“இப்போதான் நிம்மதியா இருக்கு” பெருமூச்சுவிட்ட ரோகித்; StopClock முறையால் இந்தியாவிற்கு கிடைத்த பலன்!

டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ind vs usa
ind vs usapt web
Published on

ind vs usa

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி Nassau County கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் குரூப் Aவில் இடம்பெற்றிருந்த இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இரு அணிகளும், தான் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்திருந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய அமெரிக்க அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜஹாங்கீர் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அர்ஷ்தீப் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடித்தார். ஓவரின் இறுதிப் பந்திலேயே மீண்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அப்போது நின்ற ரன்கள், அதன்பிறகு ஆமை வேகத்திலேயே நகர்ந்தது. ஓவருக்கு ஒரு ரன் இரண்டு ரன்கள் என்றே அமெரிக்க பேட்ஸ்மேன்கள் எடுத்தனர். பவர் ப்ளேவின் முடிவில் அமெரிக்க அணி 2 விக்கெட்களை இழந்து 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

ரன்களும் இல்லை, விக்கெட்டும் விழவில்லை என்ற நிலையில், 8 ஆவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட்டைக் கழற்றினார் பாண்டியா. சற்றே நிலைத்த ஆரோன் ஜோன்ஸின் விக்கெட்டை ஹர்திக் வீழ்த்தினார். ஷிவம் துபேவின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசிய டெய்லரை அக்சர் படேல் வெளியேற்றினார். 30 பந்துகளை ஆடியிருந்த டெய்லர் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ind vs usa
அதென்ன StopClock Rule? உலகக்கோப்பை போட்டியில் USAவிற்கு 5 பெனால்டி ரன்கள் கொடுக்கப்பட்டது ஏன்?

111 ரன்கள் என்பதே இலக்கு

விக்கெட்கள் விழுந்தாலும் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த நிதிஷ் குமாரை வெளியேற்றினார் அர்ஷ்தீப். சிக்சருக்கு தூக்கி அடித்த பந்தை பவுண்டரி லைனில் தலைக்கு மேல் வந்த பந்தை அசால்ட்டாக பிடித்து அசத்தினார் சிராஜ். 18 ஓவர்களின் முடிவில்தான் அமெரிக்க அணி100 ரன்களை எட்டி இருந்தது. பின்னர் 19 ஆவது ஓவரில் 3 ரன்களும், 20 ஆவது ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்து மொத்தமாக 8 விக்கெட்களை இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்தது அமெரிக்க அணி.

111 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் விராட்கோலி ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார். முதல் ஓவரில், தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். நடந்துவரும் உலகக்கோப்பைத் தொடரில், விராட்கோலி இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்டவில்லை. அயர்லாந்துக்கு எதிரான முதல்போட்டியில் 1 ரன், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டுயில் 4 ரன்கள், அமெரிக்காவிற்கு எதிராக ‘டக் அவுட்’. அதுமட்டுமின்றி அமெரிக்க மண்ணில் நடந்த டி20 போட்டிகளிலேகூட அவரது செயல்பாடு சுமாராகத்தான் இருந்துள்ளது. 6 இன்னிங்ஸ்களில் 68 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ind vs usa
“இந்திய கால்பந்து அணியின் கனவையே சிதைத்துவிட்டது” - பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேதனை

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இந்தியா

இதன்பின்னர், ரோகித் சர்மாவும் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் சர்மா எப்போதும் தடுமாறியே வந்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 24 இன்னிங்ஸ்களில், 10 முறை இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். அவரது சராசரியே 19 ரன்களாக மட்டுமே உள்ளது. பின் ரிஷப் பந்தும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணி பவர்ப்ளேவில் 2 விக்கெட்களை இழந்து 33 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

8 ஆவது ஓவரில் ரிஷப் பந்தும் 18 ரன்களுக்கு வெளியேற பின் வந்த துபே, சூர்யகுமார் யாதவ் உடன் பார்ட்னர் ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். நிதானமாக சிங்கிள்கள் எடுத்து ஆடிய இந்த கூட்டணி, 19 ஆவது ஓவரில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிவம் துபே 31 ரன்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

ind vs usa
மகாராஷ்டிரா| மகனின் வாயில் பேப்பரைத் திணித்துக் கொலை.. போதையில் தந்தை செய்த கொடூரம்!

ஸ்டாப் கிளாக்

போட்டி முடிந்து பேசிய ரோகித் சர்மா, “இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. இங்கே கிரிக்கெட் விளையாடுவது எளிதானது அல்ல. 3 ஆட்டங்களிலும் கடைசிவரை போராட வேண்டி இருந்தது. இந்த வெற்றிகளின் மூலம் நிறைய தன்னம்பிக்கைகளைப் பெற்றுள்ளோம்” என தெரிவித்தார்.

இதற்கு நடுவே ஐசிசியின் புதிய விதியான ஸ்டாப் கிளாக் முறைப்படி, அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்பட்டது. இதன் மூலம், இந்திய அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் ஐசிசி கொண்டு வந்த ஸ்டாப் கிளாக் விதியின் படி, ஒரு ஓவரை முடித்து, அடுத்த ஓவரை 60 விநாடிக்குள் தொடங்க வேண்டும். 3 முறை இந்த விதியை மீறினால், எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.

ind vs usa
தற்கொலை முயற்சி டூ ஆந்திராவின் துணை முதல்வர் வரை: பவன் கடந்து வந்த பாதை

இச்சூழலில், நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், இந்த விதிமுறையை அமெரிக்கா மீறியது. இதனால்,17 ஆவது ஓவர் தொடங்கும் போது நடுவர் உத்தரவின்படி, ஸ்டாப் கிளாக் முறையின் கீழ் அமெரிக்காவுக்கு பெனால்டி விதிக்கப்பட்டு 5 ரன்கள் இந்திய அணிக்கு சேர்க்கப்பட்டது. ஸ்டாப் கிளாக் விதியின்படி முதல் முறையாக பெனால்டி பெற்ற அணியாக அமெரிக்கா உள்ளது.

சூப்பர் 8ல் இந்தியா

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி அடுத்து கனடாவுடன் மோத இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகே இந்திய அணிக்கான சவால் காத்திருக்கிறது. ஜூன் 24 ஆம் தேதி குரூப் Bயில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா உடன் மோத இருக்கிறது இந்திய அணி. இதற்கு முன்பு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 முறை இந்திய அணியும், 2 முறை ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தாண்டி தற்போதைய ஐசிசி கோப்பைகள் அனைத்தும் ஆஸ்திரேலிய வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ind vs usa
புதுவை| 3 பேரின் உயிரைக் குடித்த விஷவாயு.. கழிவறை கூட செல்லாமல் உயிர் அச்சத்துடன் வாழும் மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com