RR vs MI | 0 வெற்றி... கலாய்க்கும் ரசிகர்கள்! Hardik-க்கு ஹாட்ரிக் தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
RR vs MI
RR vs MIcricinfo

2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே ‘மும்பை இந்தியன்ஸ், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா’ என்ற மூன்று பெயர்கள்தான் பெருமளவில் தலைப்புச் செய்திகளில் இருந்துவருகின்றன. 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு, 2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அதிலிருந்து ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர்களுக்கு இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

ராஜஸ்தான் - மும்பை
ராஜஸ்தான் - மும்பை

தன் அணிக்குள்ளேயே பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், இரண்டு சுற்றுகள் முடிவில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் பரிதாபமான நிலையில் இருந்தது மும்பை அணி. இதனால் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில், மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து நேற்று விளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணி.

RR vs MI
”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!

3 வீரர்கள் கோல்டன் டக்.. டிரெண்ட் போல்ட் மிரட்டல்!

மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். Well Balanced அணியாக இருந்துவரும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸை தோற்றபோதே மும்பை அணி மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள தயாரானது. ஆனால் பந்துவீச்சில் ருத்ரதாண்டவமே ஆடிய ராஜஸ்தான் பவுலர்கள், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியை எழவே விடாமல் அடிக்குமேல் அடிகொடுத்து சிதறடித்தனர்.

டிரெண்ட் போல்ட்
டிரெண்ட் போல்ட்

போட்டியின் முதல் இரண்டு ஓவரிலேயே ரோகித் சர்மா, நமன் திர் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் மூன்று பேரையும் கோல்டன் டக்கில் வெளியேற்றிய டிரெண்ட் போல்ட், வான்கடே மைதானத்தை சைலண்டாக்கினார். உடன் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிய இஷான் கிஷனை 16 ரன்னில் வெளியேற்றிய பர்கர் கலக்கி போட, 20 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது.

திலக் வர்மா - ஹர்திக் பாண்டியா
திலக் வர்மா - ஹர்திக் பாண்டியா

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பாதாளத்துக்கே சென்ற மும்பை அணியை, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் மீட்டுவர போராடினர். வந்ததில் இருந்தே சரவெடியாக வெடித்துச்சிதறிய ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரிகளை விரட்டி மிரட்டிவிட, தைரியமாக பந்துவீசிய யஸ்வேந்திர சாஹல் தன்னுடைய மாயாஜால சுழலில் ஹர்திக்கை சிக்கவைத்தார்.

சாஹல்
சாஹல்

உடன் 2 சிக்சர்கள் அடித்து நம்பிக்கை கொடுத்த திலக்வர்மாவையும் சாஹல் வெளியேற்ற, 4 ஓவரில் 11 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்திய சாஹலிடம் மும்பை அணியை சரணடைந்தது. டிரெண்ட் போல்ட் மற்றும் சாஹல் இருவரின் பிரிலியண்ட் ஸ்பெல்லில் சுருண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் வெறும் 125 ரன்களே எடுத்தது.

RR vs MI
BAN vs SL: 'இவங்க தெரிஞ்சி தான் பன்றாங்களா..' ஒரே நேரத்தில் ஓடிய 5 வங்கதேச வீரர்கள்! வைரல் வீடியோ!

அரைசதமடித்த ரியன் பராக்!

126 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் 3 விக்கேட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினாலும், 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அஸ்வின் மற்றும் ரியான் பராக் இருவரும் போட்டியை மும்பையிடமிருந்து தூரமாக எடுத்துச்சென்றனர்.

ரியன் பராக்
ரியன் பராக்

கடைசிவரை களத்தில் இருந்த ரியான் பராக் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு அரைசதமடிக்க, 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 3 போட்டிகளில் 181 ரன்கள் அடித்திருக்கும் ரியான் பராக் ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தினார். மும்பை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேரை கோல்டன் டக்கில் வெளியேற்றிய டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RR vs MI
அம்பயருடன் கத்திய பாண்டிங் - கங்குலி.. பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி! அஸ்வின் அதிரடியால் RR வெற்றி!

‘ஒரு முட்டை எவ்ளோ ப்ரோ!’

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் ஹர்திக் தலைமையிலான மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 0 வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. ஒருமுறம் மும்பை ரசிகர்கள் வருத்தப்பட்டாலும், சில ரோகித் ரசிகர்கள் 3 போட்டியில் விளையாடி 0 வெற்றிகளை மட்டுமே வைத்திருக்கும் ஹர்திக் பாண்டியாவை “ஒரு முட்டை எவ்ளோ ப்ரோ” என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

RR vs MI
“மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்..”! ஹர்திக் பாண்டியாவை Booed செய்த ரசிகர்களை எச்சரித்த மஞ்ச்ரேக்கர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com