அடேங்கப்பா!! ஒரே ஓவரில் 43 ரன்களா? 134வருட கவுன்ட்டி கிரிக்கெட் வரலாற்றில் இங். வீரர் அசத்தல் சாதனை!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆலி ராபின்சன் (Ollie Robinson) முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப்
கவுண்டி சாம்பியன்ஷிப்pt web

கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் sussex மற்றும் leicestershire அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், லெய்செஸ்டெர்ஷைர் அணியின் பேட்ஸ்மேன் லூயிஸ் கிம்பர், சஸ்சக்ஸ் அணியின் பந்துவீச்சாளரான ஆலி ராபின்சன் வீசிய ஒரு ஓவரில் 43 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.

ராபின்சன் தான் வீசிய ஓவரில், 3 பந்துகளை நோபாலாக வீசிய நிலையில், மொத்தமாக 9 பந்துகளை வீசினார். இதில் 2 சிக்சர்கள், 6பவுண்டரிகள் ஒரு சிங்கிள் என மொத்தமாக 43 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார் ராபின்சன்.

குறிப்பாக நோ பால் ஆக வீசப்பட்ட 3 பந்துகளிலும் பவுண்டரி விளாசினார் கிம்பர்.

NGMPC057
கவுண்டி சாம்பியன்ஷிப்
தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இன்னொரு ஷாக் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்; யார் வென்றாலும் அது புது வரலாறுதான்!

முதல்தர கிரிக்கெட்டில் இதுவே அதிக ரன்களைக் கொடுத்த ஓவராக இருக்கலாம் என கூறுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். அதேபோல் இங்கிலாந்தின் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கிம்பர்.

சர்ரே (Surrey) அணியின் அலெக்ஸ் டூடர் 1998 ஆம் ஆண்டு Lancashire அணிக்கு எதிரான போட்டியில், ஒரு ஓவரில் 38 ரன்களைக் கொடுத்ததே கவுண்டி கிரிக்கெட் தொடரில் அதிகபட்சமாக இருந்தது.

ஆனால் சில தினங்களுக்கு முன் இந்த மோசமான சாதனை சமன் செய்யப்பட்டது. Worcestershire அணிக்காக ஆடிய சோயிப் பாஷிரின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை அடித்து அசத்தி, 38 ரன்களை குவித்து பழைய சாதனையை சமன் செய்திருந்தார் சர்ரே அணியின் டேன் லாரன்ஸ்.

கவுண்டி சாம்பியன்ஷிப்
"லாராவின் நம்பிக்கையை பொய்யாக்கமாட்டோம் என்று கூறியிருந்தேன்" - ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com