\
siraj - ind vs nz
siraj - ind vs nzx

கம்பீரின் மோசமான முடிவு.. வெல்ல வேண்டிய போட்டியை நழுவவிட்ட இந்தியா.. ரசிகர்கள் வேதனை!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.
Published on: 
Summary

நியூசிலாந்து அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 352 ரன்கள் முன்னிலை பெற்றும் வெற்றியை கைப்பற்ற முடியவில்லை. முக்கிய பவுலர்களை தேர்வு செய்யாதது தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டினர். WTC புள்ளிப்பட்டியலில் முன்னேற வேண்டிய சூழலில் இந்திய அணியின் செயல்பாடு ரசிகர்களை வருத்தமளித்தது.

WTC பட்டியலில் நியூசிலாந்து அணி 2வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் நீடிப்பதால், இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் எண்ணத்தில் களம்கண்டது இந்திய அணி.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 70/5 என்ற கடினமான நிலயிலிருந்து கம்பேக் கொடுத்து முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் அடித்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தின் உதவியால் 720/9 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது.

இந்திய அணி 352 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 176-க்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. எப்படியும் இந்திய அணி நியூசிலாந்தை சுருட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் 43 ஓவர்கள் விக்கெட்டை இழக்காமல் பேட்டிங் செய்து போட்டியை டிராவிற்கு அழைத்துச்சென்றனர். 4வது இன்னிங்ஸில் சிறப்பாக வீசக்கூடிய பவுலர் இல்லாததால் இந்திய அணியால் வெற்றியை பெறமுடியவில்லை.

இந்நிலையில் ஆடும் லெவனில் சிராஜ் மற்றும் ஜடேஜா போன்ற கேம் சேஞ்சர் பவுலர்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர். WTC புள்ளிப்பட்டியலில் முன்னேறவேண்டியது அவசியம் என்ற சூழலில் இந்தியாவின் செயல்பாடு வருத்தமளிப்பதாகவும் ரசிகர்களை வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று தோற்பதே இதுவே முதல்முறை.

siraj - ind vs nz
அடித்து நொறுக்கப்பட்ட சிக்சர் மன்னன் சாதனை.. ரிஷப் பண்ட் தான் இனி டாப்!
siraj - ind vs nz
அனல்பறந்த களம்.. மோதிக்கொண்ட வீரர்கள்! பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா! திலக் வர்மாவை சாடும் ரசிகர்கள்!