\
argentina qualified quarterfinals after magic comeback against egypt
argentina qualified quarterfinals after magic comeback against egyptweb

2-0 என ஆட்டம் காட்டிய எகிப்து.. கடைசி 15 நிமிடத்தில் கம்பேக் கொடுத்த அர்ஜென்டினா! த்ரில் வெற்றி!

ரவுண்ட் 16 நாக் அவுட் சுற்றில் 78 நிமிடங்கள் வரை கோல் அடிக்காத மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, கடைசி 15 நிமிடத்தில் 3 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
Published on
Summary

2026 ஃபிபா உலகக்கோப்பை ரவுண்ட் 16ல் எகிப்து 67வது நிமிடத்துக்கு 2-0 முன்னிலையில் இருந்தும், கடைசி 15 நிமிடங்களில் அர்ஜென்டினா அதிரடி கம்பேக் காட்டி 3-2 என வெற்றி பறித்தது. ரொமரோ, மெஸ்ஸி மற்றும் கூடுதல் நேர கோலால் நடப்பு சாம்பியன் காலிறுதிக்கு முன்னேற, எகிப்தின் வரலாற்று வெற்றி கனவு நொறுங்கியது.

2026 ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்ற இத்தொடரானது எதிர்ப்பார்த்ததை விட அசத்தலாகவே நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் 32 அணிகள் தகுதிபெற்ற நிலையில், ரவுண்ட் 32-ல் சிறப்பாக செயல்பட்ட 16 அணிகள் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறின.

Neymar has announced his retirement from international football
Neymar Retiredsantos to neymar journey

இந்நிலையில் ரவுண்ட் 16 நாக் அவுட் சுற்று பரபரப்பாக நடந்துவந்த நிலையில், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரேசில் மற்றும் போர்ச்சுகல் அணிகள் படுதோல்வியை சந்தித்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. கடைசி உலகக்கோப்பையாக பார்க்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் நெய்மார் மற்றும் ரொனால்டோ இருவரும் கண்ணீருடன் விடைபெற்றனர்.

ronlado world cup run ended
ronlado world cup run endedlegendary player ronaldo

இந்தசூழலில் நேற்று நடைபெற்ற கடைசி ரவுண்ட் 16 சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி எகிப்தை எதிர்கொண்டு விளையாடியது.

argentina qualified quarterfinals after magic comeback against egypt
ஓய்வு பெற்ற கால்பந்து அசுரன்.. நெய்மார் ஜாம்பவான் ஆனது எப்படி? வாழ்வை மாற்றிய ஒரு தவறான முடிவு!!

நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் தொடக்கத்தில் 15வது நிமிடத்திலேயே கோலடித்த எகிப்து அணி அபாரமாக தொடங்கியது. எகிப்து 1-0 என லீட் எடுத்த நிலையில், தங்களுடைய முதல் கோலடிக்க முயன்ற அர்ஜெண்டினாவின் முயற்சிகளை எகிப்து தடுத்து நிறுத்தியது. அதிலும் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தபோதும், கேப்டன் மெஸ்ஸி அதனை கோட்டைவிட்டார்.

இந்தசூழலில் மீண்டும் 67வது நிமிடத்தில் எகிப்தின் மொஷ்டஃபோ 2வது கோலடிக்க மைதானமே கொண்டாட்டத்தில் மூழ்கியது. 78வது நிமிடங்கள் வரை அர்ஜெண்டினா தரப்பில் கோலடிக்கப்படாத நிலையில், இன்னும் 12 நிமிடங்கள் வெற்றிகரமாக கடந்தால் எகிப்து நடப்பு உலகசாம்பியனை தோற்கடித்து காலிறுதிக்குள் காலடிவைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் 79வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமரோ அற்புதமான ஹெட்டர் மூலம் கோலடிக்க 2-1 என அர்ஜெண்டினா அசத்தியது. தொடர்ந்து அடுத்த 4வது நிமிடத்தில் கேப்டன் மெஸ்ஸி ஒரு அசத்தலான கோலடிக்க 2-2 என தரமான கம்பேக் கொடுத்தது அர்ஜெண்டினா அணி. ஆட்டம் சமனில் முடிய கடைசி கோலை யார் அடிப்பார்கள் அல்லது ஷூட் அவுட் முறையில் வெற்றி நிர்ணயிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியது. ஆனால் கூடுதல் நேரல் 90+3வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்த அர்ஜெண்டினா அணி கடைசி நேர த்ரில்லரில் 3-2 என லீட் எடுத்து வெற்றியை எகிப்தின் கையிலிருந்து தட்டிப்பறித்தது. ஒரு வரலாற்று கம்பேக் கொடுத்த மெஸ்ஸியின் அர்ஜெண்டினா காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

மற்றொரு போட்டியில் கொலம்பியா-சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய நிலையில், ஆட்டம் சமன்செய்யப்பட்டு பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 கொல்மபியாவை தோற்கடித்து சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் அர்ஜெண்டினா-சுவிட்சர்லாந்து மோதவிருக்கின்றன.

argentina qualified quarterfinals after magic comeback against egypt
ஒரு சகாப்தத்தின் முடிவு.. முடிவுக்கு வந்த ரொனால்டோவின் பயணம்.. இறுதிவரை நிறைவேறாத கனவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com