ஸ்டார்க் - ஹர்சல் - ஷசாங் - கம்மின்ஸ்
ஸ்டார்க் - ஹர்சல் - ஷசாங் - கம்மின்ஸ்PT

’பணம் வேஸ்ட்.. இவங்களாம் தேர மாட்டாங்க?’ சர்ச்சையை தாண்டி மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மாறிய 5 வீரர்கள் ஏலம்!

2024 ஐபிஎல் தொடரில் சில வீரர்களின் தேர்வானது ரசிகர்களின் அதிருப்தியை தாண்டி, சொந்த அணிகளாலேயே எதற்கு எடுத்தோம் என கூறுமளவு சென்றது. ஆனால் அவர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பிரமிக்கவைத்தனர்.

1. ஷசாங் சிங்

2024 ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு “ஷசாங் சிங்” என்று கூறினால் அது மிகையாகாது. ஐபிஎல் ஏலத்தின் போது ஷஷாங்க் சிங் என்ற பெயர் வாசிக்கப்பட்டபோது நிச்சயமாக நிறைய குழப்பம் ஏற்பட்டது. ஷசாங் சிங் என்ற இளம் வீரரை எடுப்பதற்கு பதிலாக, மூத்த வீரர் மற்றும் முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரரை வாங்கிவிட்டோம், எங்களுக்கு இந்த வீரர் வேண்டாம் என பஞ்சாப் கிங்ஸ் அணி கூறியது.

ஷசாங்
ஷசாங்

பல்வேறு குழப்பங்களுக்கு இடையே “நாங்கள் சரியான வீரரை தான் எடுத்துள்ளோம், அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என பஞ்சாப் கிங்ஸ் அணி கூற, ”நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என்று ஷசாங் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் பொதுவெளியில் தெரிவித்தார். ஏதோ பேச்சுக்கு சொல்கிறார் என்ன செய்துவிடப்போகிறார் என்று நினைத்த போது, கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியை தனியாளாக வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

shashank singh
shashank singhcricinfo

அதைப்பார்த்த ரசிகர்கள் “பூனைனு நினைச்சு புலியை எடுத்துவச்சிருக்காங்க, நல்லவேளை தவறா ஏலம் எடுத்ததால நல்ல வீரரை வாங்கிட்டாங்க” என வாயடைந்து போயினர். ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை கண்முன் நிகழ்த்திய ஷசாங் சிங், உண்மையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக மாறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 415 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அடுத்த சீசனில் தக்கவைக்கப்படும் ஒரு வீரராக ஷசாங் மாறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்டார்க் - ஹர்சல் - ஷசாங் - கம்மின்ஸ்
‘இதனால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை..’! சஞ்சு சாம்சனை சாடிய சுனில் கவாஸ்கர்!

2. டிராவிஸ் ஹெட்

நடப்பு ஐபிஎல் சீசனில் பல பந்துவீச்சாளர்களின் எதிரியாகவே பார்க்கப்பட்ட ஒரு வீரர் என்றால் அது டிராவிஸ் ஹெட் தான். 287, 277 என மூன்று முறை 250+ ரன்களை அடித்தபோது, சன்ரைசர்ஸ் அணியின் சூப்பர் ஹீரோவாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். ஆனால் 6.50 கோடிக்கு வாங்கிய அவர் மீது தொடக்கத்தில் அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்கவில்லை, மாறாக மயங் அகர்வால் தான் தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்தப்பட்டார்.

Travis Head
Travis Head pt desk

ஆனால் 90 ஸ்டிரைக்ரேட்டில் மோசமாக விளையாடிய மயங் அகர்வால் வெளியேறிய பிறகு தான், அணி நிர்வாகம் டிராவிஸ் ஹெட் மீது நம்பிக்கை வைத்தது. 2016-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒப்பந்தத்தைப் பெற்ற டிராவிஸ் ஹெட், நடப்பு ஐபிஎல் சீசனை ஒரு கொண்டாட்ட திருவிழாவாகவே மாற்றினார்.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக மாற்றும் அவர்களின் முடிவு ஒரு சிறந்த முடிவாக இருந்தது, ஏனெனில் முதல் பந்திலிருந்தே தாக்குதல் நடத்தும் அவருடைய பேட்டிங் சீசன் முழுவதும் பெரிய டோட்டல்களை அமைப்பதில் முக்கியபங்காற்றியது. அவர் களத்தில் நின்றுவிட்டலே பெரிய ரன்கள் வரும் என கூறுமளவு ஒரு சிறந்த சொத்தாகவே சன்ரைசர்ஸ் அணிக்கு மாறினார். அவர் 0 ரன்னில் விரைவாகவே வெளியேறும்போது மட்டும் தான் மற்ற அணிகளால் SRH அணியை வீழ்த்தவே முடிந்தது. இறுதிப்போட்டியில் சரியாக செயல்பட முடியாமல் போனாலும், அவர் 15 போட்டிகளில் விளையாடி 567 ரன்கள் குவித்தார்.

