டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை.. தரமான கம்பேக் கொடுத்த MI! Hardik-க்கு முதல் வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்X

5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2024 ஐபிஎல் தொடரானது ஒரு மோசமான தொடக்கமாகவே அமைந்தது. கேப்டன்சி மாற்றம், அணிக்குள் பிரச்னை, ரசிகர்கள் எதிர்ப்பு என எல்லாவற்றையும் தாண்டி விளையாடிய மும்பை அணி, முதல் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று சோகமுகமாகவே திரும்பியது. புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு எதுவுமே சரியாக செல்லாத நிலையில், கோவிலுக்கு படையெடுத்த பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடர் நன்றாக செல்வதற்காக பூஜையை செய்துவிட்டு திரும்பினார்.

ஒரு வெற்றியை கூட பதிவுசெய்யாத ஒரே அணியாக வலம்வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றிபெற்றே ஆகவேண்டிய 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்துவிளையாடியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

suryakumar yadav
suryakumar yadav

முதல் 3 போட்டியிலும் ஒரு முழுமையான அணியை கட்டமைப்பதில் கோட்டைவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 4வது போட்டியில் “சூர்யகுமார் யாதவ், மொஹமது நபி மற்றும் ரொமாரியோ ஷெஃப்பர்ட்” முதலிய 3 வீரர்களின் வருகையால் வலுவான ஒரு அணியாக மாறியது.

மும்பை இந்தியன்ஸ்
“கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹர்திக்கின் தவறல்ல” - ரசிகர்கள் Booed செய்வது குறித்து கங்குலி கருத்து!

234 ரன்கள் குவித்த MI அணி!

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு வலுவான தொடக்கம் தேவைப்பட்டது. அந்த பொறுப்பை தன் தோள்களில் ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா, இஷான் கிஷனை ஒருமுனையில் நிற்கவைத்துவிட்டு 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். 27 பந்துகளில் 49 ரன்கள் அடித்த ரோகித்தை அக்சர் பட்டேல் வெளியேற்ற, ரோகித் விட்ட இடத்திலிருந்து இஷான் கிஷான் அதிரடியை தொடர்ந்தார்.

rohit sharma
rohit sharma

காயத்திலிருந்து மீண்டுவந்து முதல் போட்டியில் பங்கேற்ற சூர்யகுமார் யாதவ் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட இஷான் கிஷன் ரன்ரெட்டை குறையாமல் பார்த்துக்கொண்டார். முக்கியமான நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த அக்சர் பட்டேல் இஷான் கிஷனை 42 ரன்னில் வெளியேற்ற, திலக்வர்மாவை 6 ரன்னில் வெளியேற்றி கலீல் அகமது போட்டியை திருப்பினார்.

ishan kishan
ishan kishan

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழ 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இருவரும் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் ஹர்திக் பாண்டியா விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள, மறுமுனையில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய டிம் டேவிட் கலக்கிப்போட்டார். ஹர்திக் பாண்டியா 39 ரன்னில் வெளியேற 19ஓவர் முடிவில் 202 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.

shepherd
shepherd

20வது ஓவரில் பேட்டிங் செய்த ரொமாரியோ ஷெப்பர்ட், ஆன்ரிச் நோர்க்கியா வீசிய ஓவரில் பேட்டிங்கில் ஒரு மாயாஜாலமே நிகழ்த்தினார். முதல் பந்தையே சிக்சராக பறக்கவிட்ட ஷெப்பர்ட், அடுத்தடுத்த 4 பந்துகளில் கண்ணைமூடி திறப்பதற்குள் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிவிட்டார். 5 பந்துகளுக்கு 26 ரன்களை எடுத்துவந்த ஷெப்பர்ட், கடைசிபந்தையும் சிக்சராக பறக்கவிட ஒரே ஓவரில் 32 ரன்களை எடுத்துவந்த மும்பை இந்தியன்ஸ் அணி 234 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டது. 10 பந்துகளில் 390 ஸ்டிரைக்ரேட்டில் 39 ரன்களை குவித்த ஷெப்பர்ட், ஒருகனம் பொல்லார்டாக மாறினார்.

