29 முறை! இறுதியாக வந்து மரணபயம் காட்டிய கரன் சர்மா.. 1 ரன்னில் RCB பரிதாப தோல்வி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி த்ரில் வெற்றிபெற்றது.
rcb vs kkr
rcb vs kkrcricbuzz

கவுதம் கம்பீர்-விராட் கோலி மோதுகிறார்கள் என்பதை தாண்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது என்றாலே பரபரப்பான பைனல் ஓவர் போட்டிகளையே இதுவரை ஐபிஎல் தொடர் விருந்தாக படைத்துள்ளது.

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்று வெற்றியின் பக்கம் திரும்ப முடியாமல் போராடிவரும் ஆர்சிபி அணி, வெற்றியை தேடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

rcb vs kkr
”இனி எல்லாமே எங்களுக்கு செமிஃபைனல் தான்..” மீண்டுவருவோம் என RCB பயிற்சியாளர் நம்பிக்கை!

நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்திய RCB!

பலம் வாய்ந்த கேகேஆர் அணிக்கு எதிராக, மோசமான பந்துவீச்சை வைத்திருக்கும் ஆர்சிபி அணி எவ்வளவு ரன்களை வாரிவழங்கப்போகிறது என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் இந்தமுறை பந்துவீச்சில் முன்னேற்றமடைந்த ஆர்சிபி அணி ஓரளவு நன்றாகவே வீசியது.

RCB
RCB

மற்றபோட்டிகளில் அதிரடியில் மிரட்டிய சுனில் நரைன், ஆர்சிபி அணியின் சிறப்பான பந்துவீச்சுதாக்குதலை சமாளிக்க முடியாமல் 15 பந்துகளில் வெறும் 10 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். அதேபோல ரகுவன்சி 3 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 16 ரன்னிலும் வெளியேற 6 ஓவருக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணி அசத்தியது. ஆனால் என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட பிலிப் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் அடித்து வெளியேறினார்.

rcb
rcb

97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கொல்கத்தா அணியை, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் இருவரும் மீட்டுவர போராடினர். ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்துநின்று விளையாட, 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ரிங்கு சிங், 4 பவுண்டரிகளை விரட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் ரன்களை எடுத்துவந்தனர். 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி இறுதிவரை களத்திலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதமடித்து அசத்த, கடைசியாக வந்து 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த ரமன்தீப் சிங் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து, ஆர்சிபி அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.

ramandeep singh
ramandeep singh

ஒருவேளை இந்த இடத்தில் ரமன்தீப் சிங் அடிக்காமல் போயிருந்தால் ஆர்சிபி அணியின் ரன்சேஸ் எளிதாகவே இருந்திருக்கும். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 222 ரன்கள் குவித்தது.

rcb vs kkr
"அவர்கள் பேசுவதுகூட நம் வீரர்களுக்கு புரியாது" RCB-ன் பெரிய குறையை விமர்சித்த முன்னாள் அதிரடி வீரர்!

அதிரடியில் மிரட்டிய வில் ஜேக்ஸ் - பட்டிதார்!

223 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில், தொடக்கவீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டூபிளெசி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2 சிக்சர்கள், 1 பவுண்டரி என பறக்கவிட்டு 7 பந்துகளில் 18 ரன்களுடன் சரவெடியாக தொடங்கிய விராட் கோலிக்கு எதிராக, ஒரு ஃபுல் டாஸ் பந்தை வீசிய ஹர்சித் ரானா கோலியை வெளியேற்றினார்.

விராட் கோலி
விராட் கோலி

ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேலே சென்றதால் நோ-பால் கொடுக்க வேண்டுமென களநடுவர்களிடம் விராட் கோலி வாக்குவாதம் செய்தார். ஆனால் விராட் கோலி க்ரீஸுக்கு வெளியேவந்து நின்று விளையாடியதால், இடுப்பு உயரத்தை க்ரீஸ் தொடக்கத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொண்ட மூன்றாவது நடுவர் அவுட் என முடிவை கொடுக்க, கோலி விரக்தியுடன் வெளியேறினார். அம்பயர்களின் இந்த முடிவு ஆர்சிபி ரசிகர்களை அதிருப்தியாக்கியது. விராட் கோலி வெளியேறியதும், கேப்டன் டூபிளெசியும் நடையை கட்ட விரைவாகவே 2 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி தடுமாறியது.

விராட் கோலி
விராட் கோலி

ஆனால் என்னதான் விக்கெட்டுகளை இழந்தாலும் “நாங்க பவுலிங்க்ல தான் வீக்கு, பேட்டிங்க்ல இல்ல” என சரவெடியாக வெடித்துச்சிதறிய வில் ஜேக்ஸ் (Will Jacks) மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவந்தனர். 2 ஓவரில் 44 ரன்களை விரட்டிய இந்த ஜோடி, களத்தில் நின்ற ஒருஓவரில் கூட 10 ரன்களுக்கு குறையாமல் கிரவுண்டின் நாலாபுறமும் சிக்சர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டியது.

