இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்துX

திடீரென வந்து ஆட்டத்தை மாற்றிய ஹர்சித் ரானா.. சாதனை வெற்றிதான்.. ஆனால், இந்தியா செய்தது சரியா?

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தா மற்றும் சென்னை ஆடுகளங்களில் நடைபெற்றன. இரண்டு போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்துweb

அதனைத்தொடர்ந்து ராஜ்கோட்டியில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரை 2-1 என மாற்றி கம்பேக் கொடுத்தது.

இந்நிலையில் 4வது டி20 போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், தொடரை சமன்செய்யும் முயற்சியில் இங்கிலாந்தும் களமிறங்கின.

இந்தியா - இங்கிலாந்து
4வது டி20 | ”வந்தார்கள் சென்றார்கள்” 'W.W.0.0.0.W..' ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

அணியை மீட்டெடுத்த இரண்டு ஆல்ரவுண்டர்கள்.. 

பரபரப்பாக தொடங்கிய போட்டியில், இரண்டாவது ஓவரை வீசவந்த இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத், ஒரே ஓவரில் சஞ்சு சாம்சன் 1, திலக் வர்மா 0, சூர்யகுமார் 0 என மூன்றுவீரர்களையும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார். சஞ்சு சாம்சன் கடந்த 3 போட்டிகளிலும் புல் ஷாட் அடிக்க சென்று அவுட்டானது போலவே, 4வது டி20 போட்டியிலும் வெளியேறினார்.

dube
dube

அதற்குபிறகு கைக்கோர்த்த அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் அதிரடியாக விளையாடி இந்தியாவை மீட்டெடுக்க முயன்றனர். ஆனால் அபிஷேக் 29 ரன்னிலும், ரிங்கு சிங் 30 ரன்னிலும் வெளியேற ஆட்டம் அந்தபக்கமா இந்தபக்கமா என்ற நிலைக்கு சென்றது.

hardik pandya
hardik pandya

அப்போது 6வது விக்கெட்டுக்கு கரம்கோர்த்த ஆல்ரவுண்டர்கள் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபக்கம் அசாத்தியமான ஹிட்டிங்கை காட்டிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.

hardik - dube
hardik - dube

ஒருபுறம் ஹர்திக் பாண்டியா அரைசதமடித்து அசத்த, மறுமுனையில் நானும் இருக்கேன்பா என மிரட்டிவிட்ட துபே 7 பவுண்டரிகள் 2 சிக்சர் என விளாசி அவரும் அரைசதத்தை எடுத்துவந்தார். 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி இந்தியாவை 181 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு எடுத்துவந்தது.

இந்தியா - இங்கிலாந்து
பும்ரா விளையாட மாட்டார்.. இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி கனவு அவ்ளோ தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!

தொடரை கைப்பற்றிய இந்தியா..

இந்தியாவை தொடர்ந்து 182 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 62 ரன்களை சேர்த்து மிரட்டினர்.

டக்கெட்
டக்கெட்

ஆனால் அதற்கு பிறகு கம்பேக் கொடுத்த இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்தனர். பிலிப் சால்ட் 23 ரன்கள், டக்கெட் 39 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த பட்லர், லிவிங்ஸ்டன், பெத்தல், கார்ஸ் என அனைவரும் ஓரிலக்க ரன்னில் வெளியேறினர்.

ஹாரி ப்ரூக்
ஹாரி ப்ரூக்

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 25 பந்தில் அரைசதமடித்து அச்சுறுத்தினார். ஆனால் அவரை வருண் சக்கரவர்த்தி வெளியேற்ற இந்தியாவின் வெற்றி உறுதிச்செயப்பட்டது.

ஹர்சித் ரானா
ஹர்சித் ரானா

ஷிவம் துபேவுக்கு பதிலாக கன்கஷன் வீரராக உள்ளே வந்த ஹர்சித் ரானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு பெரிய பங்காற்றினார். 166 ரன்னுக்கு ஆல்அவுட்டான இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என முன்னிலை பெற்று தொடரை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.

இந்திய அணி செய்தது சரியா?

ஷிவம் துபே ஒரு ஆல்ரவுண்டர். அவருக்கு பதிலாக ஒரு ஆல் ரவுண்டரைத்தான் கொண்டு வந்திருக்க வேண்டும். விதிப்படி மாற்றுவீரரை கொண்டுவரலாம் தான். ஆனால், இப்படி செய்தால் பேட்டிங்கிற்கு ஒருவரை விளையாட செய்துவிட்டு அடுத்த இன்னிங்சில் அவருக்கு பதிலாக பந்துவீச்சாளரை கொண்டுவந்தால் அது எப்படி நியாயமாக இருக்கும். இது ஐபிஎல் விதியைப் போல் அல்லவா ஆகிவிடும். பொதுவாக பார்த்தால் அணியில் கூடுதலாக ஒருவர் விளையாடுவதுபோல் இருக்கிறது. விதியை முறைப்படுத்துவதே இதற்கான தீர்வாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com