CSK vs RCB| களத்திற்கு திரும்பிய பதிரானா, புவனேஷ்வர் குமார்.. சிஎஸ்கே பந்துவீச்சு! யாருக்கு வெற்றி?
2025 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரைவல்ரி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2024 ஐபிஎல் தொடரில் மே 18-ம் தேதி நடந்த லீக் போட்டியில் தோற்றதற்கு பழிதீர்க்க வேண்டும் என ஒட்டுமொத்த மஞ்சள் படை ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில், 17 வருடத்திற்கு பின் சென்னையில் சிஎஸ்கேவை ஆர்சிபி அணி வீழ்த்துமா என்ற எதிர்ப்பார்ப்பில் ஆர்சிபி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
பதிரானா, புவனேஷ்குமார் IN..
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகளும் ஒரு வெற்றிக்கு பிறகு இரண்டாவது போட்டியில் களம்காண்கின்றன.
இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் அவர்களின் பிரைம் பவுலர்களான பதிரானா மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
பிளேயிங் 11 - சிஎஸ்கே
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதீஷா பதிரனா, கலீல் அகமது
இம்பேக்ட் வீரர்கள் - ஷிவம் துபே, கமலேஷ் நாகர்கோடி, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ஷேக் ரஷீத்
பிளேயிங் 11 - ஆர்சிபி
விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா(கீப்பர்), டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹசில்வுட், யஷ் தயாள்
இம்பேக்ட் வீரர்கள் - சுயாஷ் சர்மா, ரசிக் தார் சலாம், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங், மனோஜ் பந்தகே