எப்படி இருக்கு Playing XI | CSK | ரஹானே இடத்தில் திரிபாதி.. அஷ்வின் - நூர் ஸ்பின் கூட்டணி!
ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு அணியும் தங்கள் பழைய வீரர்கள் சிலரை மீண்டும் வாங்கியிருக்கிறார்கள். பல புதிய வீரர்களையும் வரவேற்றிருக்கிறார்கள். எதிர்பார்த்ததை விட பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியின் சிரந்த பிளேயிங் லெவனும் எப்படி இருக்கும் என்று அலசுவோம். இந்தக் கட்டுரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிப் பார்ப்போம்.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிறைய மாற்றங்கள் கண்டிருக்கிறது. டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரை மீண்டும் வாங்கியிருக்கும் அந்த அணி, ரவிச்சந்திரன் அஷ்வின், சாம் கரன் போன்ற முன்னாள் ஸ்டார்களை மீண்டும் சேப்பாக்கத்துக்கு அழைத்து வந்திருக்கிறது.
இவர்களோடு நூர் அஹமது, ராகுல் திரிப்பாதி, கலீல் அஹமது ஆகியோரை புதிதாக வரவேற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சமீப காலம் போல் இல்லாமல் நிறைய தமிழ்நாடு வீரர்களை வாங்கியிருக்கிறது சூப்பர் கிங்ஸ். ரவிச்சந்திரன் அஷ்வின், விஜய் ஷங்கர், குர்ஜப்னீத் சிங், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரை இந்த ஏலத்தில் அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
2025 ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் வாங்கிய வீரர்கள்:
ஷேக் ரஷீத் (30 லட்சம்),
ஆண்ட்ரே சித்தார்த் (30 லட்சம்),
டெவான் கான்வே (6.25 கோடி),
வன்ஷ் பேடி (55 லட்சம்),
ரச்சின் ரவீந்திரா (4 கோடி - RTM),
அன்ஷுல் கம்போஜ் (3.4 கோடி),
சாம் கரன் (2.4 கோடி),
தீபக் ஹூடா (1.7 கோடி),
ஜேமி ஓவர்டன் (1.5 கோடி),
விஜய் ஷங்கர் (1.2 கோடி),
கமலேஷ் நாகர்கோட்டி (30 லட்சம்),
ராமகிருஷ்ணா கோஷ் (30 லட்சம்),
நூர் அஹமது (10 கோடி),
ஷ்ரேயாஸ் கோபால் (30 லட்சம்),
முகேஷ் சௌத்ரி (30 லட்சம்),
கலீல் அஹமது (4.8 கோடி),
குர்ஜப்னீத் சிங் (2.2 கோடி),
நாதன் எல்லிஸ் (2 கோடி).
ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி),
ரவீந்திர ஜடேஜா (18 கோடி),
மதீஷா பதிரானா (13 கோடி),
ஷிவம் தூபே (12 கோடி),
மஹேந்திர சிங் தோனி (4 கோடி)
இளமை, அனுபவம் என இரண்டும் கலந்து பல்வேறு வீரர்களை வாங்கியிருக்கிறது சூப்பர் கிங்ஸ். இவர்களை வைத்து சிறந்த பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்று பார்ப்போம்.
சூப்பர் கிங்ஸின் சிறந்த பிளேயிங் XI
1) ருதுராஜ் கெய்க்வாட்
2) டெவான் கான்வே
3) ராகுல் திரிப்பாதி
4) ஷிவம் தூபே
5) ரவீந்திர ஜடேஜா
6) மஹேந்திர சிங் தோனி
7) சாம் கரன்
8) ரவிச்சந்திரன் அஷ்வின்
9) நூர் அஹமது
10) கலீல் அஹமது
11) மதீஷா பதிரானா
இம்பேக்ட் ஆப்ஷன்கள்:
தீபக் ஹூடா
விஜய் ஷங்கர்
முகேஷ் சௌத்ரி
அன்ஷுல் கம்போஜ்
குர்ஜப்னீத் சிங்
இது சூப்பர் கிங்ஸின் ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்துக்கு ஏற்ற சரியான அணி. அஷ்விம், ஜடேஜா, நூர் என மிரட்டலான ஸ்பின் ஆப்ஷன்கள் இருக்கின்றன. வேகப்பந்துவீச்சுக்கு பதிரானா, சாம் கரன் மற்றும் கலீல் அஹமது. ஒருவேளை கூடுதல் ஸ்பின் ஆப்ஷன் வேண்டும் என்றால் சாம் கரனுக்குப் பதில் ரச்சினை களமிறக்கலாம். அவர் நம்பர் 3 அல்லது 4ல் வரலாம்.
இல்லையெனில், இம்பேக்ட் பிளேயர் மூலமும் கூடுதல் பௌலிங் ஆப்ஷனைக் கொண்டுவரலாம். முகேஷ் சௌத்ரி, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங் ஆகியோர் கூடுதல் ஃபாஸ்ட் பௌலிங் ஆப்ஷனாக இருப்பார்கள். பேட்டிங், பௌலிங் இரண்டுமே தேவை என்றாலும் ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஸ்பின்னுக்கு தீபக் ஹூடா, வேகத்துக்கு விஜய் ஷங்கர். இப்படி தேவைக்கு ஏற்றமாறு அவர்களால் எந்த வீரரையும் பயன்படுத்தலாம்.
சேப்பாக்கத்துக்கு வெளியே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றால், ஒருவேளை 3 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்று நினைத்தால், நூர் அஹமதுக்குப் பதிலாக நாதன் எல்லிஸை இறக்கலாம். விஜய் ஷங்கரை 12வது வீரருக்கான ஆப்ஷனாக எடுத்துக்கொள்ளலாம்.
பேட்டிங்கில் பெரிதாக எதுவும் மாறப்போவதில்லை. ராகுல் திரிபாதி எதிர்பார்த்ததுபோல் ஆடவில்லை என்றால் தீபக் ஹூடா, விஜய் ஷங்கர் இருவரில் ஒருவர் முதல்கட்ட அணிக்குள் நுழையலாம். இல்லையெனில் ரச்சினைக் கூட களமிறக்கிவிட்டு, சாம் கரனுக்குப் பதில் ஒரு இந்திய பௌலரை சேர்க்கலாம்.
ஆகமொத்தம் வழக்கம்போல் பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கும் வகையில் ஒரு அணியைக் கட்டமைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!