bcci announced annual contracts
பிசிசிஐ, வருண் சக்கரவர்த்திx page

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் | புதிதாக இடம்பிடித்த வருண்.. ஸ்ரேயாஸ்-க்கு மீண்டும் இடம்! முழுவிபரம்

பிசிசிஐ 2024-25 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர், இந்த முறை பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.
Published on

பிசிசிஐ 2024-25 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர ஒப்பந்த அறிக்கையின்படி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர், A+ கேட்டகிரியில் தொடர்கின்றனர். அதேநேரம், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர், இந்த முறை பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முறையே பி மற்றும் சி பிரிவில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஏ பிரிவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

bcci announced annual contracts
வருண் சக்கரவர்த்திx page

முதல்முறையாக இணைந்த வருண் சக்கரவர்த்தி

ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக செயல்பட்டதை தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரும் முதல்முறையாக பிசிசிஐயின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

bcci announced annual contracts
IPL சூதாட்ட சர்ச்சை | 10 அணி வீரர்களுக்கும் பிசிசிஐ அலெர்ட்.. கண்காணிக்கும் குழு!

பிரிவுகளும் வீரர்கள் இடம்பிடித்துள்ள விவரமும்

A+ - ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

A - முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ரிஷப் பண்ட்

B - சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஷ்வி ஜெய்ஷ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்

C - ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ரஜத் படிதார், த்ருவ் ஜுரெல், சர்ஃப்ராஸ் கான், நிதிஷ் குமார், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா

bcci announced annual contracts
virat - rohitpt web

ஒப்பந்த ஊதிய விவரம்:

கிரேடு A+ வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாகவும், கிரேடு A வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் ஊதியமாகவும், கிரேடு B கிரிக்கெட் வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், கிரேடு C பிரிவில் உள்ள வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாயும் ஊதியமாக பிசிசிஐ வழங்குகிறது.

bcci announced annual contracts
பார்டர் - கவாஸ்கர் டிராபி தோல்வி.. 3 பேரை அதிரடியாய் நீக்கும் பிசிசிஐ.. பின்னணியில் இருப்பது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com