உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இந்திய வீரர்.. ரிக்கி பாண்டிங் சொல்வதென்ன?

காயத்தில் இருந்து மீண்டு வந்து, டெல்லி கேப்டனாகவும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ள ரிஷப் பந்த், உலகக்கோப்பையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்pt web

ரிஷப் பந்த்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பந்த் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார். அணியாக டெல்லி அணி ப்ளே ஆஃப் வரை முன்னேறவில்லை என்றாலும் கூட தனிப்பட்ட முறையில் ரிஷப் பந்தின் செயல்பாடுகள் சிறப்பாகவே அமைந்துள்ளன.

2024 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 446 ரன்களை எடுத்துள்ளார். 3 அரைசதங்களை அடித்துள்ளார். அவரது சராசரி 40 ரன்களாக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 155.40 ஆக உள்ளது. இது அவர் கடைசியாக விளையாடிய 3 ஐபிஎல் தொடர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை விட அதிகம்.

ரிக்கி பாண்டிங்
'KKR கோப்பை வென்றிருக்கலாம்.. ஆனால் நாம்தான்' தோற்ற SRH வீரர்களிடம் நம்பிக்கையாக பேசிய காவ்யா மாறன்!

“ரிஷப் உலகக்கோப்பையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”

இந்நிலையில்தான் ரிஷப் பந்த் உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ரிஷப் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் ரசித்துள்ளேன். இது குறிப்பிடத்தக்க கம்பேக். மேலும் அவர் உலகக்கோப்பையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன்.

உண்மையில் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனெனில் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும், அவரது பேட்டிங்கின்போது எவ்வளவு ஆற்றல் மிக்கவர் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் 14 போட்டிகளில், ஒவ்வொரு பந்துக்கும் தொடர்ச்சியாக உட்கார்ந்து எழுந்து விக்கெட் கீப்பிங் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூயார்க் சென்றுள்ளது.

ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில், ரிங்கு சிங் தவிர யாரும் உலகக்கோப்பைக்கு இடம்பெறவில்லை. அதேபோல், உலகக்கோப்பைக்கு தேர்வானபின், ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் சுமாராகவே இருந்துள்ளது. இதுஒருபுறம் இருக்க, டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படும் நடராஜன், ஒப்பனிங் பேட்டிங்கில் அசத்தும் ருதுராஜ் போன்றோர் இடம்பெறாததும் விவாதத்திற்கு உள்ளானது.

ரிக்கி பாண்டிங்
“என்னையே ஒப்பந்தத்தில் எடுக்கவில்லை!!” - பிசிசிஐ-க்கு IPL கோப்பை மூலம் பதிலடி கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர்!

நியூயார்க் செல்லாத பாண்டியா

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாட்விட்டர்

இந்நிலையில்தான் நியூயார்க் சென்றுள்ளது இந்திய அணி. இதிலும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியோடு செல்லவில்லை. அவர் வேறு நாட்டில் விடுமுறையைக் கழிப்பதாகவும், இந்திய அணி விளையாடும் போட்டியின்போது வீரர்களுடன் அவர் நிச்சயம் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. குடும்பச் சூழ்நிலை மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தோல்வி உள்ளிட்டவற்ற காரணங்களால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து விடுபடுவதற்காக சில நாட்கள் வேறு நாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரிக்கி பாண்டிங்
“நீங்க ஒரு ஜோக்கர்..” கோலி குறித்து சர்ச்சை பேச்சு! நேரலையில் ராயுடுவை அசிங்கப்படுத்திய பீட்டர்சன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com