
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் இளம் வீரரும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா, அதிரடி ஆட்டத்தில் மட்டுமின்றி உடலை கட்டுமஸ்த்தாக வைத்திருப்பதிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்திய அணியில் ஃபிட் ஆன வீரர்களில் கேப்டன் கோலிக்கு சவாலாக இருக்கும் ஒரு வீரர் என்றால் அது ஹர்திப் பாண்ட்யாதான். வேகமாக ஓடுவது, தூரமாக சிக்ஸர் விளாசுவது, சிக்ஸ் பேக் என உடற்கட்டில் அசத்துகிறார். இத்தகைய உடற்கட்டை அவர் எளிதில் பெற்றுவிடவில்லை. அதற்காக அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
வீடியோவை காண கிளிக் செய்யுங்கள் (https://www.instagram.com/p/B1Q5YTSF81V/?utm_source=ig_web_button_share_sheet)
இந்நிலையில் அவர் ஜிம்மில் காலுக்கு பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காலுக்கு சிரமப்பட்டு பயிற்சி எடுக்கும் ஹர்திக் பாண்ட்யா, ஒரு கட்டத்தில் பெண் பயிற்சியாளர் யாஸ்மின் கூறுவதையும் தாண்டி பயிற்சியை முடிக்கிறார். அத்துடன் மற்றொரு வீடியோவில் தனது சகோதரரும், இந்திய அணியின் வீரருமான குருனல் பாண்ட்யாவுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்.
ஹர்திக் பாண்ட்யா தனது உடற்கட்டை தக்க வைப்பதற்காக விழா நாட்கள் மற்றும் வாரக் கடைசியிலும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் ஓடும் போட்டியில், ஹர்திக் தோற்றது குறிப்பிடத்தக்கது.