2வது T20 | விக்கெட் வீழ்ந்தாலும் சிக்ஸர் மழை பொழிந்த இங்கிலாந்து - இந்தியாவுக்கு 166 ரன் இலக்கு
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 132 ரன்னில் சுருட்டிய இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
165 ரன்கள் அடித்த இங்கிலாந்து..
சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வுசெய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக வாசிங்டன் சுந்தரும், ரிங்கு சிங்கிற்கு பதிலாக துருவ் ஜுரெலும் சேர்க்கப்பட்டனர்.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சால்ட், டக்கெட் இருவரும் ஓரிலக்க ரன்னில் வெளியேறினார். ஜோஸ் பட்லர் ஒருவர் மட்டும் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசி போராடினாலும், அவரை 45 ரன்னில் வெளியேற்றினார் அக்சர் பட்டேல். அதற்குபிறகு வந்த ஜேமி ஸ்மித் 22, கார்ஸ் 31 ரன்கள் என அடிக்க 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் சேர்த்துள்ளது.
166 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செயவிருக்கிறது.