SRH தோல்வியால் மனம் உடைந்த காவ்யா மாறன்... ஆறுதல் சொன்ன அமிதாப் பச்சன்!

காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து, அவருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்
காவ்யா மாறன் - அமிதாப் பச்சன்
காவ்யா மாறன் - அமிதாப் பச்சன்ட்விட்டர்

17ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கி, 10.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும், அதன் உரிமையாளரான ஷாருக்கான் மற்றும் ஜூஹி சால்வா மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கடந்தவாரம் அதீத வெப்பம் காரணமாக ஷாருக்கான் உடல்நலம் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

காவ்யா மாறன் - அமிதாப் பச்சன்
வெப்ப வாதம்... நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?

மருத்துவமனை டிஸ்சார்ஜுக்குப் பின் அவர் கலந்துக்கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான். இந்நிகழ்ச்சி அவருக்கு வெற்றிநிகழ்வாக மாறியதால், உடன் இருந்த தன் மகள் சுஹானா கானை அணைத்துக்கொண்டும், மனைவி கௌரி கானை முத்தமிட்டும் மகிழ்ச்சியை கொண்டாடினார். மேலும் வீரர்களையும் கட்டி அணைத்து தனது மகிழ்சியை பகிர்ந்துக்கொண்டார் ஷாருக்.

அதே சமயம் சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

காவ்யா மாறன் கண்ணீர்
காவ்யா மாறன் கண்ணீர்

இந்நிலையில் காவ்யா மாறனின் வலியை உணர்ந்த அமிதாப் பச்சன் தனது ப்ளாகில், "ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்துவிட்டது. KKR மிகவும் உறுதியாக விளையாடி வெற்றியைப்பெற்றது. அதே சமயம், SRH மோசமாக விளையாடி ஆட்டமிழந்தது. கடந்த கால போட்டிகளில் மிகச்சிறந்த அணியாகவே SRH இருந்துவந்த நிலையில், இறுதிப்போட்டியில் இப்படி விளையாடியது ஏமாற்றம் அளித்தது.

நேற்றைய போட்டியில் என்னை மிகவும் பாதித்தது, SRH உரிமையாளர் ஸ்டேடியத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழுதது. இளம்பெண்ணான அவர் (காவ்யா மாறன்) ஸ்டேடியத்திலேயே உடைந்து அழுதுவிட்டார்.

அவர் அணி தோற்றதும், மனமுடைந்து அழுத அவர், தன் கண்ணீரை கேமராக்களுக்கு காட்டக்கூடாதென முகத்தைக்கூட திருப்பிக்கொண்டார். அதைக் கண்டு நான் மிகவும் வருந்தினேன். கவலைப்படாதீர்கள், நாளையும் மற்றுமொரு நாள்தான். தைரியமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும்கூட காவ்யா மாறன் தொடர்பான வீடியோக்களை ட்ரெண்ட் செய்து அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை மண்ணில் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com