IPL | ரஸ்ஸல், ரிங்கு சிங்கை ஊதித்தள்ளிய CSK! ஒரே வீரராக ஜட்டு பிரமாண்ட சாதனை! KKR-க்கு முதல் தோல்வி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
CSK vs KKR
CSK vs KKRcricinfo

கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகிறது என்றாலே ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் தல தோனியின் பினிசிங் ஆட்டங்கள் களத்தில் தீயையே பற்றவைக்க கூடியவை. சிஎஸ்கே அணிக்கு எதிராக ரஸ்ஸல் அடித்த 36 பந்துகளுக்கு 88 ரன்கள் என்ற இன்னிங்ஸானது இப்போதும் மிரட்டக்கூடிய ஆட்டமாக இருந்துவருகிறது.

அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளிலும் வென்று தோல்வியே சந்திக்காமல், செம ஃபார்மில் இருந்துவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்கு எதிராக என்ன செய்யப்போகிறது, இவர்களின் காட்டடி பேட்டிங்கிற்கு எதிராக சென்னை அணி என்ன செய்யப்போகிறது என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கப்பட்டது.

CSK vs KKR
"அந்த 2 வீரர்களுடன் நான் அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்!" - யாரை சொல்கிறார் ரோகித் சர்மா?

ஜடேஜா சுழலில் சுருண்ட KKR!

கேப்டனாக முதல்முதலாக டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே சால்ட்டை வெளியேற்றி துஷார் தேஸ்பாண்டே அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதை பெரிதும் பொருட்படுத்தாமல் வந்தவேலையை தரமாக செய்த சுனில் நரைன், 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட முதல் 6 ஓவர்களுக்கு 56 ரன்களை எடுத்துவந்த கொல்கத்தா அணி நல்ல தொடக்கம் அமைத்தது.

sunil narine
sunil narine

எப்படியும் 200 ரன்களை கொல்கத்தா அணி குவித்துவிடும், இன்றையப் போட்டி இறுதிவரை அனல்பறக்கப்போகிறது என்று நினைத்தபோது தான், ரவிந்திர ஜடேஜாவுக்கு எதிராக ரிவர்ஸ் ஷாட் ஆடிய ரகுவன்சி, ஒரு மோசமான ஷாட்டால் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் சுனில் நரைனும் நடையை கட்ட, களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் எதற்குவந்தோம் என தெரியாமல் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார். ”என்ன பா நடக்குது இங்க” என கொல்கத்தா அணி யோசிப்பதற்குள், சிஎஸ்கே பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

KKR
KKR

புதிய பந்தில் ஸ்கிட்டாகி வந்த பந்து ஓல்டாக மாறியபிறகு நின்றுவர தொடங்கியது, ஸ்பின்னர்களுக்கு எதிராக டைம் செய்வதில் கொல்கத்தா வீரர்கள் கோட்டைவிட, ரச்சின் ரவிந்திராவை எல்லாம் பந்துவீச களமிறக்கி கேப்டன் ருதுராஜ் கலக்கிப்போட்டார். அடுத்தடுத்து களத்திற்கு வந்த ரமன்தீப் சிங், ரிங்கு சிங் என யாராலையும் பந்தை ஹிட் செய்ய முடியாமல் தடுமாறிய நிலையில், 32 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ஒரு சுமாரான பேட்டிங் ஆடினார் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். 17 ஓவர்கள் முடிவில் வெறும் 112 ரன்களே வர, கடைசியாக தான் களத்திற்கு வந்தார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

andre russell
andre russell

கடைசி 3 ஓவர்களுக்கு ரஸ்ஸல் எப்படியும் 50 ரன்களாவது எடுத்துவந்துவிடுவார், போட்டியில் உயிர் இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எகிறிய நிலையில், அதிரடி வீரர் ரஸ்ஸலுக்கு எதிராக ஸ்லோ கட்டர்களை சரியான லெந்தில் வீசிய முஸ்தஃபிசூர் ரன்களை விட்டுக்கொடுக்காமல் கலக்கிப்போட்டார். கடைசியில் ரஸ்ஸலால் கூட எதுவும் செய்யமுடியாமல் போக “கேகேஆர் என்ற சரவெடி புஸ்வானம் ஆனது”. வெறும் 10 ரன்னில் துஷார் தேஷ்பாண்டே ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார் ரஸ்ஸல்.

jadeja
jadeja

தரமான பவுலிங்கை வெளிப்படுத்திய சிஎஸ்கே பவுலர்கள் கொல்கத்தா அணியை 137 ரன்னில் சுருட்டினர். அற்புதமாக பந்துவீசிய ரவிந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். ஜடேஜா வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். முஸ்தபிஸூர் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தியதோடு இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

CSK vs KKR
“தேவையில்லை என நினைத்தால் கோலியை கூட நீக்குங்கள்!” - அஜித் அகர்கரிடம் கூறிய மைக்கேல் வாகன்!