ஸ்டார்க் - ஹர்சல் - ஷசாங் - கம்மின்ஸ்
“இங்கே செய்யமுடியாததை டி20 உலகக்கோப்பையில் செய்யுங்கள்..”! சஞ்சு சாம்சனுக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு!

3. ஹர்சல் பட்டேல்

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த வீரர் என்றால் அது ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட ஹர்சல் பட்டேல் தான். கடந்த 2022 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை பிளேஆஃப் வரை எடுத்துச்சென்ற முக்கிய வீரராக இருந்தாலும், ஹர்சல் பட்டேல் ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்படவில்லை. காயம் முதலிய காரணங்களால் ஃபார்ம் அவுட்டுக்கு சென்ற அவரை, திறமை மீது நம்பிக்கை வைக்காமல் வெளியேற்றியது ஆர்சிபி அணி.

ஹர்சல் பட்டேல்
ஹர்சல் பட்டேல்

ஆனால் ஆர்சிபி அணியின் அந்த தவறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் வரமாக மாறியது. ஹர்சல் பட்டேலின் திறமை மீது நம்பிக்கை வைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, ஏலத்தின் போது 10.50 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. பாஞ்சப் அணியின் அந்த முடிவை மதித்த ஹர்சல் பட்டேல், தன்னுடைய திறமையை மீண்டும் வெளிக்கொண்டுவந்து விக்கெட் வேட்டை நடத்தினார். பஞ்சாப் அணியில் அவர் ஒருவர் மட்டுமே பிரகாசிக்கும் விளக்காக இருந்தார். தொடக்கத்தில் எகானமி ரேட் குறித்த கவலை இருந்தாலும், தேவையான நேரத்தில் விக்கெட்டை எடுத்துவர ஹர்சல் பட்டேல் தவறியதில்லை.

ஹர்சல் பட்டேல்
ஹர்சல் பட்டேல்

தொடரின் இரண்டாவது பாதியில் பந்து நின்றுவர தொடங்கிய போது, சிறந்த பவுலராக ஜொலித்த அவர் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உரிமையாளரின் சிறந்த தேர்வாக மாறினார். அதுமட்டுமல்லாமல் 2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக மாறி ஊதா நிற தொப்பியையும் தட்டிச்சென்றார். இதை ஆர்சிபி நிர்வாகம் மற்றும் ஆர்சிபி ரசிகர்களே எதிர்ப்பார்க்கவில்லை.

ஸ்டார்க் - ஹர்சல் - ஷசாங் - கம்மின்ஸ்
’இடது கை ஓப்பனர்+ பகுதிநேர ஸ்பின்னர்’! ஜெய்ஸ்வாலா? அபிஷேக் சர்மாவா? இந்திய அணிக்கு ஹர்பஜன் கோரிக்கை!

4. மிட்செல் ஸ்டார்க்

2024 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியால் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ”மிட்செல் ஸ்டார்க்” ஐபிஎல் வரலாற்றில் அதிகவிலைக்கு வாங்கப்பட்ட வீரராக மாறினார். அதிகபட்ச விலைக்கு ஒரு ஆஸ்திரேலியா வீரர் சென்றதால் அதிர்ச்சியடைந்த பலர், “ஜஸ்பிரித் பும்ராவை விடவா மிட்செல் ஸ்டார்க் சிறந்த பவுலர்? சுமாரான ஃபார்மில் இருக்கும் ஒருவரை எப்படி இவ்வளவு விலைக்கு வாங்குகிறார்கள்? நீங்க பணத்தை வேஸ்ட் பண்ணிட்டிங்க” என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்

ஆனால் ஸ்டார்க் குறித்து அணியின் வழிகாட்டியான கம்பீர் பேசும்போது, “மிட்செல் ஸ்டார்க் கிடைத்தது எங்கள் அணிக்கு சிறந்த கொள்முதல், அவர் நிச்சயம் எங்கள் பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்துவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Starc - Gambhir
Starc - Gambhir

ஆனால் கம்பீர் கூறியதற்கு மாறாக லீக் போட்டிகளில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டையே எடுக்காமல் மோசமான தொடக்கத்தை பெற்றார். ”பவுலிங்கில் 4 அரைசதங்கள் அடித்துவிட்டார், இன்னும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை” என கடுமையாக தாக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், “நான் அடிக்கும் போது நீங்க பேசவே மாட்டிங்க கம்முனு இருப்பிங்க” என்ற வடிவேல் காமெடி வசனத்திற்கேற்ப குவாலிஃபயர் 1 மற்றும் பைனல் என இரண்டு முக்கியமான போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்தி “தான் ஒரு பிக் மேட்ச் பிளேயர்” என்பதை பறைசாற்றினார்.

மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்

13 போட்டிகளில் விளையாடிய அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதிப் போட்டியில் அபிஷேக் ஷர்மாவை அவர் க்ளீன் போல்ட் ஆக்கிய பந்துவீச்சு நடப்பு ஐபிஎல் சீசனின் சிறந்தவற்றில் ஒன்று என்றே சொல்லலாம். கண்ணில் ஒத்திக் கொள்வதுபோல் இருந்தது. இதுவரை இறுதிப்போட்டிகளில் தோற்றதேயில்லை என்ற சாதனையோடு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

ஸ்டார்க் - ஹர்சல் - ஷசாங் - கம்மின்ஸ்
மேஜிக் டெலிவரி வீசிய ஸ்டார்க்! ஒன்றுமே புரியாமல் நின்ற அபிஷேக் சர்மா! 8 விக். காலி.. சரிந்தது SRH!

5. பாட் கம்மின்ஸ்

2024 ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தால், நிச்சயம் அது “பாட் கம்மின்ஸ்” தான் என்று கூறினால் அது மிகையாகாது. ஏனென்றால் கோப்பை வென்ற ஸ்ரேயாஸ் ஐயரிடம் பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் தரமான பவுலர்கள் இருந்தனர். ஆனால் சன்ரைசர்ஸ் அணியில் பேட்டிங்கை வைத்து மட்டுமே ஒரு அணியை இறுதிப்போட்டிவரை எடுத்துவந்த பெருமை பாட் கம்மின்ஸையே சேரும். தொடக்கத்தில் அதிகப்படியான ரன்கள் குவிக்கப்பட்ட போதும் தன்னுடைய பவுலர்கள் மீது அவர் எந்த குறையையும் கூறவில்லை. மாறாக ஆட்டத்தின் போது அவர் எடுத்த சிறந்த நகர்த்தல்கள் தான் சன்ரைசர்ஸ் அணியை இறுதிப்போட்டிவரை எடுத்துவந்தது.

dhoni, cummins
dhoni, cumminspt web

எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமென்றால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில், இடது கை ஸ்பின்னருக்கு ஆடுகளம் சிறந்ததாக இருக்கிறது என தெரிந்ததும், ஒரு பார்ட் டைம் ஸ்பின்னரான அபிஷேக் சர்மாவை 4 ஓவர்கள் வீசவைத்து ராஜஸ்தான் அணியை காலிசெய்தார் பாட் கம்மின்ஸ். இதில் முக்கியமான விசயம் என்றால் அபிஷேக் சர்மா அதுவரை மொத்தமே லீக் போட்டிகளில் 3 ஓவர்கள் தான் வீசியிருந்தார். இதுமட்டுமில்லாமல் சிறந்த ஃபீல்ட் செட்டிங், பவுலிங் ரொட்டேசன் என பல காரணங்களை பாட் கம்மின்ஸின் கேப்டன்சிப்பிற்கு சொல்லிக்கொண்டே போகலாம்.

ஷபாஸ் அகமது - அபிஷேக் சர்மா
ஷபாஸ் அகமது - அபிஷேக் சர்மா

ஆஸ்திரேலியா அணியில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையை வென்றபோதும், டி20 உலகக்கோப்பை கேப்டனாக பாட் கம்மின்ஸ் தேர்வுசெய்யப்படவில்லை. அப்படி இருந்த போது ஒரு உலகத்தரம் வாய்ந்த டி20 லீக்கிற்கு 20 கோடி கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட பாட் கம்மின்ஸ்ஸை, கொஞ்சம் கூட யோசிக்காமல் கேப்டனாக நியமித்தது சன்ரைசர்ஸ் அணி. அப்போது தான் தென்னாப்பிரிக்கா டி20 லீக் கோப்பையை மார்க்ரம் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி வென்றிருந்தது. அதையும் மீறி பாட் கம்மின்ஸுக்கு சென்ற கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்

உண்மையில் இந்த 5 வீரர்களும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் தள்ளினார்கள் என்றால் பொய்யல்ல!

ஸ்டார்க் - ஹர்சல் - ஷசாங் - கம்மின்ஸ்
SRH தோல்வியால் மனம் உடைந்த காவ்யா மாறன்... ஆறுதல் சொன்ன அமிதாப் பச்சன்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com