பட்டிதார் - வில் ஜேக்ஸ்
பட்டிதார் - வில் ஜேக்ஸ்

வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் அடுத்தடுத்து அரைசதங்களை எடுத்துவர, 11 ஓவர்களுக்கு 140 ரன்களை எடுத்துவந்து சிறப்பான இடத்தில் இருந்தது ஆர்சிபி அணி. இனிவரும் ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற இடத்தில் இருந்த ஆர்சிபி அணி, அதற்கு பிறகு ”தங்கள் தலையில் தாங்களாகவே மண்ணைவாரி போட்டுக்கொள்ளும்” ஒரு ஆட்டத்தை ஆடியது.

rcb vs kkr
'இது லிஸ்ட்லயே இல்லையே..' கேப்டன்சிக்காக ஆட்டநாயகன் விருது! 89 ரன்களில் சுருண்ட GT! DC அபார வெற்றி!

ஏமாற்றிய தினேஷ் கார்த்திக்..

இந்த இடத்துல இருந்து ஒரு போட்டிய தோக்கணும்னா அது ஆர்சிபி அணியால மட்டும் தான் முடியும்” என ஆடிய ஆர்சிபி பேட்டர்கள், 2 ஓவரில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிலைகுலைந்தனர். 12வது ஓவரை வீசிய ரஸ்ஸல், நிலைத்து நின்று ஆடிய வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் இவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி கலக்கிப்போட்டார். அதேநேரத்தில் ”இரண்டு விக்கெட்டுகள் விழுந்துடுச்சு நிலைத்து ஆடலாம்” என யோசிக்காத ஆர்சிபி வீரர்கள் க்ரீன் மற்றும் லோம்ரார் இவருவரும் அடுத்த ஓவரில் சுனில் நரைனிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். சீட்டுக்கட்டுகள் போல விக்கெட்டுகள் சரிய, அடுத்தடுத்த ஓவர்களில் 7, 5, 5 என சொற்ப ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த கொல்கத்தா அணி களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் மீது அழுத்தத்தை கூட்டியது.

KKR
KKR

எப்படியும் தினேஷ் கார்த்திக் வெற்றிக்கு அழைத்துச்சென்று விடுவார் என்ற நம்பிக்கையிருந்ததால், எல்லோருடைய பார்வையும் DK மீதே இருந்தது. 2 ஓவருக்கு 31 ரன்கள் தேவையென போட்டி மாற, 19வது ஓவரை வீசிய ரஸ்ஸலுக்கு எதிராக சிக்சர், பவுண்டரி என விரட்டிய தினேஷ் கார்த்திக் நம்பிக்கையளித்தார். ஆனால் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து இறுதிஓவருக்கு செல்வார் என்று நினைத்தால், ஒரு ஸ்லோ பவுன்சரில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய DK ஏமாற்றினார்.

rcb vs kkr
”தோனியை WC-க்கு கொண்டுவரலாம் தான்..ஆனால்” - விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்விக்கு ரோகித் நச் பதில்!

1 ரன்னில் போட்டியை இழந்த RCB!

கடைசி 6 பந்துக்கு 21 ரன்கள் என போட்டி மாற, ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கை இல்லாமல் வேறுவேலை பார்க்கவே சென்றுவிட்டனர். ஆனால் ஸ்டார்க் வீசிய இறுதிஓவரில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்ட கரன் சர்மா ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். ”24 கோடிய திரும்ப கூட தரவேண்டாம், நீங்க பேசாம ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப போயிடுங்க” என ரசிகர்கள் புலம்ப, ஒரு சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் ஸ்டார்க்.

karn sharma
karn sharma

2 பந்துக்கு 3 ரன்கள் என போட்டி விறுவிறுப்பாக மாற, யார் பக்கம் போட்டி செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியது. ஆனால் 5வது பந்தில் ஒரு சிறப்பான கேட்ச் மூலம் கரன்சர்மாவை வெளியேற்றிய ஸ்டார்க், கொல்கத்தா அணியின் பக்கம் போட்டியை திருப்பினார். கடைசி 1 பந்துக்கு 3 ரன்கள் என மாற, 2 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற நிலையில், 1ரன் மட்டுமே எடுத்த ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது. முடிவில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தக்கவைத்துகொண்டது கொல்கத்தா அணி.

RCB vs KKR
RCB vs KKR

இந்த போட்டியில் 200 ரன்களை விட்டுக்கொடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த ஒரே அணியாக ஆர்சிபி மோசமான சாதனை படைத்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 29 முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் நீடிக்கிறது ஆர்சிபி அணி.

rcb vs kkr
’படுத்தே விட்டானய்யா..’ MI போட்டியில் ஏற்பட்ட 'Toss FIXING' பிரச்னை! கேமராமேன் செய்த தரமான சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com