இந்த பேட் சரியில்ல.. இன்னும் நல்லா ரெடி பண்ணுங்க! சிஎஸ்கே மோதலுக்கு முன்னதாக தயாராகும் ரஸ்ஸல்!

சிஎஸ்கே மோதலுக்கு முன்னதாக ஆண்ட்ரே ரஸ்ஸல் தன்னுடைய பேட்டை தயார் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Russell
Russellweb

சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது, அதில் ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங் செய்கிறார் என்றாலே போட்டியில் அனல்பறக்கும். அதுவும் சிஎஸ்கே அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில் வைத்தே, KKR-க்காக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பந்தை பூங்காவிற்கு வெளியே பறக்கவிடுவதில் கைதேர்ந்தவர் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

எப்போதும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்யும் ஆண்ட்ரே ரஸ்ஸல், எதிர்வரும் 2025 மெஹா ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளின் பார்வையையும் தன்மீது திருப்பிவருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காமல் இருந்துவரும் கொல்கத்தா அணியின் பின்பலமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் இருந்துவருகிறார்.

russell
russell

இந்நிலையில், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ரைவல்ரி போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் நிலையில், போட்டிக்கு தயாராகும் வகையில் தன்னுடைய பேட்டிங்கிற்கும் டிரெய்னிங் கொடுத்துவருகிறார் ஆண்ட்ரே ரஸ்ஸல். தாம் விளையாட போகும் பேட் சரியில்லை என்பதை உணர்ந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், பேட்டை சரிசெய்ய சொல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Russell
டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை.. தரமான கம்பேக் கொடுத்த MI! Hardik-க்கு முதல் வெற்றி!

இந்த பேட் சரியில்ல.. இன்னும் நல்லா ரெடி பண்ணுங்க!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் “ட்ரே ரஸ்” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், தன்னுடைய பேட்டின் எடை கூடுதலாக இருப்பது தனக்கு நிறைவாக இல்லை என்பதால் அதை மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ரஸ்ஸல். தான் எப்போதும் பயன்படுத்தும் பேட்டின் எடையை விட கூடுதலாக 16 கிராம் இருப்பதை கண்டறிந்த ரஸ்ஸல், அதை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

கேகேஆர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பேட் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்ற ஒவ்வொரு பேட்டையும் எடைபோடுகிறார்கள். ரஸ்ஸலின் பேட்டின் எடை என்பது 1299 கிராம் எடை கொண்டது. ஆனால் மற்றொரு பேட்டானது 1315 கிராம் எடை காட்டியது. கூடுதலாக ஒரு பேட்டை எடைபோட்டபோது 1299 கிராம் காட்டியது. 1315 கிராம் பேட்டை பிடித்த பிறகு மகிழ்ச்சியற்ற ரஸ்ஸல், "எனக்கு இது நிறைவாக தோன்றவில்லை, இது கனமாக இருக்கிறது. நான் இதிலிருந்து சிறு பகுதியை அகற்ற விரும்புகிறேன்” என்று ரஸ்ஸல் தன்னுடைய பேட்டை தயார்செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Russell
"அந்த 2 வீரர்களுடன் நான் அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்!" - யாரை சொல்கிறார் ரோகித் சர்மா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com