”நாங்க வந்தாலே ஆல் அவுட்தான்” - சீசன் முழுவதும் அதிரடிக்கு ஆப்பு வைத்த KKR பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் கோப்பையை தனது வசம் ஆக்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித் தள்ளியுள்ளது.
kkr
kkrpt web

ஹைதராபாத்தின் பலவீனம்

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் கம்மின்ஸ். ஹைதராபாத் முதலில் பேட் செய்ய வருகிறது என்றாலே, கிரிக்கெட்டின் கடவுளுக்குகூட கொஞ்சம் நடுங்கத்தான் செய்யும். ஏனெனில், 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 287, 277 என ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்த அணி என்ற பெயரை பெற்றிருந்தது. அத்தனைக்கும் காரணம் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ஆனால் அந்த அணியில் இருந்த மிகப்பெரிய ஓட்டை மிடில் ஆர்டரில்.

ஐபிஎல்லின் பெரும்பாலான லீக் போட்டிகளில் அந்த பலவீனத்தை எதிரணி பயன்படுத்த முடியாத அளவிற்கே தொடக்க ஆட்டக்காரர்கள் ஆடினர். ஆனால், அவர்கள் விரைவில் வெளியேறும்போது சீட்டுக்கட்டுகளாய் சரிந்தது ஹைதராபாத் அணி. அதுமட்டும்தான் இறுதிப் போட்டியிலும் நடந்தது.

kkr
சீசன் முழுக்க 200+ ரன்னை அசால்ட்டா அடிச்ச அணியா இது! SRH-ஐ ஊதித்தள்ளி கோப்பையை தட்டித்தூக்கியது KKR!

எளிய இலக்கு எளிதில் சேஸ்

அபிஷேக் சர்மாவை போல்ட் ஆக்கி ஸ்டார்க் அதிர்ச்சி கொடுத்தார் என்றால், வைபர் அரோராவை எதிர்கொண்ட ஹெட் முதல் பந்திலேயே வெளியேறினார். பின் வந்த திரிப்பாதியும் ஸ்டார்க் பந்தில் நடையைக் கட்டினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கொத்துக் கொத்தாக விக்கெட்களை எடுத்தனர். ரஸல் 3 விக்கெட்கள், ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்கள், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, நரைன் தலா 1 விக்கெட் என அனைத்து பவுலர்களும் சேர்ந்து ஹைதராபாத்தை அட்டாக் செய்தனர். இதற்கு பின் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. ஹைதராபாத் அணி 113 ரன்னில் ஆல் அவுட் ஆக, நிர்ணயித்த 114 ரன்கள் இலக்கை 10.3 ஓவர்களிலேயே எட்டி கோப்பையை வென்றது கொல்கத்தா.

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை குவித்த ஒரு அணியாக கெத்தாக வலம் வந்த ஹைதராபாத், ஐபிஎல் பைனலில் குறைந்த ரன்களை அடித்த அணியாக மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு காரணம் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் மட்டும்தான். தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர் பேட்டர்கள். ஆனால் இறுதிப் போட்டியில் பந்துவீச்சாளர்களால் ஒரு போட்டி அமைந்துள்ளது.

ஆனால், இந்த போட்டியில் மட்டுமா கொல்கத்தா அணிக்கு பந்துவீச்சாளர்கள் வெற்றியைத் தேடி தந்தார்கள். போட்டிகளிலும் மறுக்க முடியாத அளவிற்கு தங்களது பங்களிப்பினை தந்துள்ளனர் கொல்கத்தா பவுலர்கள். நடப்பு தொடரில் எதிரணிகளை 6 முறை ஆல் அவுட் செய்து அசத்தியுள்ளனர். டெல்லி, பெங்களூரு, மும்பை, லக்னோ, ஹைதராபாத் (2) என அத்தனை பேரையும் ஆல் அவுட் ஆக்கியுள்ளனர். ஒருபக்கம், பேட் செய்து எதிரணியின் நம்பிக்கையை கொல்கத்தா பேட்டர்கள் சரிக்கின்றனர் என்றால், பந்துவீசும் போது எதிரணியை ஒட்டுமொத்தமாக சரிக்கின்றனர் பந்துவீச்சாளர்கள்.

kkr
ஒரே கல்லில் எத்தனை மாங்காய்? தோனி மற்றும் வார்னேவின் சாதனையை ஒரே போட்டியில் முறியடிப்பாரா கம்மின்ஸ்?

தூணாக நின்ற பந்துவீச்சாளர்கள்

அது எப்படி ஓர் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட் ரேசில் முன்னணியில் இருக்க முடியும். இருக்கிறார்களே. வருண் சக்கரவர்த்தி 21 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஹர்ஷித் ராணா, ரஸல் தலா 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். சுனில் நரேனும், மிட்செல் ஸ்டார்க்கும் தலா 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். வைபவ் அரோரா 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். வைபவ் அரோரா விளையாடியது 10 போட்டிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவை அத்தனைக்கும் காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் எனும் தலைவனின் அணுகுமுறை. கம்பீரின் கொண்டாட்டத்தில் மறக்கப்பட்டவர். தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அணியை வழிநடத்திய விதம், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது என அனைத்திலும் சிறப்பாகவே செயல்பட்டார் ஸ்ரேயாஸ். இதன் காரணமாகவே ஒரு தொடரின் இறுதியில் பேட் கம்மின்ஸை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். ஏனெனில் சாம்பியன்ஸ் ட்ராபி, ஒருநாள் உலகக்கோப்பை என அனைத்தையும் வென்று வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தார் கம்மின்ஸ். அவரை சைலண்ட் ஆக்கியுள்ளது பர்ப்ள் படை.

வலுவான வீரர்கள் அணிக்கு அமைந்தது, அவர்களை சரியாக பயன்படுத்தியது, வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது என சீசன் முழுவதும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது கொல்கத்தா அணிக்கு.

kkr
“இங்கே செய்யமுடியாததை டி20 உலகக்கோப்பையில் செய்யுங்கள்..”! சஞ்சு சாம்சனுக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com