1983, 2007 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே
1983, 2007 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வேweb

1983, 2007 வரிசையில் 2026..? ஜிம்பாப்வே வென்றால் இந்தியாவிற்கு கோப்பையா..? ஆச்சரிய புள்ளி விவரம்!

எந்த உலகக்கோப்பை தொடரிலெல்லாம் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதோ அப்போதெல்லாம் இந்தியா கோப்பை வென்றுள்ளதாக இந்திய ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, 1983 மற்றும் 2007 உலகக்கோப்பை வெற்றிகளை நினைவூட்டுகிறது. ஜிம்பாப்வேவின் வெற்றியால் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும் என நெட்டிசன்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

உலகக்கோப்பை வரலாற்றில் கிரிக்கெட்டுக்கு புதியதாக களம்காணும் பல கத்துக்குட்டி அணிகள், பலம் வாய்ந்த பெரிய கிரிக்கெட் நாடுகளின் அணிகளுக்கு மறக்க முடியாத பல அதிர்ச்சிகரமான தோல்விகளை பரிசளித்துள்ளனர்.

1983 உலகக்கோப்பை
1983 உலகக்கோப்பை

அந்தவகையில், ‘1983-ல் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸை சாய்த்த இந்தியா, 1983-ல் ஆஸ்திரேலியாவை சாய்த்த ஜிம்பாப்வே, 1996-ல் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த கென்யா, 2007-ல் இந்தியாவை சாய்த்த வங்கதேசம் மற்றும் 2011-ல் இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து’ போன்ற வெற்றிகள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அப்செட்களாக பார்க்கப்படுகின்றன.

1996 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த கென்யா
1996 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த கென்யா

இந்தவரிசையில் 2026 டி20 உலகக்கோப்பையில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் ஜிம்பாப்வே அணி, மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியையும், டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய அப்செட்டையும் பதிவுசெய்துள்ளது.

1983, 2007 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே
பெரிய அப்செட்| ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே.. 19 ஆண்டுக்கு பின் வரலாற்று வெற்றி!

ஜிம்பாப்வே வென்றால் இந்தியாவிற்கு கோப்பையா..?

இன்று நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 169 ரன்கள் குவித்தது. எளிதாக வெற்றிபெற்றுவிடும் என நினைத்த ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேவின் முசரபானி மற்றும் எவன்ஸ் இருவரின் அசத்தலான பந்துவீச்சில் 146 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு ஜிம்பாப்வேவுக்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் ஆஸ்திரேலியாவிற்கான வாய்ப்பை ஜிம்பாப்வே தட்டிப்பறித்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் இலங்கையை வீழ்த்தினால் மட்டுமே ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தச்சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் லீக் சுற்றோடு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

2026 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே
2026 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே

1983 உலகக்கோப்பை

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, உலகக்கோப்பை வரலாற்றில் எப்போதெல்லாம் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளதோ அப்போதெல்லாம் இந்தியா உலகக்கோப்பை வென்றுள்ளதாக இந்திய ரசிகர்கள் ஒரு புள்ளி விவரத்தை பதிவிட்டுவருகின்றனர். அதன்படி 1983 உலகக்கோப்பையில் தங்களுடைய முதல் ஒருநாள் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வரலாற்றில் தடம்பதித்தது ஜிம்பாப்வே அணி.

1983 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை விழித்திய ஜிம்பாப்வே
1983 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை விழித்திய ஜிம்பாப்வே

சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிம்பாப்வேயின் முதல் அதிகாரப்பூர்வ ஒருநாள் சர்வதேசப் போட்டி 1983 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்தது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 239 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 226 ரன்கள் மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஜிம்பாப்வே ஒரு அனுபமற்ற வீரர்களை கொண்டு வரலாற்றை தலைகீழாக புரட்டி போட்டது.

1983 உலகக்கோப்பை
1983 உலகக்கோப்பை

அந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் எதிரணிகள் பயந்து நடுங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா முதல்முறையாக உலகக்கோப்பை வென்று சாதனை படைத்தது.

1983, 2007 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே
U19 உலகக்கோப்பை வென்ற தமிழக வீரர்கள்.. பரிசுத் தொகை வழங்கி TNCA கௌரவிப்பு!

2007 டி20 உலகக்கோப்பை

1983 உலகக்கோப்பையை தொடர்ந்து 2007 டி20 உலகக்கோப்பையிலும் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவிற்கு மிகப்பெரிய அப்செட்டை வழங்கியது. அதிலும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அந்த அணியில், மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ், சைமண்ட்ஸ், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹேட்டின், பிரட்லீ, மிட்செல் ஜான்சன் என ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் அனைவரும் இடம்பெற்றிருந்தனர். அப்பேற்பட்ட அணியை 138 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது ஜிம்பாப்வே அணி.

2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே
2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்திய 2007 டி20 உலகக்கோப்பையிலும் இறுதிப்போட்டியில் வென்று முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.

இந்தசூழலில் 1983 உலகக்கோப்பை, 2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தியது நடந்தது போன்றே 2026 டி20 உலகக்கோப்பையிலும் நடந்துள்ளதால், இந்த உலகக்கோப்பையையும் இந்தியாவே வெல்லும் என நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி

கடந்த 3 ஆண்டுகளில் 61 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி 53 வெற்றிகள், 8 தோல்விகளுடன் வலிமையான அணியாக 2026 டி20 உலகக்கோப்பையில் களம்கண்டுள்ளது. அனைத்து அணிகளை விடவும் இந்தியாவிற்கே 2026 டி20 உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருப்பதும் அதற்கான அறிகுறியாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

1983, 2007 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே
இந்திய வீரர்கள் BAT-ல் ரப்பர் பகுதி..? "நான் அப்படி பேசவில்லை.." இலங்கை வீரர் விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com