‘KKR வெற்றிக்கு உங்களை புகழும்போது மட்டும் இனிக்கிறதா’ - காம்பீரை வறுதெடுக்கும் தோனி ரசிகர்கள்!

கொல்கத்தாவின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? உங்களுக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு தக்காளி சட்னியா’ என தோனி ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தோனி, காம்பீர்
தோனி, காம்பீர்ட்விட்டர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீரே நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாட்டு ஜாம்பவான்களுடன், இந்திய வீரர்களில் சிலரின் பெயர்களும் புறக்கணிக்கப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று கொடுத்த கொல்கத்தா அணியின் ஆலோசகராய் விளங்கும் கெளதம் காம்பீரின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும், அவரை அணுகி பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதையடுத்து அவரே நியமிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ
பிசிசிஐ

இதையடுத்து, கெளதம் காம்பீரின் பெயரே, திரும்பும் திசையெல்லாம் பேசப்படுகிறது. அதே காம்பீருக்கு எதிராக மூத்த வீரர்களிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ”அவர் ஒரு ஆக்ரோஷமான வீரர்; எதையும் முகத்திற்கு நேராகப் பேசப்படக் கூடியவர். சரியாக விளையாடவிட்டால், பாரபட்சம் பார்க்கமாட்டார். அணியிலிருந்து நீக்கிவிடுவார்” என அதிருப்தி தெரிவிக்கும் அவர்கள், அவரைத் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் ஒருசில தகவல்கள் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: உ.பி.| 7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்.. தாயை பிரிந்து திசைமாறிய வாழ்க்கை; 22 வருட பாசப்போராட்டம்!

தோனி, காம்பீர்
India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் காம்பீருக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். “அவர், எந்த அணிக்குமே இதுவரை பயிற்சியாளராக இருந்ததில்லை. போதிய அனுபவம் இல்லை. அவரைவிட அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வெறும் ஐபிஎல் கோப்பையை வாங்கித் தந்ததற்காக அவரை எல்லாம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க முடியுமா” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது மட்டுமல்ல, இதே கவுதம் காம்பீர்தான் இதற்கு முன்பு, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே வீரருமான தோனியை அடிக்கடி வம்புக்கு இழுத்தவர். இந்திய அணிக்கு தோனி செய்த சாதனைகள் மகத்தானவை. அதில் மூன்று ஐசிசி கோப்பைகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருந்தார். அதாவது, அவரது தலைமையிலான இந்திய அணிதான் இத்தகைய மகத்தான சாதனையைச் செய்திருக்கிறது.

இதையும் படிக்க:Gpay, PhonePe-க்கு போட்டியாக Paytm நிறுவனத்தை வாங்கும் அதானி?

தோனி, காம்பீர்
India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

இதுகுறித்து தோனி புகழப்படும் போதெல்லாம் கவுதம் காம்பீர் அதற்கு எதிரான கருத்துகளை வைப்பார். அதிலும் 2011 உலகக்கோப்பை குறித்து பேசும் போதெல்லாம் ஏதாவதொரு சிக்கலுக்குள்ளாவார் காம்பீர். குறிப்பாக, ‘தோனி மட்டுமே உலகக்கோப்பையை வாங்கித் தரவில்லை’ எனக் கடுமையாக விமர்சனம் செய்வார். அதாவது, அந்த தொடரில் அவருடைய பங்களிப்பும் இருந்ததை மறைமுகமாகக் காட்டிக் கொள்வார். இதனால் காம்பீருக்கும், தோனியின் ரசிகர்களும் கடுமையாகப் பதிலடி கொடுப்பார்கள். இந்தச் சூழலில்தான் கவுதம் காம்பீரே தற்போது தோனியை அதிகம் புகழ்ந்து வருகிறார். அதற்கும் காரணம் இருப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

அதாவது, காம்பீரை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தோனியிடமும் இதுகுறித்து ஆலோசனை கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, தோனி தமக்கு சாதகமாகச் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு காம்பீரிடம் இருப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க: குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

தோனி, காம்பீர்
"India Head Coachக்கு ஆஸ்திரேலிய வீரர்களா? புரளி கூறும் ஊடகங்கள்"- விளக்கமளித்த ஜெய் ஷா!

தவிர, நேற்றுவரை தோனியை விமர்சனம் செய்துவந்த காம்பீரே, இன்று கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்பதுதான் வியப்பான செய்தி. ஆம், எல்லோரும் கெளதம் காம்பீரால்தான் கொல்கத்தா அணி கோப்பையை வென்றதாகக் கூறுகின்றனர். ஆனால், அந்த அணிக்கு அவர் ஆலோசகராக வருவதற்கு முன்பாக அந்த அணியைச் சிறப்பாக வழிநடத்திய பங்கு சிலருக்கு உண்டு. குறிப்பாக, அந்த அணியில் இளம் பந்துவீச்சாளர்களை பட்டை தீட்டி சிறப்பாக செயல்பட வைத்தது, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் அபிஷேக் நாயர்தான். இவர்கள்தான் இளம் வீரர்களைக் கண்டறிந்து அணிக்கு கொண்டு வந்ததுடன், ஒருசிலரை ஏலத்திலும் தக்கவைத்துக் கொண்டனர். மேலும் சிறப்பான பயிற்சியும் அளித்தனர்.

தோனி, கவுதம் காம்பீர்
தோனி, கவுதம் காம்பீர்ட்விட்டர்

ஆனால், அவர்களது பெயர் இன்று பெரிதாகத் தெரிவதில்லை. எல்லாரும் கவுதம் காம்பீர் பெயரையே உச்சரிக்கிறார்கள். தவிர, வீரர்களின் கடுமையான உழைப்பும் திறமையுமே அவர்களது வெற்றிக்கு முன்னுதாரணமாக இருந்தது. அப்படியிருக்கையில், ’கவுதம் காம்பீர் அணிக்காக என்ன செய்துவிட்டார், அவரை ஏன் கொண்டாடுகின்றனர்’ என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. ஆம், தோனியும் இதைத்தானே செய்தார். ஆனால், இதைப் பொறுத்துக்கொள்ளாத காம்பீர், அவரையே அடிக்கடி குறிவைத்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது இதே அலை, காம்பீர் பக்கம் திரும்பியுள்ளது. ’கொல்கத்தாவின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? உங்களுக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு தக்காளி சட்னியா’ என தோனி ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் கெளதம் காம்பீர்?

தோனி, காம்பீர்
”உத்தரவாதம் கொடுத்தா நானும் அப்ளை பண்றேன்” - தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கண்டிஷன் போட்ட காம்பீர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com