India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள், எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என இங்கு பார்ப்போம்.
காம்பீர், பிசிசிஐ
காம்பீர், பிசிசிஐஎக்ஸ்

India Head Coach: 3000 விண்ணப்பங்கள்!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த மே 13ஆம் தேதி பிசிசிஐ அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கான காலக்கெடு மே 27 முடிவுற்ற சூழலில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இதுவரை 3000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் தோனி, சச்சின், சேவாக், ஹர்பஜன் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் பெயர்களும் மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களிலும் போலி விண்ணப்பங்கள் பி.சி.சி.ஐ-க்கு அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய் ஷா
ஜெய் ஷாட்விட்டர்

இதனால், அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்றே பேச்சே எல்லோரிடத்திலும் நிலவுகிறது. முன்னதாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சி.எஸ்.கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், டெல்லி கேபிட்டல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கெளதம் கம்பீர் உள்ளிட்டோருடன் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிக்க: ‘KKR வெற்றிக்கு உங்களை புகழும்போது மட்டும் இனிக்கிறதா’ - காம்பீரை வறுதெடுக்கும் தோனி ரசிகர்கள்!

காம்பீர், பிசிசிஐ
India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!

வெளிநாட்டு ஜாம்பவான்கள்: ஜெய் ஷா விளக்கம்

ஆனால், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, எந்தவொரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்தார். இதனால், வெளிநாட்டு பயிற்சியாளர்களை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து, கெளதம் கம்பீரை பயிற்சியாளராக கொண்டுவரும் திட்டத்தில் பி.சி.சி.ஐ இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால், இதுதொடர்பாக கெளதம் கம்பீரோ அல்லது பிசிசிஐயோ இதுவரை எந்த கருத்தையும் உறுதிபட தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், கெளதம் கம்பீரை 100 சதவிகிதம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும், இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: “என் நண்பனை சுட்டுக்கொன்னுட்டீங்களா?” - ரஷ்ய ராணுவத்தை பழிவாங்க 300 கி.மீ. நடந்துசென்ற உயிர் நண்பர்!

காம்பீர், பிசிசிஐ
"India Head Coachக்கு ஆஸ்திரேலிய வீரர்களா? புரளி கூறும் ஊடகங்கள்"- விளக்கமளித்த ஜெய் ஷா!

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான தகுதிகள்

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என இங்கு பார்ப்போம்.

* இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விண்ணப்பிக்க உள்ளவர்கள், 60 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும்.

* டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்து பெற்ற அணிக்கு குறைந்தது 2 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்

* ஐபிஎல் அணியின் அசோசியேட் உறுப்பினராக மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அவர், அணியின் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்.

* குறைந்தது 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.

* இந்தியராக இருந்தால் BCCI நிலை 3 சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

Head Coach: கெளதம் காம்பீர் நியமனம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா?

அந்த வகையில் பார்க்கப்போனால், 42 வயது நிரம்பிய கெளதம் கம்பீர், இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளிலும் 143 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதுபோல் 299 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் அணிகளிலும் ஆலோசகராக இருந்துள்ளார். இன்னொரு முக்கியமான விஷயம், அவர் அனைத்துவிதமான ஃபார்மெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றுவிட்டார். அதனால் கெளதம் கம்பீர் 100 சதவிகிதம் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இதையும் படிக்க: 3 நாட்களில் மரணம்.. புதிய வைரஸைக் கண்டுபிடித்த சீனா. அச்சத்தில் உலக நாடுகள்!

காம்பீர், பிசிசிஐ
India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

தோனி விண்ணப்பிக்கத் தகுதியில்லையா? ஏன்?

இந்திய அணிக்காக 3 ஃபார்மெட்டுகளிலும் கோப்பைகளை வென்று கொடுத்தவர் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. அந்த வகையில் பார்க்கப்போனால், கெளதம் கம்பீரைவிட, தோனி சிறந்தவர். எனினும், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் எந்தவொரு வீரரும், அனைத்து ஃபார்மெட்டுகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக இருக்கிறது.

தோனி
தோனிட்விட்டர்

அந்த வகையில், தோனி 2020-இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், அவர் இன்னும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதனால், அவரை தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்ய முடியாது. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பையின் போது அவர் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: ராணுவத்தை விமர்சித்த கவிஞர் ISI-ஆல் கடத்தல்...? கண்டுபிடிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

காம்பீர், பிசிசிஐ
India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com