CSK vs RR: தோனிக்கு இறுதிப் போட்டியா? ஆதிக்கம் செலுத்துகிறதா ராஜஸ்தான்? கடந்த சீசன்களில் நடந்ததென்ன?

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறாதபட்சத்தில் இன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி மகேந்திரசிங் தோனியின் கடைசி போட்டியாக மாற வாய்ப்பு உள்ளது.
CSK vs RR
CSK vs RRpt web

CSK vs RR

இன்று நடைபெறும் 61ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் அணி பட்டம் மட்டும்தான் பெறவில்லை. ஆனால் கடந்த சில சீசன்களில் அவர்கள் வலுவான அணியாக தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தோனி
தோனிட்விட்டர்

இன்று நடைபெறும் போட்டி மற்றும் ஆர்.சி.பி. அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு பிரச்னையின்றி முன்னேற முடியும். அதேப் போன்று ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிடும். ராஜஸ்தான் அணி தாங்கள் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

CSK vs RR
3வது கோப்பையை எடுத்து வைங்க.. முதல் அணியாக Playoffs சென்றது KKR! நரைன்-வருண் சுழலில் வீழ்ந்த MI!

ஆதிக்கம் செலுத்தும் ராஜஸ்தான்

ஒருவேளை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், அந்த அணியின் நட்சத்திர வீரர் தோனியின் கடைசி போட்டியாக இது அமைய வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி போட்டி சென்னையில்தான் நடைபெறும் என தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 28 முறை நேரடியாக மோதியுள்ளது. இதில் சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சென்னை உடனான கடைசி 4 போட்டிகளில் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி கடைசியாக வெற்றி பெற்றது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில்தான்.

அஸ்வின்
அஸ்வின்ட்விட்டர்

போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் மைதானம். நடப்பு தொடரில் சேப்பாக்கம் அணியில், முதல் இன்னிங்ஸ் ரன்கள் சராசரி 180 ஆக உள்ளது. அதேசமயத்தில் இங்கு நடந்த 6 போட்டிகளில் 4ல் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக இன்று டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன. அதேசமயத்தில் ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக பார்க்கையில், 82 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் 48 முறையும், இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 34 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

CSK vs RR
‘RCB-க்கு அடித்த ஜாக்பாட்..’ ரிஷப் பண்ட் விளையாட தடை.. கேப்டனாக பொறுப்பேற்கும் அக்சர் பட்டேல்!

முக்கிய வீரர்கள் யார்?

மிக முக்கியமான வீரர்கள் என கொண்டால், சென்னையில் ருதுராஜ், மிட்செல் மற்றும் துபேவை சொல்லலாம். தொடர்ந்து ரன்களைக் குவித்துவரும் ருதுராஜ் ஆரஞ்ச் கேப் போட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மறுமுனையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த சீசன்களைப்போல் அல்லாமல், சீராக ரன்களைக் குவித்து வருகிறார்.

ராஜஸ்தான் அணி அஸ்வினை மிகவும் நம்பியுள்ளது. ஏனெனில் சேப்பாக்கத்தில் மிக நுணுக்கமான அறிவைக் கொண்டவர் என்பதால் அவர் இன்றைய போட்டியில் மிக முக்கிய காரணியாகத் திகழ்வார்.

CSK vs RR
'ஏன் எந்தவிதமான எமோசனையும் வெளிப்படுத்த மாட்றீங்க?' - சுவாரசியமான பதில் கொடுத்த சுனில் நரைன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com