2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கியது ஐசிசி
2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கியது ஐசிசிweb

டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசம் நீக்கம்.. ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஸ்காட்லாந்து சேர்ப்பு!

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஐசிசி.
Published on
Summary

வங்கதேசம் டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கி, ஸ்காட்லாந்து அணியை சேர்த்து ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லை என ஐசிசி அறிவித்தபோதும், வங்கதேசம் இந்தியாவில் விளையாட மறுத்தது. இதனால், வங்கதேசத்தின் இடத்தை ஸ்காட்லாந்து நிரப்ப உள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வங்கதேச வீரரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கி அறிவித்தது பிசிசிஐ மற்றும் கேகேஆர் அணி.

இந்தியாவிற்கு வங்கதேச அணி வராது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்தியாவிற்கு வங்கதேச அணி வராது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்புweb

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் கே.கே.ஆர். அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்ய மாட்டோம் என்றும், தங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக இருந்தது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கியது ஐசிசி
”அடிமைக்காலம் முடிந்துவிட்டது..” இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் வேண்டாம்.. வங்கதேசம் விலக முடிவு!

இதுகுறித்து விவாதிக்க ஐசிசி குழு வங்கதேசத்திற்குச் சென்றது. அதன்பிறகு, உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விரைவான முடிவை எடுக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கேட்டுக் கொண்டது. ஆனால் வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்ததால், இந்தியாவில் பாதுகாப்பு பிரன்சைகள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டிய ஐசிசி, 24 மணிநேரத்தில் முடிவெடுக்கவில்லை என்றால் டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு பதிலாக மாற்று அணி களமிறக்கப்படும் எனவும் தெரிவித்தது.

ஆனால் தொடர்ந்து வங்கதேச அணி ஐசிசியின் கோரிக்கையை நிராகரித்து தங்களுடைய முடிவில் தீர்க்கமாக இருந்தநிலையில், தற்போது வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐசிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கதேச அணியின் பாதுகாப்பு கவலைகளை கருத்தில்கொண்டு மதிப்பாய்வு செய்யப்பட்டது. மேலும் பல கட்டங்களாக வீடியோ கால் மற்றும் நேரிலும் ஆலோசனைக்கூட்டங்களை ஐசிசி நடத்தியது. இந்தியாவில் பாதுகாப்பு பிரச்னைகள் இல்லை என அறிவுறுத்தியபோதும் வங்கதேசம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

மேலும் குரூப் சி-யில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் இருந்த வங்கதேசத்தின் இடத்தைப் ஸ்காட்லாந்து நிரப்ப உள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கியது ஐசிசி
இந்தியாவிற்கு வங்கதேச அணி வராது.. ஐசிசி-க்கு வங்கதேச வாரியம் கடிதம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com