சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்... ரசிகர்களுக்கு நிர்வாகம் கொடுத்த அறிவிப்பு

சென்னை ராஜஸ்தான் இடையேயான போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே காத்திருக்குமாறு சென்னை நிர்வாகம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
csk
cskpt web

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறாதபட்சத்தில் இன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி மகேந்திரசிங் தோனியின் கடைசி போட்டியாக மாற வாய்ப்பு உள்ளது.

இன்று நடைபெறும் 61ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளனர்.

இன்று நடைபெறும் போட்டி மற்றும் ஆர்.சி.பி. அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு பிரச்னையின்றி முன்னேற முடியும்.

csk
CSK vs RR: தோனிக்கு இறுதிப் போட்டியா? ஆதிக்கம் செலுத்துகிறதா ராஜஸ்தான்? கடந்த சீசன்களில் நடந்ததென்ன?

ஒருவேளை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், அந்த அணியின் நட்சத்திர வீரர் தோனியின் கடைசி போட்டியாக இது அமைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி போட்டி சென்னையில்தான் நடைபெறும் என தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

- சென்னை அணி ஒவ்வொரு ஆண்டும், சென்னையில் நடக்கும் தனது இறுதி லீக் போட்டி முடிந்தபிறகு, அணியில் இருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவரும் மைதானத்தை சுற்றி சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பது வழக்கம்.

அதேபோல் நிர்வாகத்தினர் சென்னை அணியின் ஜெர்ஸியை ரசிகர்களுக்கு தூக்கி எறிந்து தங்களது அன்பை வெளிப்படுத்துவர். இந்நிலையில் இந்த போட்டி சென்னையில் நடைபெறும் இறுதி லீக் போட்டி என்பதால் சென்னை அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு போட்டி முடிந்ததும் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.

அதேசமயத்தில் தோனியின் ஓய்வு குறித்தான எந்த ஒரு அறிவிப்பும் இன்று வெளியாவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே நிர்வாகத்தில் இருந்து புதிய தலைமுறைக்கு கிடைத்த தகவலாக உள்ளது. மாறாக சி.எஸ்.கே வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட நன்றி அட்டையை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த அனைவருக்கும் நிர்வாகம் தருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com