"எதுவும் ஜெயிக்கலனாலும் ஜெயிச்ச மாதிரி இருப்பாங்க; கனவில் கூட RCBயை வீழ்த்த நினைப்பேன்" - கம்பீர்

இன்றைய ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மெண்டராக இருக்கும் கவுதம் கம்பீரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
rcb vs kkr
rcb vs kkr web

இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலி பொதுவாகவே கிரிக்கெட் களத்தில் ஆக்ரோசமாக இருக்கக்கூடிய ஒரு வீரர். அதுவும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரில் கோலி முறைத்துக்கொள்ளாத வீரர்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அதில் முதல் ஆளாக கம்பீருக்கு எதிரான மோதல் தொடங்கி, நவீன் உல் ஹக், அஸ்வின் மற்றும் கடைசியாக சமீபத்தில் ரச்சின் ரவிந்தீராவிற்கு செண்ட் ஆஃப் கொடுத்தது வரை பல வீரர்களுடன் விராட் கோலி சர்ச்சைக்குரிய மோதல்களில் ஈடுபட்டுள்ளார்.

rcb vs kkr
குஜராத்தில் நடந்தது கம்மி; மும்பையில் இன்னும் சத்தமாக ஹர்திக் “Booed" செய்யப்படுவார்- முன்னாள் வீரர்

கம்பீர் vs விராட் கோலி ரைவல்ரி எப்போது தொடங்கியது?

விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையேயான மோதல் என்பது கடந்த 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் விக்கெட்டின் போது ஏற்பட்டது. அப்போதே காரசாரமான வாக்குவாதத்தில் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

கம்பீர் - கோலி
கம்பீர் - கோலி

அதனைத்தொடர்ந்து கடந்த 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் மெண்டராக இருந்த கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மைதானத்திலேயே முட்டிக்கொண்டது. நவீன் உல் ஹக்கிற்கு எதிராக கோலி செய்த ஆக்ரோசமாக செயலை தொடர்ந்து, நவீன் உல் ஹக்கும் பதில் பேச, அது அப்படியே போட்டி முடிந்தபிறகும் தொடர்ந்தது. முடிவில் நவீன் உல் ஹக்கிற்காக கம்பீர் களமிறங்க கோலிக்கும் கம்பீருக்கும் மோதல் முற்றிக்கொண்டது. அந்த சண்டைக்காக கம்பீர் மற்றும் கோலி இருவருக்கும் 100% போட்டி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

virat kohli - gambhir
virat kohli - gambhirTwitter

இந்நிலையில் இன்று விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கவுதம் கம்பீரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதவிருக்கும் நிலையில், ஆர்சிபி அணி குறித்த தன்னுடைய எண்ணத்தை கவுதம் கம்பீர் வெளிப்படுத்தியுள்ளார்.

rcb vs kkr
”களம் 8-ல் மும்பை அணியை பொளந்துகட்டிய SRH"-மோசமான கேப்டன்சி..ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறு!

கனவில் கூட வீழ்த்த விரும்பும் ஒரு அணி RCB!

RCB அணி குறித்தும், அவர்களுக்கு எதிராக ஏன் வெற்றிபெற விரும்புகிறேன் என்பது குறித்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருந்த கவுதம் கம்பீர், “நான் எப்போதும் எதிர்த்து விளையாடும் ஒவ்வொரு முறையும், ஏன் என் கனவில் கூட தோற்கடிக்க விரும்பும் ஒரு அணி என்றால் அது RCB அணி தான்” என்று தெரிவித்தார். அதற்கு தொகுப்பாளர் ஆர்வத்துடன் ”ஏன்?” எனக்கேட்க ”நான் வீழ்த்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

virat kohli - gambhir
virat kohli - gambhir

ஒன்றுமே வெல்லவில்லை என்றாலும் எல்லாவற்றையும் வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள் என்று விமர்சித்து பேசிய அவர், “ஐபிஎல்லில் அவர்கள் இரண்டாவது மிக உயர்ந்த அணி, உரிமையாளர் மற்றும் அணி ஸ்குவாடில் கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் என ஸ்டார் வீரர்கள் உட்பட ஒரு ஆடம்பரமான அணி RCB. ஆனால் அவர்கள் இதுவரை எதையும் வெல்லவில்லை, ஆனால் எல்லாவற்றையும் வென்றுவிட்டதாக மட்டும் நினைத்துக்கொள்வார்கள். அந்த மாதிரியான அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் கவுதம் கம்பீர் கூறினார்.

rcb vs kkr
"பும்ராவை ஏன் பந்துவீச வைக்கவில்லை? நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு!" - ஹர்திக்கை விளாசும் வீரர்கள்!

49 AllOut-ஐ பெருமையாக மென்சன் செய்த கம்பீர்!

ஆர்சிபி அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று மிகப்பெரிய வெற்றிகளை கொண்டுள்ளதாகவும், ஸ்டார் வீரர்கள் நிரம்பிய ஒரு அணிக்கு எதிராக இதுபோன்ற வெற்றிகளை பெறுவதை விட வேறென்ன தேவைப்படபோகிறது என்றும் பெருமையும் கம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "KKR பெற்றுள்ள மூன்று சிறந்த வெற்றிகளும் ஆர்சிபி அணிக்கு எதிராகவே இருந்துள்ளது. ’2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL-ன் முதல் ஆட்டத்தில் RCB-க்கு எதிராக பிரண்டன் மெக்கல்லம் அடித்த 158 ரன்கள் இன்னிங்ஸ், ஆர்சிபியின் மோசமான ரெக்கார்டான 49 ரன் ஆல்அவுட், KKR அணி முதல் 6 ஓவர்களில் 100 ரன் எடுத்தது’ என மூன்று மிகப்பெரிய வெற்றிகள் ஆர்சிபிக்கு எதிராக தான் வந்துள்ளது.

கிறிஸ் கெய்ல், விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற பலமான ஆக்ரோஷமான பேட்டிங் யூனிட் அவர்களிடம் இருப்பதை நாங்கள் எப்போதும் அறிந்திருக்கிறோம். இப்படி ஸ்டார் வீரர்கள் நிரம்பிய ஒரு அணிக்கு எதிராக பெறும் வெற்றிகளை விட சிறப்பானதாக வேறென்ன கிடைக்கப்போகிறது? எனது ஐபிஎல் வாழ்க்கையில் நான் விரும்பும் ஒன்று என்றால், அது கிரிக்கெட் மைதானத்தில் சென்று ஆர்சிபி அணியை வீழ்த்துவதுதான்” என்று பேசியுள்ளார் கவுதம் கம்பீர்.

rcb vs kkr
அம்பயருடன் கத்திய பாண்டிங் - கங்குலி.. பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி! அஸ்வின் அதிரடியால் RR வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com