“நீங்க ஒரு ஜோக்கர்..” கோலி குறித்து சர்ச்சை பேச்சு! நேரலையில் ராயுடுவை அசிங்கப்படுத்திய பீட்டர்சன்!

ஆரஞ்சு தொப்பியை மட்டுமே வென்றுவிடுவதால் கோப்பையை வெல்ல முடியாது என, தொடர்ந்து ஆர்சிபி மற்றும் விராட் கோலியை குறைகூறிவரும் அம்பத்தி ராயுடுவை ”ஜோக்கர்” என விமர்சித்துள்ளார் கெவின் பீட்டர்சன்.
பீட்டர்சன் - ராயுடு
பீட்டர்சன் - ராயுடுweb

2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. தங்களுடைய அசாத்தியமான பந்துவீச்சால் SRH அணியின் பேட்டிங் கோட்டையை சிதைத்த கொல்கத்தா பவுலர்கள் வெற்றியின் மீது சிம்மாசனமிட்டு அமர்ந்தனர். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா அணிம், ஒரு தொடரில் குறைந்த போட்டிகளில் மட்டுமே தோற்று கோப்பை வென்ற அணியாக மாறி சாதனை படைத்தது.

kkr 2024 champion
kkr 2024 championpt web

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு பிறகு ஆர்சிபி அணியை மீண்டும் சீண்டும் வகையில் பேசிய அம்பத்தி ராயுடு, அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலியை விமர்சித்து பேசினார்.

பீட்டர்சன் - ராயுடு
“இங்கே செய்யமுடியாததை டி20 உலகக்கோப்பையில் செய்யுங்கள்..”! சஞ்சு சாம்சனுக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு!

ஆரஞ்சு தொப்பியை வைத்து ஒன்றும் செய்யமுடியாது!

இறுதிப்போட்டிக்கு பிறகு கோப்பையை வென்ற கொல்கத்தா அணி குறித்து பேசிய அம்பத்தி ராயுடு, “ஒரு அணியில் அனைவரின் பங்களிப்பும் இருந்தால் தான் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியும். ஐபிஎல் தொடரில் இதைத்தான் நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். கொல்கத்தா அணியில் கூட நரைன், ரஸ்ஸல், ஸ்டார்க் முதலிய 3 நட்சத்திர வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் அந்த அணி கோப்பை வென்றது.

rayudu
rayudu

அதைவிடுத்து அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வெல்வதால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வென்றுவிட முடியாது. ஒரு அணியாக செயல்பட்டதற்காக கொல்கத்தா அணியை பாராட்ட வேண்டும்” என்று ஆர்சிபி மற்றும் விராட் கோலியை விமர்சித்து பேசினார்.

virat kohli
virat kohli

2024 ஐபிஎல் தொடரில் 741 ரன்கள் குவித்த விராட் கோலி, 2016ம் ஆண்டில் 973 ரன்களை குவித்ததோடு இரண்டு முறை ஆரஞ்சு கோப்பை வென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை தன்பெயரில் சேர்த்தார்.

பீட்டர்சன் - ராயுடு
“சிலமுறை இதை சொல்லவேண்டியிருக்கிறது..”! மீண்டும் RCB அணியை கலாய்த்து பதிவிட்ட அம்பத்தி ராயுடு!

நீங்க ஒரு ஜோக்கர் ராயுடு!

அம்பத்தி ராயுடு இந்த கருத்தை தெரிவித்ததற்கு பிறகு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனால் ”நீங்க ஒரு ஜோக்கர்” என நேரலையிலேயே விமர்சிக்கப்பட்டார்.

போட்டியின் முடிவுக்கு முன்புவரை ஆரஞ்சு நிற ஜாக்கட்டை அணிந்து சன்ரைசர்ஸ் அணிக்கு ஆதரவாக இருந்த அம்பத்தி ராயுடு, கொல்கத்தா அணி வென்றதற்கு பிறகு ஊதா நிற ஆடையில் வந்து கருத்து தெரிவித்தார்.

அதை கவனித்த கெவின் பீட்டர்சன், மேத்யூ ஹைடன் மற்றும் அம்பத்தி ராயுடு உடனான உரையாடலில் “அவர் ஆரஞ்சு நிறத்தில் இருந்து பின்னர் ஊதா நிறத்திற்கு மாறினார் என்ற உண்மையை வெளிக் கொண்டு வந்ததற்கு நன்றி” என தொகுப்பாளினியிடம் கெவின் பீட்டர்சன் கூறினார்.

ஊதா நிற ஆடையை அணிந்திருந்த பீட்டர்சன், “குறைந்தபட்சம் நான் ஆதரவு அளித்த அணிக்காக உறுதியாக இருந்தேன். நான் தொடர்ந்து அதை அணிந்தேன், ஆனால் நீங்கள் ஒரு ஜோக்கர், ஒருமுறை ஜோக்கராக இருக்கும் நீங்கள் எப்போதும் ஜோக்கர் தான்” என்று நேரலையிலேயே அசிங்கப்படுத்தினார்.

பீட்டர்சனின் இந்த வார்த்தைகளை எதிர்ப்பார்க்காத ராயுடு, கொஞ்சம் வேகமாக “நான் இரு அணிகளையும் ஆதரிக்கிறேன். நல்ல கிரிக்கெட்டை ஆதரிக்கிறேன்” என்று கூறி சமாளித்தார். சமீபத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பீட்டர்சன் - ராயுடு
”RCB-ஐ விட்டு விராட் கோலி வெளியேறவேண்டும்..”! ரொனால்டோ, மெஸ்ஸியை உதாரணம் கூறிய பீட்டர்சன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com