RCB Vs PBKS | 18 வருட கனவு.. IPL 2025 கோப்பையை வெல்லப் போவது யார்? AI கணித்த அணி இதுதான்!
நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையைக் கைப்பற்றப் போவது யார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். இன்றைய இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வெல்லாததால், இன்றைய போட்டி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இதற்கிடையே, இன்றைய போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இதுதொடர்பாக AI தளங்களான Grok, Gemini மற்றும் ChatGPTயிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவைகள், யாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.
X GROK:
இத்தளம், RCBக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோரின் பந்துவீச்சு மற்றும் விராட் கோலி, பில் சால்ட் ஆகிய வீரர்களின் பேட்டிங் சிறப்பாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது. தவிர, அகமதாபாத்தில் முதலில் பேட்டிங் செய்த எட்டு ஆட்டங்களில் பெங்களூரு ஆறு ஆட்டங்களில் வென்றுள்ளது. ஆக, இவற்றை எல்லாம் வைத்து RCBயே வெற்றிபெறும். RCB அணியின் தற்போதைய ஃபார்மை வைத்து, ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெறும். ஒருவேளை, பஞ்சாப் அணி நெருக்கடி கொடுத்தாலும், RCB அதை தனது அனுபவத்தால் வென்று எடுக்கும் என அது கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Gemini:
ஐபிஎல்லில் தங்கள் முதல் கோப்பையை வெல்ல ஆர்வமுள்ள இரண்டு அணிகளுக்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டி இது. இந்த சீசனில் சமீபத்தில் நடந்த போட்டிகள் மற்றும் தகுதிச் சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் ஆர்சிபி அணி சற்று முன்னிலை பெற்றிருக்கலாம். என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டு வந்துள்ளது. எந்த அணியையும் சவால் செய்யக்கூடிய வலுவான பேட்டிங் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆகையால் இன்றைய தினத்தின் செயல்திறனைப் பொறுத்து முடிவு இருக்கும்.
மேலும் டாஸ் மற்றும் வானிலை இடையூறுகள் போன்ற காரணிகளும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை விதைக்கலாம். ஆர்சிபி மற்றும் பிபிகேஎஸ் அணிகளுக்கு இடையிலான ஒரு யூகத்தை Gemini எடுக்க வேண்டியிருந்தால், அது நம்பமுடியாத அளவிற்குக் கடினமான முடிவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் இரு அணிகளும் தங்கள் முதல் பட்டத்தை வெல்ல வலுவான காரணங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவையே Gemini தேர்வு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
ChatGPT:
இந்த சீசனில் PBKS அணிக்கு எதிரான முந்தைய வெற்றிகள், குவாலிஃபையர் 1இல் பெற்ற தீர்க்கமான வெற்றி உட்பட, RCB அணியின் நிலையான ஃபார்ம் ஆகியவற்றால் RCBயே கோப்பையை வெல்லும். இருப்பினும், PBKS அணியின் சமீபத்திய செயல்பாடுகளும், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையும் குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்தக்கூடும். எனினும், இந்த சீசனில் அவர்களின் தற்போதைய ஃபார்ம் மற்றும் வாய்ப்புகளை காரணம் காட்டி RCBஐக்கு ஒரு குறுகிய வெற்றி இருக்கலாம் என ChatGPT தெரிவித்துள்ளது.