2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வேweb

பெரிய அப்செட்| ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே.. 19 ஆண்டுக்கு பின் வரலாற்று வெற்றி!

2026 டி20 உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாறு படைத்தது.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. பிரையன் பென்னட், மருமனி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோரின் சிறப்பான பேட்டிங் மற்றும் முசரபானி, எவன்ஸ் ஆகியோரின் தரமான பந்துவீச்சு ஆஸ்திரேலியாவை திணறடித்தது. 19 ஆண்டுகளுக்கு பின் ஜிம்பாப்வே மீண்டும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடியது ஜிம்பாப்வே அணி.

2026 டி20 உலக்க்கோப்பை ஆஸ்திரேலியா அணி
2026 டி20 உலக்க்கோப்பை ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு காயம் ஏற்பட்டதால் அணியை டிராவிஸ் ஹெட் வழிநடத்துகிறார். முதல் போட்டியில் நாதன் எல்லிஸின் அபாரமான பந்துவீச்சால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே எதிர்த்து களம்கண்டது.

2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
35,000 பேர் மட்டும்தான்.. நிபந்தனைகளுடன் சின்னசாமி மைதானத்திற்கு அனுமதி வழங்கிய அரசு!

ஜிம்பாப்வேவிடம் வீழ்ந்த ஆஸ்திரேலியா..

ஆஸ்திரேலியாவை போலவே முதல் போட்டியில் ஓமனை வீழ்த்திவிட்டு வெற்றியுடன் இரண்டாவது போட்டியில் களம்கண்டது ஜிம்பாப்வே அணி. கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 169 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய பிரையன் பென்னட் ஒருபுறம் நிலைத்து நின்று 64 ரன்கள் குவிக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய மருமனி மற்றும் கேப்டன் சிக்கந்தர் ராசா இருவரும் அணியை நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றனர்.

பென்னட்
பென்னட்

170 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முசரபானி மற்றும் எவன்ஸ் இருவரும் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். முசரபானி ஜோஷ் இங்கிலீஸை 8 ரன்னிலும், டிம் டேவிட்டை 0 ரன்னிலும் அவுட்டாக்க, மறுமுனையில் கேப்டன் டிராவிஸ் ஹெட்டை 17 ரன்னில் போல்டாக்கிய எவன்ஸ், காம்ரூன் கிரீனையும் 0 ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார்.

2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
IND - NAM போட்டி | அருண் ஜெட்லி மைதானத்தில் அதிர்ச்சி.. பார்த்ததும் பதறிய ரசிகர்கள்!

அடுத்துவந்த மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் தனியோரு ஆளாக 44 பந்தில் 65 ரன்கள் அடித்து ரென்சா போராடினார். ஆனால் டெத் ஓவரில் சிறப்பாக வீசிய முசரபானி ரென்சாவையும் வெளியேற்ற 23 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது ஜிம்பாப்வே.

2026 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே
2026 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே

19 ஆண்டுகளுக்கு முன்பு 2007 டி20 உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை தோற்கடித்த ஜிம்பாப்வே, மீண்டும் ஒருமுறை 2026 டி20 உலகக்கோப்பையிலும் தோற்கடித்து சம்பவம் செய்தது. 2 போட்டிகளில் 2-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே, அடுத்த போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தினால் சூப்பர் 8 செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடமிருந்து தட்டிப்பறிக்கும் வாய்ப்பு உள்ளது.

2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
டி20 உலகக்கோப்பை| பறந்த 13 சிக்சர்கள்.. இங்கிலாந்தை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com