’முடிவுக்கு வந்தது Dhoni-ன் கேப்டன்சி சகாப்தம்’! CSK-ன் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ms dhoni
ms dhoniX

2024 ஐபிஎல் தொடரானது பல்வேறு புதிய மாற்றங்களுடன் பரபரப்பாக தொடங்கவிருக்கிறது. 2024 ஐபிஎல் டிரேடிங்கின் போதே ”ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டது” பரபரப்பான சூழலை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு பிறகு ”ரோகித் சர்மா மும்பை கேப்டன் பதவியிலிருந்து நீக்கம், 20 கோடிக்கு மேல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் ஏலம், சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன், ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கம்பேக் கொடுத்தது” என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது.

dhoni
dhoni

இதற்கிடையில் ”புதிய ஐபிஎல் சீசனில், புதிய ரோல்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருவேளை தோனி புதிய ரோலில களமிறங்கினால் நிச்சயம் ”இம்பேக்ட் பிளேயராக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது, தோனிக்கு பதிலாக ஆரவல்லி அவிநாஷ் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பிருக்கிறது, கேப்டன்சியை பொறுத்தவரையில் மீண்டும் ஜடேஜாவிடமோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட் இடமோ செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது” என்று பல கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம்வந்தன.

இந்நிலையில் தான் தோனி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக எழுந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ms dhoni
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமனம்!

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. எப்படியும் தோனி 2023 கோப்பையுடன் ஓய்வுபெற்றுவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், ரசிகர்களின் அதிகப்படியான அன்பை பார்த்த தோனி “இதைவிட ஓய்வை அறிவிக்க சிறந்த தருணம் இருக்கமுடியாது. ஆனால், இவ்வளவு அன்புகாட்டும் சென்னை ரசிகர்களுக்காக கூடுதலாக ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்று அறிவித்தார்.

இந்நிலையில், சிஎஸ்கே கேப்டனாக 2023 ஐபிஎல் கோப்பையுடன் விடைபெற்றுள்ளார் எம்எஸ் தோனி. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் 10 ஐபிஎல் அணி கேப்டன்களின் ஃபோட்டோ ஷூட்டில் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் நிர்வாகம் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் “ருதுராஜ் கெய்க்வாட்” என்று அறிவித்துள்ளது. இதன்மூலம் முன்னாள் சிஎஸ்கே கேப்டனான மகேந்திர சிங் தோனி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே 2024 ஐபிஎல் தொடரில் விளையாடவிருக்கிறார்.

ms dhoni
“தோனி எனக்கு செய்த செயலுக்காக என் வாழ்நாள்..” அஸ்வினுக்கு 1 கோடி பரிசு! பாராட்டிய முன்.வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com