\
யாருக்கு கோல்டன் பூட்? கோல்டன் பந்து? விருதுகள்
யாருக்கு கோல்டன் பூட்? கோல்டன் பந்து? விருதுகள்web

2026 FIFA உலகக்கோப்பை| யாருக்கு கோல்டன் பூட்? கோல்டன் பந்து? 3 விருதை அள்ளிய ஸ்பெயின்!

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான அர்ஜெண்டினாவை தோற்கடித்து 2வது முறையாக கோப்பை வென்றது ஸ்பெயின் அணி.
Published on
Summary

2026 உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் ஆனது. தொடருக்குப் பிறகு வழங்கப்பட்ட நான்கு முக்கிய விருதுகளில் மூன்றையும் ஸ்பெயின் கைப்பற்றியது. எம்பாப்பே 10 கோல்களுடன் தங்க காலணி வென்று, இரண்டு உலகக்கோப்பைகளில் தொடர்ச்சியாக இந்த விருதை பெற்ற முதல் வீரராக வரலாறு படைத்தார். மெஸ்ஸி இந்த முறை பட்டியலில் இடம் பெறவில்லை.

2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. 48 அணிகளுடன் தொடங்கிய இந்த பயணம், பல வரலாற்று போட்டிகளுடன் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு உலக சாம்பியனாக களம்கண்ட அர்ஜெண்டினா அணி, நடப்பு யூரோ சாம்பியனான ஸ்பெயினை எதிர்கொண்டு விளையாடியது. போட்டி நேரம் முழுவதும் இரண்டு அணிகளும் கோலடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தில் கோலடித்த ஸ்பெயின் அணி 1-0 என வென்று கோப்பையை தட்டிச்சென்றது.

2026 கால்பந்து உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின் அணி
2026 கால்பந்து உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின் அணிweb

இந்தசூழலில் தான் தொடர் முடிவுக்கு பிறகு தங்க காலணி, தங்க பந்து, தங்க கையுறை மற்றும் இளம் வீரருக்கான விருது என 4 விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் 4 மதிப்புமிக்க விருதுகளில் மூன்றை கோப்பை வென்ற ஸ்பெயின் அணியே தட்டிச்சென்றுள்ளது. இந்தப்பட்டியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் பெயர் கடைசிபோட்டியின் மோசமான ஓட்டத்திற்கு பின் இடம்பெறவில்லை.

யாருக்கு கோல்டன் பூட்? கோல்டன் பந்து? விருதுகள்
FIFA உலகக்கோப்பை | படுமோசமாக விளையாடிய அர்ஜென்டினா.. 16 ஆண்டுக்கு பின் கோப்பை வென்றது ஸ்பெயின்!

கோல்டன் பூட்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 10 கோல்களை அடித்த பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்பே தங்க காலணி விருதை தட்டிச்சென்றார். கடந்த 2022 உலகக்கோப்பையிலும் தங்க காலணி விருதை வென்றிருந்த இவர், வரலாற்றில் 2 முறை வென்ற முதல் வீரராக தடம்பதித்தார்.

யாருக்கு கோல்டன் பூட்? கோல்டன் பந்து? விருதுகள்
ஏலத்திற்கு வரும் 'Hand Of God' சர்ச்சை பந்து.. 77 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு!

கோல்டன் பால்

தொடரில் சிறந்து விளங்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதை மெஸ்ஸி வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி தட்டிச்சென்றுள்ளார். தொடர் முழுவதும் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்த ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டராக செயல்பட்ட ரோட்ரி எதிரணியிரனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அதிலும் பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 90 நிமிடங்கள் முழுவதும் களத்திலிருந்த அவர், ஸ்பெயின் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார்.

யாருக்கு கோல்டன் பூட்? கோல்டன் பந்து? விருதுகள்
அர்ஜென்டினாவிடம் இங்கிலாந்து தோல்வி.. பயிற்சியாளரை சாடிய டொனால்ட் டிரம்ப்!

கோல்டன் கிளவ்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி இறுதிப்போட்டியையும் சேர்த்து 7 ஆட்டங்களில் கோலையே விட்டுக்கொடுக்காமல் க்ளீன் ஷீட்டாக விளங்கியது. ஒரு உலகக்கோப்பை சீசனில் 5-க்கு மேற்பட்ட போட்டிகளில் ஒரு அணி க்ளீன் ஷீட்டை கொண்டிருப்பது இதுவெ முதல்முறை. அதை சாத்தியமாக்கிய ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் உனாய் சைமன் தங்க கையுறை விருதை வென்றார்.

இளம் வீரருக்கான விருது

ஸ்பெயின் 19 வயதான மையப் பாதுகாவலர் பாவ் குபார்சி, போட்டியின் சிறந்த இளம் வீரருக்கான விருதைப் பெற்றார்.

போட்டித்தொடர் முழுவதும் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்த ஸ்பானியப் பாதுகாப்பு அணியில் அவர் ஒரு முக்கியப் பங்கு வகித்தார். மேலும், இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை இலக்கை நோக்கி ஒன்றுகூட விடாமல் இரண்டே ஷாட்கள் மட்டுமே அடிக்க அனுமதித்தார்.

யாருக்கு கோல்டன் பூட்? கோல்டன் பந்து? விருதுகள்
‘கடவுளின் கை கோல் to மெஸ்ஸிக்கு முதல் போட்டி..’ இங்கிலாந்து-அர்ஜென்டினா மோதலின் 6 சிறப்பு அம்சங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com