மும்பை இந்தியன்ஸ்
தோனிக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய செக்.. ருதுராஜ் செய்த 4 மோசமான தவறுகள்! SRH அசத்தல் வெற்றி!

கடைசிவரை போராடிய ஸ்டப்ஸ்..

235 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு, டேவிட் வார்னரை 10 ரன்னில் வெளியேற்றிய ஷெப்பர்ட் கலக்கிப்போட்டார். முதல் விக்கெட்டை விரைவாகவே இழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பிரித்வி ஷா மற்றும் அபிஷேக் போரல் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். மும்பையை சேர்ந்தவரான பிரித்வி ஷா, 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி பொறுப்பை தனதாக்கிக்கொண்டார். உடன் அபிஷேக் போரலும் 5 பவுண்டரிகளை விரட்ட 11 ஓவர்களுக்கு 110 ரன்களை எடுத்துவந்து, போட்டியை உயிர்ப்புடன் வைத்திருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

பும்ரா
பும்ரா

இப்படியே போனா கடினமான நிலைக்கு போட்டி சென்றுவிடும் என்று பயந்த ஹர்திக் பாண்டியா, விக்கெட்டை தேடி ஜஸ்பிரித் பும்ராவிடம் பந்தை கொடுத்தார். ஒரு அற்புதமான யார்க்கர் பந்தை வீசிய பும்ரா, நம்பிக்கை கொடுத்த பிரிதிவி ஷாவை 66 ரன்களில் ஸ்டம்பை தகர்த்து வெளியேற்றினார். உடன் போரலும் 41 ரன்னில் வெளியேற, அடுத்தடுத்து வந்த பண்ட், அக்சர் பட்டேல், லலித் யாதவ் என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கிட்டத்தட்ட மும்பை அணியின் வெற்றி உறுதியானது.

ஸ்டப்ஸ்
ஸ்டப்ஸ்

”விக்கெட் போனா என்ன களத்துல நான் இருக்கன்” என்று 7 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய இளம் வீரர் ஸ்டப்ஸ் மும்பை அணிக்கு பயம் காட்டினார். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு 71 ரன்கள் அடித்து ஸ்டப்ஸ் போராடினாலும், போட்டியின் முடிவில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தது.

மும்பை இந்தியன்ஸ்
4,6,6,6,4,6! ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ஷெப்பர்ட்! Pollard-க்கான மாற்று வீரரா? 234 ரன்கள் குவித்த MI!

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை..

10 பந்துகளில் 390 ஸ்டிரைக்ரேட்டுடன் 39 ரன்களை குவித்த ஷெப்பர்ட், ஐபிஎல் வரலாற்றில் 10 பந்துகளை சந்தித்து அதிக ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடிய முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் இருந்த பாட் கம்மின்ஸ், ரஸ்ஸல், டி வில்லியர்ஸ், க்றிஸ் கெய்ல் போன்ற வீரர்களின் சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை 14 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை டிஃபண்ட் செய்திருக்கும் மும்பை அணி, ஒருமுறை கூட தோற்றது இல்லை என்ற சாதனையை தொடர்ந்துவருகிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

இதற்கும் ஒருபடிமேல் சென்று தங்களுடைய முழு பலத்துடன் கம்பேக் கொடுத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, அனைத்து டி20 கிரிக்கெட்டிலும் ஒரு இன்னிங்ஸில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் குவித்த முதல் அணி என்ற உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளது. இதற்குமுன் 226 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்த நிலையில், அதனை முறியடித்து 234 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையில் தங்களுடைய பெயரை பொறித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா மும்பை அணி கேப்டனாக தன்னுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளார். இனி தான் பல்தான்ஸ் ஆட்டம் ஆரம்பமாகிறது!

மும்பை இந்தியன்ஸ்
"அந்த 2 வீரர்களுடன் நான் அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்!" - யாரை சொல்கிறார் ரோகித் சர்மா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com