Hardik-க்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பில்லை? ரோகித் வைத்த பெரிய செக்! என்ன நடந்தது?

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற வேண்டுமென்றால் முக்கியமான நிபந்தனை இந்திய கேப்டன் ரோகித் சர்மா வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மாX

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா என நடப்பு ஐபிஎல் தொடரானது பல பரபரப்பான சம்பவங்களால் களைகட்டி வருகிறது. பீக் ஆஃப் தி ஷோ-வாக ஹர்திக் பாண்டியா-ரோகித் சர்மா இடையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி மாற்றம் இருந்துவரும் நிலையில், ஐபிஎல்லை தாண்டி இந்தவிவகாரம் தற்போது நீண்டுள்ளது.

மும்பை கேப்டனாக மாறிய பிறகு ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் தகுந்த மரியாதையை ஹர்திக் பாண்டியா வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சில முன்னாள் வீரர்கள் “ரோகித் தற்போது கேப்டனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உலகக்கோப்பைக்கான வீரர்களை தீர்மானிக்கும் இடத்தில் அவர் தான் இருக்கப்போகிறார்” என்று கூறி கேப்டன்சி மாற்றத்திற்கு பதிலளித்தனர்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு அடுத்த 7 நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய அணி எந்த 11 வீரர்களை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்லப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ”பேட்டிங் எல்லாம் தரமா தான் இருக்கு, ஆனால் அந்த பந்துவீச்சு பிரிவு தான் கவலையா இருக்கு”, பும்ராவை எடுத்துட்டா இன்னொரு ஆர்சிபி பவுலிங் யூனிட் மாதிரி இருக்கு’ என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Rohit - Hardik
Rohit - HardikPT

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் இறுதிவாரம் அல்லது மே முதல்வாரம் தேர்ந்தெடுக்கப்படும் என கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக வீரர்கள் தேர்வு குறித்து மும்பையில் முதல்கட்ட கூட்டம் நடந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
'Sanju முதல் DK வரை'- 6 விக்கெட் கீப்பர்கள் இடையே கடும்போட்டி! யாருக்கு WC-ல் வாய்ப்பு? முழு அலசல்

ஹர்திக்கிற்கு வைக்கப்பட்ட நிபந்தனை..

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, கடந்த வாரம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மூன்றுபேரும் கலந்துகொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்தக்கூட்டத்தில், ஹர்திக் பாண்டியாவின் தேர்வுகுறித்து விவாதிக்கப்பட்டபோது, உலகக்கோப்பை அணியில் தேர்வுசெய்யப்பட வேண்டுமென்றால் அவர் தொடர்ந்து பந்துவீச வேண்டியதன் அவசியத்தை நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா முழுமையாக 4 ஓவர்களை வீசும்பட்சத்தில் தான், இந்திய அணியை பேலன்ஸ் செய்து கொண்டுபோக முடியும். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா எதிரணிகளுக்கு ரன்களை வாரிவழங்கி வருகிறார். அவர் பந்துவீசவந்தாலே அடித்து வெளுத்துவாங்கும் எதிரணி வீரர்கள், இதுவரை அவருடைய பவர்பிளே 4 ஓவரில் 44 ரன்களும், மிடில் 6 ஓவர்களில் 62 ரன்களும், ஒரு டெத் ஓவரில் 26 ரன்களும் விரட்டி துவம்சம் செய்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
கேப்டன் முதல் கோச் வரை.. அனைவரையும் வெளியேற்றுங்கள்! RCB வெற்றிபெற அதுதான் ஒரே வழி! - முன்னாள் வீரர்

மாற்றுவீரராக இருக்கும் துபே..

ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கான மாற்றுவீரராக சிஎஸ்கே அணியின் ஷிவம் துபே கவனத்தில் இருந்துவருகிறார். ஆனால் அவர் இதுவரை பேட்டிங்கில் மட்டுமே கவனம் ஈர்த்துவரும் நிலையில், ஐபிஎல்லில் பந்துவீசாமல் இருந்துவருகிறார். ஒருவேளை ஹர்திக்கிற்கு பதிலாக டி20 உலகக் கோப்பைக்கு துபே தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஒரு பகுதிநேர பந்துவீச்சாளராக மட்டுமே பயன்படுத்தப்படுவார், அணிக்கு 4 ஓவர்கள் கொடுக்கக்கூடிய முழு ஆல்ரவுண்டராக இருக்க வாய்ப்பில்லை.

துபே
துபே

அதனால் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீசக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வரும் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
RCB-ஐ வேறு ஓனருக்கு விற்கவேண்டும்.. அதுதான் IPL-க்கு நல்லது! BCCI-க்கு டென்னிஸ் ஜாம்பவான் கோரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com