”இனி எல்லாமே எங்களுக்கு செமிஃபைனல் தான்..” மீண்டுவருவோம் என RCB பயிற்சியாளர் நம்பிக்கை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முழுமையாக கலைத்துவிட்டு புதிய அணியை கொண்டுவாருங்கள் என விமர்சனம் எழுந்த நிலையில், பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் மீண்டுவருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
RCB
RCBweb

17 வருடங்களாக கோப்பையே வெல்லமுடியாமல் தவித்துவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு 2024 ஐபிஎல் தொடரிலும் படுமோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற இரண்டு பெரிய அணிகளுக்கு பிறகு மூன்றாவது பெரிய அணியாக இருக்கும் RCB, 7 போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் நீடிக்கிறது.

சிறந்த பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் அந்த அணியில், பந்துவீச்சாளர்கள் பிரிவு என்பது கவலைக்குரிய விசயமாகவே இருந்துவருகிறது. முகமது சிராஜ் முதல் யாஷ் தயாள் வரை அனைத்து பவுலர்களும் ரிதமை எடுத்துவர முடியாமல் தவித்துவருகின்றனர். சொந்த மைதானத்தில் அனைத்து அணிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணி தோல்விகளையே சந்தித்துவருகிறது.

RCB
RCBpt desk

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 287 ரன்களை விட்டுக்கொடுத்த பிறகு, ஆர்சிபி அணியை முழுமையாக கலைத்துவிடுங்கள் மற்றும் அணியின் உரிமையாளரை மாற்றிவிடுங்கள் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

RCB
Hardik-க்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பில்லை? ரோகித் வைத்த பெரிய செக்! என்ன நடந்தது?

ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி தான்..

தோல்விகுறித்து பேசிய ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர், “இது எங்களுக்கு மிகவும் கடினமான இரவு. சன்ரைசர்ஸ் அணி மிகவும் சக்திவாய்ந்த முறையில் முடித்தார்கள், அது எங்கள் படகை உடைத்து ஆபத்தான நிலையில் தள்ளியுள்ளது. ஆனால் நாங்கள் யோசிப்போம், நிச்சயம் வலுவாக திரும்பி வருவோம். இது வெளிப்படையாக எங்களுக்கு நாக்-அவுட் நேரம், ஒவ்வொரு ஆட்டத்தையும் செமிஃபனலை போல் விளையாடி மீண்டுவருவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆண்டி ஃபிளவர்
ஆண்டி ஃபிளவர்

ஆர்சிபி அணியின் டைரக்டர் மோ பாபத் கூறும்போது, “ஐபிஎல்லின் இரண்டாம் பாதியில் நாங்கள் இருந்தாலும், எங்களுடைய அணி இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அடுத்துவரும் போட்டிகளை நாக் அவுட் ஆட்டங்களைப் போன்றே எண்ண வேண்டும். அடுத்த 4 போட்டிகளில் நாங்கள் வரிசையாக வென்று கம்பேக் கொடுப்போம் என்ற நம்பிக்கை வருகிறது. அதற்கு பிறகு நாங்கள் தொடரில் நிலைத்திருப்போம்” என தெரிவித்துள்ளார்.

RCB
கேப்டன் முதல் கோச் வரை.. அனைவரையும் வெளியேற்றுங்கள்! RCB வெற்றிபெற அதுதான் ஒரே வழி! - முன்னாள் வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com