சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

2024 ஐபிஎல் தொடரில் புதிய ரோல் செய்யவிருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்துள்ளார்.
தோனி
தோனிX

கடந்த 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மழை வெயில் என 3 நாட்களை தாண்டி கடைசிப்பந்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 5வது ஐபிஎல் கோப்பையை வென்று அதிக கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை சமன்செய்தாச்சு, முழங்காலிலும் பெரிய காயம் பார்த்தாச்சு, இதுதான் ஓய்வுபெறுவதற்கான தருணம் என தோனி முடிவெடுத்துதான் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

ஒருவேளை இதுதான் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்குமோ என்ற பயத்தால், கண்ணில் கண்ணீரோடு தோனியை பார்க்க இறுதிப்போட்டிக்கு சென்ற சென்னை ரசிகர்கள், போட்டி முடிவதற்கு 3 நாட்கள் ஆனபோதும் மழை வெயில் என எதையும் பார்க்காமல் கொசுக்கடியில் ரயில்வே ஸ்டேசனில் படுத்தெழுந்து வந்து தோனியின் வெற்றியை தங்களுடைய வெற்றியைபோல் பறைசாற்றினர்.

dhoni
dhoni

இதையெல்லாம் கவனித்த மகேந்திர சிங் தோனி, ”இதைவிட ஓய்வை அறிவிக்கை சிறந்த தருணம் இருக்கமுடியாது. ஆனால், இவ்வளவு அன்புகாட்டும் சென்னை ரசிகர்களுக்காக கூடுதலாக ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்று அறிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத தோனி மற்றும் சென்னை ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினர்.

dhoni
dhoni

இந்நிலையில், எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரில் தோனியை பார்ப்பதற்காக சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இருந்துவருகின்றனர். இத்தகைய சூழலில் தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அல்லது இம்பேக்ட் வீரராக மட்டும் இருக்கக்கூடிய ஒரு அறிவிப்பை தோனி சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளார்.

தோனி
வாய்ப்பு தேடி அலைந்தபோது உதவிய பால்ய நண்பன்! பதிலுக்கு தோனி செய்த ’வாவ்’ செயல்! வைரல் புகைப்படம்

புதிய ஐபிஎல் சீசன், புதிய ரோல்! - தோனியின் ஸ்பெசல் அப்டேட்

தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மகேந்திர சிங் தோனி, நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் களமிறங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், “புதிய ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் செல்வதற்காக காத்திருக்க முடியவில்லை. அப்டேட்டுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ஜடேஜாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்த சென்னை நிர்வாகம், அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டும் தோனியிடமே கேப்டன்சியை ஒப்படைத்தது. அதில் மனவருத்தத்தில் இருந்த ரவிந்திர ஜடேஜாவை தோனி தான் சமாதானம் செய்து விளையாடவைத்தார்.

இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் சிக்சர் பவுண்டரி என விளாசி 5வது கோப்பைக்கு சென்னையை அழைத்துச்சென்ற ஜடேஜாவை, தோனி தோளில் தூக்கிவைத்து கொண்டாடினார்.

dhoni - jadeja
dhoni - jadeja

புதிய ரோலில் தோனி களமிறங்கினால் நிச்சயம் இம்பேக்ட் பிளேயராக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது, தோனிக்கு பதிலாக சமீர் ரிஸ்வி அல்லது ஆரவல்லி அவிநாஷ் இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பிருக்கிறது. கேப்டன்சியை பொறுத்தவரையில் மீண்டும் ஜடேஜாவிடமோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட் இடமோ செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. தோனி என்ன செய்யப்போகிறார் என்று விரைவில் தெரிந்துகொள்ளலாம்.

தோனி
மஹி-க்கு இதுதான் கடைசி ஐபிஎல்லா? Definitely Not! எதிர்ப்பார்க்காத பதிலை சொன்ன தோனியின் பால்ய நண்பர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com