What sanctions could ICC impose on Pakistan boycott vs india
pcb, iccx page

T20 WC | இந்திய போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்.. ICC எத்தகைய தடைகளை விதிக்கும்?

பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Published on

பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் புறக்கணிப்பிற்கான காரணங்களைக் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையோ அல்லது தடைகளையோ பிசிபி தனது நிலைப்பாட்டை ஐசிசிக்கு முறையாகத் தெரிவித்த பின்னரே பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி சமீபத்தில், வங்கதேச அணியும் இந்தியாவுக்கு வர மறுத்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), வங்கதேச அணியை டி 20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து நீக்கி அதற்கு பதிலாக, ஸ்காட்லாந்து அணியை சேர்த்தது. இதன் காரணமாக, வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியும் டி20 தொடரில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

What sanctions could ICC impose on Pakistan boycott vs india
pcbx page

ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் புறக்கணிப்பிற்கான காரணங்களைக் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையோ அல்லது தடைகளையோ பிசிபி தனது நிலைப்பாட்டை ஐசிசிக்கு முறையாகத் தெரிவித்த பின்னரே பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

What sanctions could ICC impose on Pakistan boycott vs india
இந்தியாவுக்கு எதிரான போட்டி புறக்கணிப்பு.. பாகிஸ்தான் நிலைபாடு குறித்து ஐசிசி அதிருப்தி!

ஒருவேளை, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கவில்லை என்றால், ஐ.சி.சி விதிகளின்படி அந்த அணி எத்தகையை தடைகளைப் பெறும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைகள் மற்றும் அபராதங்களை விதிக்கக்கூடும்.

  • அந்தப் போட்டி தோல்வியாகக் கருதப்படும்.

  • தானாகவே இரண்டு புள்ளிகளை இழக்கும்.

  • நிகர ரன் விகிதத்தில் எதிர்மறையான தாக்கத்திற்கு வழிவகுக்கும்.

  • தவறவிட்ட அணியின் முழு ஓவர்களும் அவர்களுக்கு எதிராகக் கணக்கிடப்படும்.

What sanctions could ICC impose on Pakistan boycott vs india
iccpt desk
  • எதிரணியின் நிகர ரன் விகிதம் பாதிக்கப்படாமல் இருக்கும்.

  • ஐசிசியின் ஆண்டு வருவாயில், பிசிபியின் பங்கான சுமார் $34.5 மில்லியன் நிறுத்தி வைக்கப்படும்.

  • பாகிஸ்தான் ஐ.சி.சி போட்டிகளை நடத்தும் உரிமையையும் இழக்க நேரிடும்.

  • வெளிநாட்டு வீரர்கள் பிஎஸ்எல்லில் பங்கேற்க என்ஓசி பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்; இதன் விளைவாக பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

What sanctions could ICC impose on Pakistan boycott vs india
டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசம் நீக்கம்.. ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஸ்காட்லாந்து சேர்ப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com