யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மா
யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மாweb

‘IPL-க்காக அல்ல.. இந்தியாவிற்காக தான் உன்னை தயார்படுத்துகிறேன்’ - அபிஷேக் சர்மாவிடம் சொன்ன யுவராஜ்!

அபிஷேக் சர்மா போன்ற ஒரு வீரரை 4 ஆண்டுகள் தயார்படுத்தினால், அவரால் இந்தியாவிற்கான சிறந்த வீரராக மாறமுடியும் என்றுதான் தயார்ப்படுத்த முயற்சித்தேன் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
Published on
Summary

அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங் தலைமையில் பயிற்சி பெற்று, இந்தியாவுக்காக விளையாடும் திறமையை வளர்த்துள்ளார். யுவராஜ், ஐபிஎல்லுக்காக அல்ல, இந்தியாவுக்காக உன்னை தயார்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். அபிஷேக் சர்மாவின் அற்புதமான பேட் ஸ்விங் உலக கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்படுகிறது. நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கூட அவருக்கு எதிரான திட்டம் தெரியவில்லை என கூறியுள்ளார்.

உலகத்தரவரிசையில் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் 929 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் இந்தியாவின் இளம் வீரரான அபிஷேக் சர்மா. பவர்பிளேவிலேயே எதிரணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு அச்சுறுத்தும் வீரராக உருவெடுத்துள்ள அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங் தலைமையில் பயிற்சி பெற்று வருகிறார்.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாcricinfo
யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மா
நியூசிலாந்து உடன் தோல்வி| ’வேண்டுமென்றே தான் அப்படி விளையாடினோம்’ - சூர்யகுமார் பதில்

யுவராஜ் சிங்கிற்கு கீழ் பயிற்சி பெற்றுவரும் அபிஷேக் சர்மாவின் பேட் ஸ்விங் நம்பமுடியாத அளவிற்கு அற்புதமாக இருப்பதாக உலக கிரிக்கெட் வீரர்கள் பாராட்டிவருகின்றனர். நியூசிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூட அபிஷேக் சர்மாவிற்கு எதிராக எங்களுக்கு என்ன திட்டத்தை வகுப்பது என்று தெரியவில்லை என பேசியுள்ளார்.

இப்படி ஒரு அச்சுறுத்தும் வீரராக உருவாகியிருக்கும் அபிஷேக் சர்மாவின் பின்னால் இருக்கும் புராசஸ் குறித்து பேசியுள்ளார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மா
“வழி விடுங்க.. வழி விடுங்க.. சேட்டாவ டிஸ்டர்ப் பண்ணாதீங்க”- கேரளாவில் சஞ்சுவை கலாய்த்த சூர்யகுமார்!

ஐபிஎல்லுக்காக அல்ல இந்தியாவிற்காக..

சானியா மிர்சா உடனான சமீபத்திய உரையாடலில் அபிஷேக் சர்மா குறித்து பேசியிருக்கும் யுவராஜ் சிங், ”சுப்மன் கில் ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி, கடின உழைப்பாளி, சிறந்த பணி நெறிமுறைகள் கொண்டவர்.

ஆனால் அபிஷேக் சர்மா போன்ற ஒரு வீரரை அங்கு அழைத்துச் செல்ல அவரை தயார் படுத்தவேண்டும். நாங்கள் அவருக்காக 4 ஆண்டு திட்டத்தை வகுத்தோம், அவர் நான்கு ஆண்டுகளாக சில விஷயங்களைப் பின்பற்றினால், அவரது திறமை அவரை இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடும் நிலைக்கு அழைத்துச் செல்லும் என நம்பினோம்.

யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மா
”சொந்த மண்ணில் விளையாடினாலும்.. சஞ்சு சாம்சனை நீக்குங்க” - முன்னாள் வீரர் அதிரடி கருத்து

நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன், ஐபிஎல் விளையாட உங்களை ஊக்குவிக்க நான் இங்கு வரவில்லை. நீங்கள் நாட்டிற்காக விளையாட உதவவே நான் இங்கு இருக்கிறேன் என்று கூறினேன். அவர் நான் கேட்டதைச் சரியாகச் செய்தார். 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்குப் பிறகு, அவர் தற்போது இந்தியாவுக்காக விளையாடிவருகிறார்" என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மா
"மரியாதை கிடைக்கவில்லை.. ரசித்து விளையாட முடியவில்லை.."- ஓய்வு குறித்து மனம்திறந்த யுவராஜ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com