2025 மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பை வென்ற MI நியூயார்க்
2025 மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பை வென்ற MI நியூயார்க்cricinfo

’உலகத்திலேயே MI அணியால் மட்டுமே சாத்தியம்..’ 7 போட்டியில் 6 தோல்விக்கு பிறகு கோப்பை வென்று சாதனை!

2025 மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் கோப்பை வென்று மகுடம் சூடியது MI நியூயார்க் அணி.
Published on

அமெரிக்காவில் நடந்துவந்த 2025 மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் சாம்பியன் யார் என்ற கேள்விக்கான பதில் முடிவுக்கு வந்துள்ளது.

நடந்து முடிந்த 3வது MLC சீசனின் இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை தோற்கடித்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று MI நியூயார்க் அணி மகுடம் சூடியது.

2025 மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பை வென்ற MI நியூயார்க்
411 ஸ்டிரைக் ரேட்.. 9 பந்தில் 37 ரன்கள் விளாசிய TSK வீரர்! டாப் 2-க்கு சென்ற சூப்பர் கிங்ஸ்!

7 போட்டியில் 6 தோல்விக்கு பிறகு கோப்பை..

3வது MLC சீசனின் கோப்பையை வெல்வதற்காக ‘சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்’ முதலிய 6 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் ஃப்ரீடம் 8 வெற்றிகளுடனும், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் யூனிகார்ன்ஸ் அணிகள் 7 வெற்றிகளுடனும் புள்ளிப்பட்டியலில் மூன்று இடத்தை பிடித்து அசத்தின. கடைசி இடத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ் மற்றும் MI நியூயார்க் அணிகள் போராடின.

இந்த சூழலில் முதல் 7 போட்டிகளில் 6-ல் தோல்வியடைந்த MI நியூயார்க் அணி வெளியேறும் இடத்திலிருந்து தரமான கம்பேக் கொடுத்து பிளேஆஃப்க்கு தகுதிபெற்றது. பிளே ஆஃப் போட்டிகளில் எலிமினேட்டரில் யூனிகார்ன்ஸை வெளியேற்றிய MI, குவாலிஃபயர் 2-ல் சூப்பர் கிங்ஸை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2025 மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பை வென்ற MI நியூயார்க்
MLC T20| ஒரு ஆளாக 19 சிக்சர்கள்.. 51 பந்தில் 151 ரன்கள்! கெய்லின் உலக சாதனை உடைத்த ஃபின் ஆலன்!

13வது டி20 கோப்பை வென்ற MI!

இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் க்ளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்கொண்டு விளையாடியது MI நியூயார்க். முதலில் பேட்டிங் செய்த MI நியூயார்க் தொடக்க வீரர் டிகாக்கின் 77 ரன்கள் இன்னிங்ஸால் 180 ரன்கள் சேர்த்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரச்சின் ரவீந்திரா 70, க்ளென் பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்து போராடினாலும் பந்துகளை வேஸ்ட் செய்த கேப்டன் மேக்ஸ்வெல்லால் ரன்களை அடிக்க முடியவில்லை. ஃபினிஷிங் செய்துகொடுக்க வேண்டிய மேக்ஸ்வெல் 16 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்து வாஷிங்டன் கோப்பை கனவை ஃபினிஷ் செய்துவைத்தார்.

7 போட்டியில் 6 தோல்விக்கு பிறகும் மீண்டு எழுந்துவந்த எம்ஐ நியூயார்க் அணி கோப்பை வென்று சம்பவம் செய்தது. இது எம்ஐ நியூயார்க் அணிக்கு 2வது MLC கோப்பையும், MI குடும்பத்திற்கு 13வது டி20 கோப்பை வெற்றியாகும். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக கோப்பைகள் வென்ற பிரான்சைஸ் நிர்வாகமாக MI விளங்கிவருகிறது.

2025 மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பை வென்ற MI நியூயார்க்
’Super Kings-னாலே அடிதான்..’ கெட்டப் மாறுனாலும் கேரக்டர் மாறல! TSK-ஐ பொளந்த பொல்லார்டு! ஃபைனலில் MI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com