”RCB-ஐ விட்டு விராட் கோலி வெளியேறவேண்டும்..”! ரொனால்டோ, மெஸ்ஸியை உதாரணம் கூறிய பீட்டர்சன்!

“விராட் கோலி முக்கியமான ஒரு முடிவை நோக்கி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ரொனால்டோ, மெஸ்ஸி, பெக்காம், ஹாரி கேன் முதலிய கால்பந்து ஜாம்பவான்கள் கூட அதைத்தான் செய்துள்ளனர்” - கெவின் பீட்டர்சன்
virat kohli - kevin pietersen
virat kohli - kevin pietersenweb

16 வருடங்களாக 9 முறை அரையிறுதிபோட்டி, 4 முறை இறுதிப்போட்டி என முன்னேறியிருக்கும் ஆர்சிபி அணி, கோப்பையை மட்டும் வெல்லமுடியாமல் தடுமாறிவருகிறது.

இந்நிலையில், 17வது ஐபிஎல் சீசனிலாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி கோப்பை வெல்லும் கனவை மீண்டும் கோட்டைவிட்டு வெளியேறியது.

virat kohli - kevin pietersen
virat kohli - kevin pietersen

உலக கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்திருக்கும் விராட் கோலி, ஆர்சிபி அணியில் ஒருகோப்பை கூட வெல்லமுடியாமல் பல்வேறு விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் ஆளாகிவருகிறார். இதைப்போன்ற கடினமான சூழலில் ஆர்சிபி அணியை விட்டு வெளியில் வந்து விராட் கோலி வேறுஅணிக்கு செல்லவேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

virat kohli - kevin pietersen
“சிலர் கோலியை எடுக்க வேண்டாம் என்பதற்காகவே குறைகூறுகிறார்கள்..” - WC தேர்வு குறித்து ரிக்கி பாண்டிங்

கோப்பை வெல்ல கோலி RCB விட்டு வெளியேறவேண்டும்!

எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்த பிறகு, விராட் கோலி கலங்கிய கண்களுடன் காணப்பட்டார். தொடர்ந்து இந்திய அணி மற்றும் பிரான்சைஸ் அணி என அனைத்திலும் நாக் அவுட் போட்டிகளில் வெளியேறிவரும் விராட் கோலியை பார்ப்பதற்கு ரசிகர்கள் தாண்டி பல முன்னாள் வீரர்களும் ஆதங்கம் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் விராட் கோலி குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், “நான் இதை பலமுறை சொல்லியிருக்கிறேன், தற்போதும் சொல்கிறேன். மற்ற விளையாட்டுகளில் இருக்கும் ஜாம்பவான் வீரர்கள் கோப்பை வெல்வதற்காகவும், பெருமைக்காவும் வேறு அணிகளுக்கு சென்று விளையாடி இருக்கின்றனர். ஆனால் கோலி மட்டும் இன்னும் ஆர்சிபி அணிக்காக போராடிவருகிறார். அவர் மீண்டும் அணிக்காக அனைத்தையும் செய்து, ஆரஞ்சு கோப்பையையும் வென்றுள்ளார். ஆனால் அணி மீண்டும் ஒருமுறை தோல்வியை சந்தித்து அவரை கைவிட்டுள்ளது” என்று விரக்தியில் பேசியுள்ளார்.

kevin pietersen
kevin pietersen

ஆர்சிபி அணியிலிருந்து கோலியும் வெளியேற வேண்டும் என்று கூறிய அவர், “ஆர்சிபி அணியின் வணிக மதிப்புக்கு கோலி ஒரு முக்கிய நபர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் அவர் இதை எல்லாவற்றையும் தாண்டி கோப்பையை வெல்வதற்கு தகுதியான வீரர். அதனால் விராட் கோலி ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி வேறு அணிக்கு சென்று விளையாடவேண்டும். அவர் அவருடைய சொந்த ஸ்டேட்டான டெல்லி அணிக்கு விளையாடினால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

virat kohli
virat kohlicricinfo

ரொனால்டோ, மெஸ்ஸி முதலிய கால்பந்து ஜாம்பவான்களை உதாரணமாக கூறிய அவர், “விராட் கோலி ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற வேண்டியது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம். விராட் கோலி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் கால்பந்து ஜாம்பவான்களான பெக்காம், ரொனால்டோ, மெஸ்ஸி, ஹாரி கேன் முதலிய ஸ்டார் வீரர்கள் அனைவரும் அவர்களுடைய பிரான்சைஸ் அணியைவிட்டு வேறு அணிக்கு சென்றுள்ளார்கள். விராட் கோலியும் அதனை செய்யவேண்டும்!” என்று கூறியுள்ளார்.

virat kohli - kevin pietersen
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com