென்ற சுதர்சன், தானாகவே தன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

DC vs GT
'Sanju முதல் DK வரை'- 6 விக்கெட் கீப்பர்கள் இடையே கடும்போட்டி! யாருக்கு WC-ல் வாய்ப்பு? முழு அலசல்

பந்துவீசிய விக்கெட் கீப்பர்.. மிரட்டிய பண்ட்..

28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாற, விரைவாகவே களத்திற்கு வந்தார் அதிரடி வீரர் டேவிட் மில்லர். ஆனால் வந்தவேகத்தில் மில்லரை வெளியேற்றிய இஷாந்த் சர்மா, குஜராத் அணிக்கு அடிக்குமேல் அடிகொடுத்தார். அதற்குபிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி, டைட்டன்ஸ் அணியை எழவேவிடாமல் சுழன்றடித்தது.

stubbs - pant
stubbs - pant

விக்கெட் கீப்பர் வீரரான ஸ்டப்ஸ் கையில் எல்லாம் பந்தை கொடுத்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், குஜராத் அணியை சோதித்தார். ஒரு விக்கெட் கீப்பர் ஸ்டப்ஸ் பந்துவீச, ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்த இன்னொரு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இரண்டு அபாரமான ஸ்டம்பிங் மூலம் அபினவ் மற்றும் சாருக் கான் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி கலக்கிப்போட்டனர். இறுதியில் வந்து விக்கெட்வேட்டை நடத்திய முகேஷ் குமார், குஜராத் டைட்டன்ஸ் அணியை 89 ரன்னில் சுருட்டி எறிந்தார். அபாரமாக பந்துவீசிய முகேஷ்குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

DC vs GT
Hardik-க்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பில்லை? ரோகித் வைத்த பெரிய செக்! என்ன நடந்தது?

மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்த DC!

90 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்கவீரராக களமிறங்கிய Jake Fraser அடுத்தடுத்து 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்டு அதிரடியான தொடக்கத்தை எடுத்துவந்தார். உடன் சாய் ஹோப் 2 சிக்சர்கள், பண்ட், போரல் ஒரு சிக்சர் என அடுத்தடுத்து சிக்சர்களாக பறக்கவிட்ட டெல்லி அணி வீரர்கள் சேஸிங்கை எளிதாக்கினர்.

என்னதான் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், அதிரடியான பேட்டிங் மூலம் 8.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணி 67 பந்துகளை வெளியில் வைத்து பிரமாண்டமான வெற்றியை பதிவுசெய்தது.

ஆட்டநாயகன் விருதை, டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பெற்றுக்கொண்டார்

fraser
fraser

ஐபிஎல் வரலாற்றில் தங்களுடைய மிகக்குறைவான டோட்டலை குஜராத் அணி பதிவுசெய்த நிலையில், டெல்லி அணி ஐபிஎல் வரலாற்றில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்து அசத்தியது. இந்தவெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல டைட்டன்ஸ் அணி 7வது இடத்திற்கு சரிந்திருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 9வது இடத்திற்கு சென்றுள்ளது. ஆர்சிபி அணி எப்போதும் போல கடைசி இடத்தில் நீடிக்கிறது.

DC vs GT
”இனி எல்லாமே எங்களுக்கு செமிஃபைனல் தான்..” மீண்டுவருவோம் என RCB பயிற்சியாளர் நம்பிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com