IPL 2025 மெகா ஏலம்| CSK-ல் இருந்து தோனி வெளியேறும் நிலையா? வில்லனாய் மாறும் புதிய விதிமுறை?

தோனியை அணியில் தக்கவைத்தால் ஜடேஜா, ஷிவம் துபே, பதிரானா ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் விட்டுவிட்டு மீண்டும் போட்டிபோட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
தோனி
தோனிஎக்ஸ் தளம்

நடப்பாண்டில், கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இந்த நிலையில், அடுத்த வருடத்துக்கான ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை இந்திய கிரிக்கெட வாரியம் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒவ்வோர் அணியும் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம் என்ற விதி இருந்தது. ஆனால், ரைட் டூ மேட்ச் (Right to match) என்ற விதி இல்லை. ஆனால், இந்த ஆண்டு ஒவ்வோர் அணியும் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். ஒரு வீரரை ரைட் டூ மேட்ச் விதி மூலம் பயன்படுத்தி வேறு அணி ஏலத்தில் வாங்கிய பின், அதே ஏலத்தொகைக்கு அவரை தங்கள் அணிக்குத் திரும்பக் கொண்டு வரலாம்.

தோனி
தோனிட்விட்டர்

அந்த வகையில், சென்னை அணி 4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் குழப்பம் நீடிக்கிறது. ஓர் அணி 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பவுலர் மதிஷா பதிரானா ஆகியோரை சிஎஸ்கே நிச்சயம் தக்கவைத்துக் கொள்ளும். 4வது வீரராக, ரைட் டூ மேட்ச் விதியைப் பயன்படுத்தி ஷிவம் துபேவை அந்த அணி ஏலத்தில் வாங்க நேரிடலாம். அதேநேரத்தில் தோனியை அணியில் தக்கவைத்தால் ஜடேஜா, ஷிவம் துபே, பதிரானா ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் விட்டுவிட்டு மீண்டும் போட்டிபோட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதையும் படிக்க: தோனி குறித்த பேச்சு | எதிர்ப்பு தெரிவித்த CSK ரசிகர்கள்.. விளக்கமளித்த SRH ஆல்ரவுண்டர்!

தோனி
‘KKR வெற்றிக்கு உங்களை புகழும்போது மட்டும் இனிக்கிறதா’ - காம்பீரை வறுதெடுக்கும் தோனி ரசிகர்கள்!

தோனியைத் தக்கவைத்துக் கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவருக்குத் தற்போது 42 வயதாகிறது. முழங்காலில் அறுவைச்சிகிச்சை செய்ததன் காரணமாக, வலி வேறு அவருக்கு உள்ளது. இதனாலேயே, அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசிக்கட்டத்தில் பேட்டிங் செய்தார். இதுகுறித்த விமர்சனமும் எழுந்தது. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் முழுவீச்சில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். தவிர, தோனி சென்னை அணியால் 12 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

தோனி
தோனிட்விட்டர்

இது அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் சம்பள செலவினத் தொகையில் சிக்கலை ஏற்படுத்தும். அதேநேரத்தில், தோனிக்குப் பதில் ஷிவம் துபே, மதிஷா பதிரானாவை ஏலத்தில் விட்டால், அவர்களுக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலத் தொகை செல்லும். அவர்களையும் மீண்டும் சென்னை அணி அதிக விலை கொடுத்தே வாங்க நேரிடும். மாறாக, அவர்களுக்குப் பதில் தோனியை ஏலத்தில் விட்டால், மற்ற நான்கு முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்க: கம்பீரின் ரகசியத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்... India Head Coach பதவிக்கு ஆபத்தா?

தோனி
”உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்பு” - அத்துமீறிய ரசிகருக்கு இப்படியொரு சோகமா? தோனி கொடுத்த நம்பிக்கை!

அப்படி, தோனியை சிஎஸ்கே அணி விடுவித்தால், அதே அணி ரைட் டூ மேட்ச் அல்லது நேரடி ஏலத்தில் அதிக விலை கொடுத்து மீண்டும் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒருவேளை, தோனி ஏலத்தில் குறைந்த விலைக்குப் போனால் மட்டுமே, ரைட் டு மேட்ச் மூலம் வாங்குவது சிஎஸ்கே அணிக்கு லாபகரமாக இருக்கும். எது, எப்படி இருந்தாலும் 100 சதவிகிதம் சிஎஸ்கே அணி, தோனியை விடாது என்றே கூறப்படுகிறது.

சிஎஸ்கே
சிஎஸ்கே

ஏனெனில், தோனியை நம்பியே சி.எஸ்.கே. உள்ளது. அத்துடன் ஐபிஎல்லில் அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது தோனிக்குத்தான். அதனால், அவரை வெளியில் விடாமல் இருப்பதற்கான மாற்று வழிகளைச் செய்யும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 2025 ஐபிஎல் ஏலம் மற்றும் விதிமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவைகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரலாம். அதுவரை தோனி சிஎஸ்கேவில் இருப்பது உறுதி.

இதையும் படிக்க:T20 WC 2024 | டி20 வரலாற்றில் முதன்முறை.. புதிய சாதனை படைத்த நமீபியா பவுலர்!

தோனி
India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com