411 ஸ்டிரைக் ரேட்.. 9 பந்தில் 37 ரன்கள் விளாசிய TSK வீரர்! டாப் 2-க்கு சென்ற சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல்லை தொடர்ந்து மேஜர் லீக் கிரிக்கெட் பிரான்சைஸ் டி20 தொடர் அமெரிக்காவில் நடந்துவருகிறது. 34 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் ‘சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்’ முதலிய 6 அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன
லீக் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடந்துவந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் முதலிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. 4வது இடத்திற்காக 3 அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
9 பந்தில் 37 ரன்கள் விளாசிய டோனோவன் ஃபெரீரா..
நேற்று நடைபெற்ற ஆட்டம் மழை காரணமாக 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவரில் 87 ரன்கள் குவித்தது. கடைசியாக களத்திற்கு வந்து 9 பந்தில் 5 சிச்கர்களை பறக்கவிட்டடோனோவன் ஃபெரீரா 411 ஸ்டிரைக்ரேட்டில் 37 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார்.
மிகப்பெரிய டார்கெட்டை விரட்டிய வாஷிங்டன் 44 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. நல்ல நெட்ரேட்டில் வெற்றிபெற்றுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நடந்து முடிந்த 2 சீசன்களிலும் பிளேஆஃப்க்கு தகுதிபெற்ற சூப்பர் கிங்ஸ் அணி ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை. இந்த சூழலில் தொடர்ச்சியாக 3வது முறை பிளேஆஃப்க்கு தகுதிபெற்றுள்ள சூப்பர் கிங்ஸ், இந்தமுறை கோப்பை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.