கேப்டனாக முதல் அரைசதமடித்த ருதுராஜ்!

138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி நிதானமாகவே தொடங்கியது. 27 ரன்கள் இருந்தபோது ரச்சின் அவுட்டாகி வெளியேற, அதற்கு பிறகு கைக்கோர்த்த ருதுராஜ் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துநின்றுவருவதால் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி, கொல்கத்தா அணியை கம்பேக் கொடுக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட மிட்செல் மற்றும் ருதுராஜ் ஜோடி கொல்கத்தா அணியின் தோல்வியை முதல்பாதியிலேயே உறுதிசெய்தது.

ருதுராஜ் - தோனி
ருதுராஜ் - தோனி

களத்திற்கு வந்த சிக்சர் துபே அவருடைய பங்கிற்கு 3 சிக்சர்களை பறக்கவிட, நிலைத்து நின்று ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே கேப்டனாக தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவுசெய்து அணியை வெற்றிக்கு அழைத்துசென்றார். 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது.

CSK vs KKR
டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை.. தரமான கம்பேக் கொடுத்த MI! Hardik-க்கு முதல் வெற்றி!

HUG செய்துகொண்ட தோனி-கம்பீர்!

இறுதியாக பேட்டிங் செய்ய களத்திற்குவந்த தோனி, பார்க்கவேண்டும் என மைதானத்திற்கு வந்த ரசிகர்களின் ஆசையை மெய்யாக்கினார். தோனியை பார்த்த ரசிகர்கள் 125 டெசிபல் சத்தத்தில் மைதானத்தை அதிரச்செய்தனர்.

தோனியின் எண்ட்ரியின் போது எழுந்த சத்தத்தை தாங்கிகொள்ள முடியாத ரஸ்ஸல், தன்னுடைய காதை பொத்திக்கொண்ட சம்பவம் ரசிகர்களை சிரிக்கவைத்தது. அதேபோல போட்டி முடிந்த பிறகு களத்திற்கு வந்த கவுதம் காம்பீர், மகேந்திர சிங் தோனியை கட்டிப்பிடித்தது ”பிக்சர் ஆஃப் தி டே”வாக மாறியது.

CSK vs KKR
இந்த பேட் சரியில்ல.. இன்னும் நல்லா ரெடி பண்ணுங்க! சிஎஸ்கே மோதலுக்கு முன்னதாக தயாராகும் ரஸ்ஸல்!

முதல்வீரராக ஜடேஜா படைத்த பிரம்மாண்ட சாதனை!

இன்றைய போட்டியில் ஃபீல்டிங் பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா, ஐபிஎல்லில் தன்னுடைய 100வது கேட்ச்சை பதிவுசெய்தார். இதன்மூலம் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனையை பதிவுசெய்த ஜடேஜா, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்ச்கள் எடுத்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்தார்.

ஜடேஜா
ஜடேஜா

5 வருடங்களுக்கு பிறகு அரைசதமடிக்கும் முதல் சிஎஸ்கே கேப்டனாக மாறிய ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன்சியில் பொறுப்புடன் செயல்பட்டார். அதேபோல தோனியுடனான தன்னுடைய பயணம் குறித்து மனம் திறந்து பேசிய கெய்க்வாட், “சிஎஸ்கே அணியில் ஒரு வீரராக தன்னுடைய முதல் போட்டியில் கேப்டன் தோனியும் நானும் ஒன்றாக போட்டியை வென்றோம், தற்போது நான் கேப்டனாகவும் தோனி வீரராகவும் ஒன்று சேர்ந்து போட்டியை வென்றுள்ளோம், இது எனக்கு மிகவும் ஸ்பெசலானது” என்று தெரிவித்தார்.

ருதுராஜ்
ருதுராஜ்

ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன்” என அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள், பொலக்கப்போகிறார்கள் என்று போட்டிக்கு முன்னதாக அதிகப்படியான பில்டப் எழுந்த நிலையில், ரஸ்ஸலாவது, ரிங்குசிங்காவது என கலக்கிப்போட்ட சிஎஸ்கே அணி 3 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்துள்ளது.

CSK vs KKR
இவன் இப்படிதான் சார்.. தோத்துட்டே வந்து திடீர்னு விஸ்வரூபம் எடுப்பான்! மிரளவைக்கும் MI ஹிஸ்ட்ரி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com